குழந்தையாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர் கதாநாயகன்.. யார் என்று தெரிகிறதா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் கதாநாயகன் தன்னுடைய அம்மாவோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.
தான் குழந்தையாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர் மூர்த்தி அவருடைய அம்மாவைப் பற்றி நெகிழ்ச்சியாக பதிவிட்டு இருக்கிறார்.
புகைப்படம் பழசாக இருக்கலாம் ஆனால் என்னுடைய அம்மாவின் அன்பு எப்போதும் பழசு ஆகாது என்று இவர் வெளியிட்ட பதிவுக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

பாண்டியன் ஸ்டோர் மூர்த்தி
சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித் துறையிலும் நடித்துக் கொண்டிருக்கும் ஸ்டாலின் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மூர்த்தியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அண்ணன் தம்பி கதைகளை மையமாகக் கொண்ட பாண்டியன் ஸ்டோர் சீரியலின் வீட்டின் மூத்த அண்ணன் ஆக மூர்த்தி கேரக்டரில் ஸ்டாலின் நடித்து வருகிறார் .இந்த சீரியலில் கதை கதாநாயகனாக தன்னுடைய தம்பிகளை தம் குடும்ப ஒற்றுமைக்காகவும் பல தியாகங்களை செய்து கொண்டு குடும்பத்தை கட்டி காத்து வரும் ஒரு கேரக்டரில் ஸ்டாலின் நடித்து வருகிறார்.

முதல் நெகட்டிவ் கேரக்டர்
ஸ்டாலினின் சொந்த ஊர் தேனி மாவட்டம் தானாம். ஆனால் தற்போது இவர் சென்னையில் தான் குடும்பத்தோடு வசித்து வருகிறாராம். இயக்குனர் பாரதிராஜாவின் அண்ணன் பையனாம். இவர் முதல் முதலில் ஒரு நடிகராக விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியலில் மூலமாகத்தான் அறிமுகம் ஆகி இருக்கிறார் .இந்த சீரியலில் ரிஷி என்கிற கேரக்டரில் நடித்திருக்கிறார். முதல் சீரியலில் இவருக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக இவருக்கு தொடர்ந்து சீரியலில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது .அது மட்டுமில்லாமல் டைரக்டர் பாரதிராஜாவின் இயக்கத்தில் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான தெக்கத்தி பொண்ணு என்னும் சீரியலில் இவர் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருப்பார்.

திரைப்படத்திலும் அறிமுகம்
கதாநாயகனாக மட்டுமல்லாமல் நெகட்டிவ் கேரக்டரில் தன்னுடைய நடிப்பை சிறப்பாக காட்ட முடியும் என்று இவர் இந்த தெக்கத்தி பொண்ணு சீரியலில் நிரூபித்து இருந்தார். அந்த நேரத்தில் தான் இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலின் முதல் பகுதியில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து 7சி சீரியலில் ஒரு ஆசிரியராகவும் இவர் நடித்திருப்பார். அதற்கு பிறகு இவருக்கு தொடர்ந்து சீரியலில் பல சேனல்களில் இருந்து வாய்ப்பு கிடைத்துக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் தான் இவருக்கு ஒரு சில திரைப்படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்திருந்தது. கொம்பன் திரைப்படத்தில் இவருடைய நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு இருந்தது.

குழந்தை வயது புகைப்படம்
தற்போது இவர் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதேபோல கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் பச்சைக்கிளி சீரியலிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அண்ணன், தங்கை கதையை மையமாக கொண்ட இந்த பச்சைக்கிளி சீரியல் தன்னுடைய தங்கையின் மீது உயிரையே வைத்திருக்கும் ஒரு அண்ணனாக நடித்து வருகிறார். சீரியலில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் போது இவர் சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார் .இந்த நிலையில் திடீரென்று தன்னுடைய அம்மாவோடு இருக்கும் இவருடைய குழந்தை பருவ புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் இவர்தான் என்று அடையாளம் காண முடியவில்லை என்று கூறி வருகின்றனர். ஆனாலும் லைக் மட்டும் எகிரி வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications