சுந்தரி சீரியல் கதாநாயகிக்கும் பாரதிகண்ணம்மா கதாநாயகிக்கும் இப்படி ஒரு உறவா? அவர்களே கூறிய தகவல்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியல் கதாநாயகி கேப்ரெல்லா செல்லஸ் விஜய் டிவி கதாநாயகியுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலின் கதாநாயகி வினுஷா தேவி என்னுடைய தங்கை என கேப்ரெல்லா கூறி இருக்கிறார்.
நடிகை வினுஷா தேவியும் கேப்ரெல்லாவை பற்றி நெகிழ்ச்சியான கருத்தை கூறியிருக்கிறார்.

ரசிக்கும் திறமை
சீரியலாக இருந்தாலும் சரி சினிமாவாக இருந்தாலும் சரி அழகாக இருந்தால்தான் அதற்கு மதிப்பு என்று சிலர் நினைத்துக் கொண்டிருப்பதை பொய் என்று நிரூபிக்கும் விதமாக ஒரு சில நடிகைகள் தான் தங்களுடைய திறமையை நிரூபித்து வருகிறார்கள். அந்த வரிசையில் உள்ளவர்கள் தான் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் கதாநாயகி மற்றும் பாரதிகண்ணம்மா சீரியல் கதாநாயகி வினுஷா தேவியும் இவர்கள் இருவரும் சீரியலில் மூலமாக ரசிகர்களை அதிகமாக கவர்ந்திருக்கின்றனர். கலராகவும் அதிகமான மேக்கப் போட்டு வந்தால் தான் ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள் ரசிப்பார்கள் என்பதை புறம் தள்ளிய இவர்கள் இருவருக்கும் அதிகமான ரசிகர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

கருப்பு தேவதைகள்
அந்த வகையில் இரண்டு நடிகைகளுமே கருப்பு தேவதைகள் தான் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பலர் கலராக இருக்க வேண்டும் என்பதற்காக கண்ட கண்ட க்ரீம்களை தேடி ஓடிக் கொண்டிருக்கும் நேரத்தில், கருப்பாக இருந்தாலும் திறமை இருந்தால் முன்னுக்கு வந்துவிடலாம் என்று நிரூபிக்கும் விதமாக இவர்கள் இருவரும் சீரியலில் மூலமாக நாளுக்கு நாள் ரசிகர்களின் மத்தியில் தங்களுடைய திறமையை காட்டி வருகின்றனர். சுந்தரி சீரியல் கதாநாயகி கேப்ரெல்லா ஏற்கனவே சமூக வலைத்தளத்தில் பலருக்கும் பரீட்சயமானவர் தான். இவருடைய
உணர்ச்சிமிக்க கடிதங்கள், டிக் டாக் வீடியோக்கள் ரசிகர்களின் மத்தியில் ஆரம்பத்திலே பிரபலமானது தான்.

அழுவதை நிறுத்திக்கலாம்
திரைப்படங்களில் தன்னுடைய நீ திறமையை நிரூபிக்க வேண்டும் என்று வீட்டை விட்டு வெளியே வந்த கேப்ரெல்லா கிடைத்த வாய்ப்பை விட்டு விடாமல் சமூக வலைத்தளத்தின் மூலமாக ரசிகர்களிடம் நேரடியாகவே பழகி வந்தார். இந்த நிலையில் தான் இவருக்கு சுந்தரி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு இப்போது சன் டிவி ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வரும் இவருக்கு ஒரு சில நாட்களாகவே நெகட்டிவ் கருத்துகளும் வந்த வண்ணமாக இருக்கிறது. காரணம் சீரியலில் இவருடைய கேரக்டர் போல்டாக ஆரம்பத்தில் முடிவெடுத்து பெண்களுக்கு உதாரணமாக இருந்த நிலையில் தற்போது எதற்கெடுத்தாலும் அழுது கொண்டிருக்கிறார் என்று சிலர் அதில் பகிர்ந்து வருகின்றனர்.

பாசமிகு சகோதரிகள்
இந்த நிலையில் தற்போது கேப்ரெல்லா தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் கண்ணம்மாவாக நடிக்கும் வினிஷா தேவியோடு புகைப்படத்தை எடுத்து அதை பகிர்ந்து இருக்கிறார். அதில் ஹலோ கண்ணம்மா என்றென்றும் என்னுடைய தங்கச்சி என்று பதிவிட, அதற்கு வினுஷா தேவி வணக்கம் சுந்தரி அக்கா என்று கருத்து பதிவிட இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இவர்கள் இருவரும் ஏற்கனவே தெரிந்தவர்கள் தானா? இருவருக்கும் உண்மையிலே அக்கா தங்கச்சி உறவு தானா? என்று கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கும் நிலையில் இவர்கள் இருவருமே நடிப்புத் துறைக்கு வந்து சகோதரிகளாக மாறிவிட்டனர் என்று கூறி இருக்கின்றனர்.
-
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த செயலால் ரசிகர்கள் மனமே குளிர்ந்து போச்சு! ரோகிணிக்கு பேரடி.. சந்தோஷத்தில் முத்து -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications