"அந்தப் பாவம்” தான் பழி வாங்குதா? பல போராட்டத்திற்கு பிறகு, மீண்ட "வாணி ராணி” வேணு அரவிந்த் உருக்கம்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான வாணி ராணி சீரியலில் நடித்த வேணு அரவிந்த் பல மாத மருத்துவ போராட்டத்திற்குப் பிறகு தற்போது முதல் முறையாக தன்னுடைய நிலைமையை குறித்து பேசி இருக்கிறார்.
கோமாவில் இருக்கிறார் என்று வதந்தி பரவி வந்த நிலையில் தற்போது தான் நலமாக இருக்கிறேன் ஆனாலும் தன்னுடைய நிலைமைக்கு காரணம் இதுவாகத்தான் இருக்கும் என்று பல உண்மைகளை வேணு அரவிந்த் உருக்கமாக பேசி இருக்கிறார்.

வாணி ராணி வேணு
சன் டிவியில் ஒளிபரப்பான செல்வி, வாணி ராணி, சந்திரகுமாரி ஆகிய சீரியல்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமான வேணு அரவிந்த் ஒரு சில மாதங்களுக்கு கோமா நிலையில் இருப்பதாகவும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் தற்போது தன்னுடைய நிலை குறித்து அவரே பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். அந்த வீடியோவை பகிர்ந்து அவருடைய ரசிகர்கள் பலர் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். பாலச்சந்தர் இயக்கிய காதல் பகடை, காசளவு நேசம், காதல் வாங்கி வந்தேன் போன்ற பல சீரியல்களில் வேணு அரவிந்த் நடித்திருக்கிறார்.

மருத்துவமனையில் அனுமதி
சீரியலில் மட்டுமல்லாமல் அலைபாயுதே, வல்லவன் போன்ற ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் சபாஷ் சரியான போட்டி என்ற திரைப்படத்தையும் இயக்கியிருக்கிறார். இந்த நிலையில்தான் இவருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் ஆகியிருக்கிறது. இவர் குணமடைந்த சில நாட்களில் இவருக்கு நிமோனியா வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த நேரத்தில் இவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இவருக்கு மூளையில் கட்டி இருப்பதையும் கண்டறிந்து இருக்கின்றனர் .உடனே அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கட்டி அகற்றி உள்ளனர். இந்த நிலையில் தான் வேணு திடீரென கோமாவில் இருக்கிறார் என்று பலரும் வதந்திகளை பரப்பி வந்தனர். இது சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

நலமாக இருக்கிறார்
இதை குறித்து வாணி ராணி சீரியலில் வேணு உடன் நடித்த ராதிகா சரத்குமாரும் தற்போது அவர் ICU வில் தான் இருக்கிறார். ஆனால் கோமாவில் இல்லை. அவர் நலமுடன் வீடு திரும்புவார். அதுவரை எந்த ஒரு வதந்தியும் பரப்பாதீர்கள் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் ஒரு சில மாதங்கள் கழித்து தற்போது பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில் அவரும் அவருடைய மனைவியும் கலந்து கொண்டிருக்கின்றனர். அந்த வீடியோவில், கடந்தவை, கடந்தவை ஆகவே இருக்கட்டும் நான் இப்போது உயிரோடு இருக்கிறேன். இனிமேல் என்ன நடக்கிற போகிறது என்பதை மட்டும் பார்க்கலாம். மேலும் எனக்கு பெரியதாக ஒன்றும் நடக்கவில்லை. எனக்கு தலையில் ஒரு சிறிய கட்டி இருந்தது .அதை நீக்கி விட்டார்கள் இப்போது நான் முழுவதும் நலமாக இருக்கிறேன். மருத்துவர்கள் எனக்கு தொடர்ந்து சிகிச்சைகள் அளித்து வருகிறார்கள் என்றும் கூறி இருக்கிறார்.

வில்லத்தனத்தால் வந்த வினை
அதுமட்டுமல்லாமல் நான் வில்லனாக நடித்து பலரின் வாயில் விழுந்த பாவம் தான் எனக்கு இதெல்லாம் நடந்திருக்கிறது என்று கூட தோன்றுகிறது. நான் சீரியலில் வில்லனாக நடிக்கும் போது பலர் வெளியே போகும்போது என்னை முகத்துக்கு நேராகவே திட்டி இருக்கிறார்கள். அப்போதெல்லாம் அது என்னுடைய நடிப்பிற்கு கிடைத்த வெகுமதி என்று நினைத்திருந்தேன். ஆனால் பலர் எனக்கு விட்ட சாபத்தால் தான் எனக்கு இப்படி ஆகிவிட்டதோ என்று கூட பலமுறை நான் நொந்து இருக்கிறேன் என்றும் நான் அப்போவே வில்லனாக நடித்ததை தான் இப்போது பலரும் செய்து கொண்டிருக்கின்றனர். அதை நினைத்து எனக்கே வருத்தமாக இருக்கிறது. நான் அப்படி மட்டும் அப்போ நடிக்கவில்லை என்றால் அதைப் பார்த்த பலரும் அதே வழியை தேர்ந்தெடுத்திருக்க மாட்டார்கள். இதனால் இனி நான் வில்லனாக நடிக்கவே விரும்பவில்லை என்றும் கூறியிருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலர் வேணு அரவிந்த் விரைவில் முழுவதுமாக நலமடைந்து மீண்டும் நடிக்க வர வேண்டும் என்று தங்களது விருப்பங்களை தெரிவித்து வருகிறார்கள்.
-
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
கருப்பு படத்தில் ஆர்ஜே பாலாஜி ஸ்கேம் பண்ணிட்டாரா? "இந்த” சீரியலின் 30 நிமிட கதை தான் முழு படமா? ரசிகர்கள் ட்ரோல் -
‘கருப்பு ஸ்டார்’ பட்டம் கொடுத்த ரசிகர்... உடனே திரிஷா கொடுத்த பதில்... இவ்வளவு இறங்கி பேசிட்டாரே! -
நயன்தாரா என்னை மாதிரி கஷ்டப்பட்டவங்க.. விக்னேஷ் சிவன் பழசை மறந்துட்டாரு! ஓபனாக பேசிய நடிகை சோனா -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
பிரபுவின் ‘டூயட்’ நாயகி மீண்டும் வருகிறார்... 30 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரி! எந்த ஹீரோவுடன் கம்பேக்? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம்












Click it and Unblock the Notifications