பாரதி கண்ணம்மா சீரியலில் இப்படி ஒரு திருப்பம் வர காரணம் இதுதான்! இனி நடக்கப்போவதை உளறிய இயக்குனர்
சென்னை: பாரதி கண்ணம்மா சீரியலில் dna டெஸ்ட் முடிவுக்கு பிறகு கதை திருப்பம் மாற்றமடைந்ததற்கு காரணத்தை இயக்குனர் பிரவீன் பென்னட் கூறியிருக்கிறார்.
ரசிகர்கள் சீரியல் முடிவடைந்து விடும் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் எதிர்பாராத திருப்பம் நடைபெற்ற காரணத்தை பற்றி பாரதி கண்ணம்மா சீரியலில் இயக்குனர் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
பாரதி கண்ணம்மா சீரியலில் இனி வரப்போகும் கதை பற்றி தகவல்களை இயக்குனர் கூறி இருக்கிறார்.

பிரபலமாக காரணம்
பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது ஆயிரம் எபிசோடுகளை தாண்டி இருக்கிறது. இந்த நேரத்தில் இந்த சீரியல் ஆரம்பமான புதியதில் இருந்து இப்ப வரைக்கும் அதிகமாக நெகட்டிவ் கருத்துக்களை பெற்றிருந்தது. சீரியல் ரசிகர்களை தாண்டி நெட்டிசன்கள் அதிகமாக கலாய்த்ததால் இந்த சீரியல் அதிகளவில் வெளியே தெரிய ஆரம்பித்தது. அதுவும் கண்ணம்மா கர்ப்பமாக இருந்த நேரத்தில் வீட்டை விட்டு வெளியேறும் போது வெளியான மீம்ஸ்கள் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் தான் இருந்தது. அதனாலே சீரியலுக்கு அதிகமான ரசிகர்களும் பெருகி விட்டனர். அதன் பிறகு இந்த சீரியல் டிஆர்பி யில் விஜய் டிவியில் டாப் முதல் இடத்தில் இருந்து வருகிறது.

முடியாத தொடர்கதை
பல வருடங்களாகவே ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த பாரதியின் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் இப்போதுதான் எடுக்கப்பட்டு இருக்கிறது. பாரதியோட டெஸ்ட் ரிசல்ட் வெளியே வந்ததும் இந்த சீரியல் முடிவடைந்து விடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் கண்ணம்மா இனி நான் பாரதியோடு சேர்ந்து வாழ மாட்டேன் என்கிற ஒரு புது முடிவை எடுத்து மீண்டும் வீட்டை விட்டு கிளம்பி இருக்கிறார். இந்த திருப்பம் வருவதற்கான காரணத்தை பற்றி தற்போது அந்த சீரியலில் இயக்குனர் சமீபத்தில் பேசி இருக்கிறார். இதைப் பற்றி ரசிகர்கள் பலர் பகிர்ந்து கருத்து கூறி வருகின்றனர்.

ரசிகர்களிடம் கருத்துக்கணிப்பு
பாரதி கண்ணம்மா முதல் பாகம் முடிவடைய போகிறது என தகவல்கள் வெளியானதும் இந்த சீரியலில் கடைசி முடிவு என்ன என்பது பற்றி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. அந்த நேரத்தில் டிஎன்ஏ டெஸ்ட் முடிவு வெளியானதும் ரசிகர்கள் இந்த சீரியலை அதிகமாக மிஸ் பண்ணுவதாகவும் அதே நேரத்தில் இத்தனை வருடங்களாக பாரதியால் கண்ணம்மா எவ்வளவோ கஷ்டங்களை தாண்டி வந்து இருக்கும் நிலையில் பாரதி மனமாறி வந்ததும் கண்ணம்மா ஏற்றுக்கொண்டால் சரி இல்லை என்று பலர் கருத்து தெரிவித்து வந்தார்களாம். ரசிகர்களிடம் தனியாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் முடிவில் ரசிகர்கள் 90 சதவீதம் பேர் பாரதியை கண்ணம்மா உடனே ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று கருத்து தெரிவித்தார்களாம். அதன் அடிப்படையில் தான் கண்ணம்மா மீண்டும் வீட்டை விட்டு கிளம்ப வைத்திருக்கிறார்களாம்.

இனி வரும் பிரச்சனைகள்
தற்போது கண்ணம்மாவை மனதை மாற்றுவதற்காக பாரதி உண்ணாவிரதம் இருந்து கண்ணம்மாவில் ஊருக்கு மருத்துவமனை வர செய்து இருக்கிறார். இந்த மாதிரி பல போராட்டங்களை செய்துதான் கண்ணம்மா மனது மாற வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். அதுபோலத்தான் நடந்து கொண்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார் .அதே நேரத்தில் சீரியலில் கண்ணம்மா பாரதியிடம் விவாகரத்து நோட்டீஸ் கொடுத்து இருக்கிறார். இதுவரைக்கும் கண்ணம்மாவின் ஊர்காரர்கள் பாரதியை ஊரை விட்டு ஒதுக்கியிருந்த நிலையில் தற்போது பாரதியை ஏற்றுக்கொண்ட நிலையில் கண்ணம்மா எடுத்து இருக்கும் புது முடிவால் இனி அடுத்தடுத்த பல பிரச்சனைகள் வர இருக்கிறது என்று இயக்குனர் பென்னட் தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications