பலநாள் கனவு நிறைவேறிவிட்டது..மணிமேகலை உருக்கம்.. குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: ஒரு வழியா தன்னுடைய ஆசை நிறைவேறிவிட்டது என்று காதல் கணவருடன் புகைப்படம் எடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் மணிமேகலை.
தான் உழைத்த பணத்தில் குண்டுமணி வாங்கினாலே சந்தோசம் தான் அதுவும் இப்போது பிஎம்டபிள்யூ கார் வாங்கி இருப்பதால் சந்தோசத்தின் உச்சத்தில் மணிமேகலை வலம் வந்து கொண்டிருக்கிறார்.
விஜய் டிவி பிரபலங்கள் பலரும் தொடர்ந்து பிஎம்டபிள்யூ கார் மீது மோகம் கொண்டு இருப்பதை பார்த்ததும் இதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்று நெட்டிசன்கள் ஆராய ஆரம்பித்து விட்டனர்.

பேச்சில் காமெடி அனல் பறக்குது
தன்னுடைய படபடப்பான பேச்சாலும் காமெடி தனத்தாலும் ரசிகர்களின் மனதில் தனி இடத்தில் வலம் வந்து கொண்டிருக்கும் மணிமேகலை டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி கொண்டிருந்தால் அந்த நிகழ்ச்சி போரடிக்காமல் விறுவிறுப்பாக வே சென்று கொண்டிருக்கிறது என்று ரசிகர்கள் ஃபீல் பண்ணி கொண்டிருக்கின்றனர். இவருடைய துறுதுறுப்பான காமெடி பேச்சுக்களை பார்த்து பலர் ரசிகர்களாக இருந்தாலும் டைமிங் காமெடியில் இவரை அடிச்சிக்கவே முடியாது. அதுவும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவருக்கு பெரிய பேரும் புகழும் கிடைத்துவிட்டது.
அந்த நிகழ்ச்சி முடிவடைந்த பிறகும் அது போன்ற நிகழ்ச்சியில் இவர் வந்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ரசிகர்களின் மனதில் தனி இடம்
தொகுப்பாளர்களாக பல பேர் பல காலமாக இருந்து கொண்டிருக்கின்றனர். அவர்களில் புதிதாகவும் ஒரு சிலர் களமிறங்கி கொண்டிருந்தாலும், குறிப்பிட்டு ஒரு சிலர் மட்டும்தான் ரசிகர்களின் மனதில் பசைபோல ஒட்டிக் கொண்டு விடுகின்றனர். அதில் மணிமேகலையும் ஒருவர். இவர் கண்ட கன்டஸ்டன்ட்களை கலாய்த்து அந்த நிகழ்ச்சியை விறுவிறுப்பு கூட்டிக் கொண்டு இருக்கும் போது கன்டஸ்டன்ட்களும் இவரைப் பங்கமாக கலாய்த்து காலி செய்து விடுகிறார்கள். இதுவும் நிகழ்ச்சிக்கு மேலும் சுவாரசியத்தை கூட்டிவிடுகிறது. அதுவும் குழந்தைத்தனமாக இவர் செய்யும் சேட்டைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.

கணவர் மீது குறையாத காதல்
இவர் என்னதான் சூட்டிங்கில் பிஸியாக இருந்தாலும் அடிக்கடி தனது காதல் கணவருடன் ரீல்ஸ் வீடியோக்களையும் போட்டோஷூட் களையும் எடுத்துக் கொண்டிருக்கிறார். இதனாலேயே இவர் சமூக வலைத்தளத்திலும் செம ஆக்டிவாக இருந்து வருகிறார். இவருக்கும் இவருடைய கணவருக்கும் அதிகமான பாலோவர்ஸ்களும் வந்துவிட்டனர். சொந்தமாக யூடியூப் சேனல் வைத்து அதிலும் தன்னுடைய காமெடியான ரணங்களங்களை அம்பலப்படுத்தி கொண்டிருக்கிறார். இதனை பார்த்து ரசிக்கும் ரசிகர்கள் ஒருபுறம், கலாய்க்கும் நெட்டிசன்கள் ஒருபுறம் என்று இவருடைய யூடியூப் சேனலும் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது.

பல நாள் கனவு நிறைவேறியது
லாக்டோன் நேரத்தில் இவர் கிராமத்துக்கு சென்று அங்கு செய்த அலப்பறை களையெல்லாம் யூடியூப் சேனலில் போட்டு வேற லெவலில் வைரல் ஆகி விட்டார். தற்போது சூட்டிங்கில் மீண்டும் பிஸியாக இருந்தாலும் பல நாள் கனவை நிறைவேற்றி இருக்கிறார். விஜய் டிவியில் பலர் தொடர்ந்து பிஎம்டபிள்யூ கார் வாங்கிக் கொண்டிருக்கும் நிலையில் நானும் அதற்கு சளைத்தவரல்ல என்று இவரும் இவரது கணவரும் ஜோடியாக இந்த காரை வாங்கி இருக்கின்றனர். இந்த செய்தி தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஏற்கனவே முதல்முறையாக சின்னத்திரையிலிருந்து ஷிவானி பிஎம்டபிள்யூ கார் வாங்கியிருந்தார். அவரை தொடர்ந்து தாடி பாலாஜி. தற்போது இவரும் அதில் என்ட்ரி போட்டு விட்டார். இவருடைய கனவு நிறைவேறியதற்கு ரசிகர்கள் வாழ்த்து மழைகளை பொழிகிறார்கள்.












Click it and Unblock the Notifications