அசீம் பற்றிய ட்வீட்டுக்கு பதில் தவறாக போய்விட்டது.."நான் தவறாக புரிந்து கொண்டேன்” விளக்கிய கமல்ஹாசன்
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல நேரங்களில் சுவாரசியமான நிகழ்வுகள் நடைபெற்று வரும் அந்த மாதிரி தான் கடந்த வாரம் பஞ்சாயத்து செய்த வாத்தியார் கமல் செய்த செயல் ரசிகர்களின் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு வாரம் இறுதி நாட்களில் கமல் அந்த வார பஞ்சாயத்துகளை தீர்த்து வைப்பார். அப்படி கடந்த வாரம் அவர் தீர்த்து வைத்ததை குறித்து அவருக்கு வந்த வாழ்த்துக்களுக்கு தவறாக புரிந்து கொண்டு பதில் அளித்தது தான் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

வார இறுதி வாத்தியார்
விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சி சிறப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் அறிமுகமானார்கள். அதில் மூன்று போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர். இந்த நிலையில் ஒவ்வொரு வாரமும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடக்கும் பஞ்சாயத்துகளை தீர்த்து வைப்பதற்காக வார இறுதி நாட்களில் கமல் வந்து பேசுவது ஒவ்வொரு சீசனிலும் தொடர்ந்து நடந்து கொண்டு வருகிறது .இந்த நிலையில் கடந்த வாரம் நடந்த பல பிரச்சனைகளை சனி மற்றும் ஞாயிறுகளில் கமல் சிறப்பாக பேசி இருந்தார். இது பலதரப்பட்ட ரசிகர்கள் பிரபலங்களின் வாழ்த்துக்களை பெற்று வருகிறது.

கமல் செய்த எச்சரிக்கை
கடந்த வாரம் அசீம் சக போட்டியாளரான ஷிவினுக்கு எதிராக அவருடைய பாலினத்தை குறித்து செய்கையால் செய்த கிண்டலை குறித்து கமல் பேசுகினார். அதில் கமல்ஹாசன் ஷிவின் தனக்கு ஒரு தங்கை மாதிரி என்றும் அவர்களை வெறும் பெண்ணாக மட்டுமே கருத வேண்டும் என்றும் வேறு எதுவும் இல்லை என்றும் அனைவருக்கும் தெளிவுபடுத்தி இருந்தார். ஷிவின் உடல் மொழியை கேலி செய்ததற்காக அசீமையும் ,மணிகண்டனையும் அவர் எச்சரித்த விதம் பார்வையாளர்களையும் ஹவுஸ்மெட்டுகளையும் கவர்ந்திருந்தது.

கமல் செய்த கண்டிப்பும் பாராட்டும்
பிக் பாஸ் நிகழ்ச்சியை கோடிக்கணக்கானோர் பார்த்துக் கொண்டிருப்பதால் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இக்கட்டான சூழ்நிலையை சரியான சிந்தனையுடன் கையாண்டதற்காக கமல்ஹாசனை பலரும் பாராட்டினர் .அவர்களில் மௌலி என்ற ஒருவர் எபிசோடை பார்த்து கமலஹாசனை பாராட்டி விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். அதில் கடந்த வாரம் பிபி தமிழில் அசீமையும்,மணியையும் டிரான்ஸ் ஃபோபிக் நடத்தைக்காக கமல்ஹாசன் அறிவுரை கூறிய விதம் பல வீடுகளை அடைந்திருக்கும். அன்றைய நிகழ்ச்சி சிறப்பாக முடிந்தது. அதோடு அதில் ADK வை மற்றவர்கள் பின்பற்றும்படி கேட்டுக் கொண்டார் .மேலும் மற்றவர்களை பார்த்து சிரிப்பதற்கும் ,மற்றவர்களுடன் சேர்ந்து சிரிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை பற்றி கமல் காட்டி இருந்தார்.

ட்வீட்க்கு பதில் அளித்த கமல்
தொலைக்காட்சி என்பது சக்தி வாய்ந்தது, ஒரு முக்கியமான ஊடகம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. அது நம் வீடுகளில் அந்தரங்க இடங்களிலும் சென்று அடைகின்றது என்று மௌலி கமல்ஹாசனை டேக் செய்து ட்வீட் வெளியிட்டு இருந்தார். அந்த டேக்கை பார்த்த கமல்ஹாசன் அவர் மூத்த நடிகர் இயக்குனருமான மௌலி என்று தவறாக புரிந்து கொண்டு நன்றி திரு மௌலி, அநாகரிகமோ அவமானமோ இல்லாமல் நகைச்சுவையை தூண்டிய தலைவர்களில் நீங்களும் ஒருவர். நாங்கள் பெருமைமிக்க மனிதர்களில் வரிசையை சேர்ந்தவர்கள் உங்களுக்குப் பிறகு நான் என்று கமல்ஹாசன் பதில் அளித்து இருந்தார்.

தவறான பதிவு ஆனாலும் மகிழ்ச்சி
கமல் பதிவை பார்த்த மௌலி தவறான அடையாளத்திற்கு நான் காரணம் என்று கூறுவேன், ஆனால் எனது செய்தி உங்களை வந்தடைந்ததற்கு மிகவும் நன்றி அடைகிறேன். அதன் தொடர்ச்சியாக சினிமா துறையில் எங்களிடம் அன்பாக நடந்து கொள்ள உங்களை தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று மௌலி பதிலளித்து இருந்தார். இதை பார்த்த நடிகர் கமல் மீண்டும், "நீங்கள் மூத்த நடிகர் மற்றும் இயக்குனர் மௌலி என்று நான் தவறாக புரிந்து கொண்டேன், எப்படி இருந்தாலும் உங்கள் பாராட்டுக்கு நன்றி" என்று தனது விளக்கத்தை பகிர்ந்துள்ளார்.












Click it and Unblock the Notifications