மைனா பற்றிய ரகசியத்தை உடைத்த ரச்சிதா.. 6 வருஷத்துக்கு முன்னாடி!? பிரச்சனைக்கு காரணம் இதுதானாம்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த ரச்சிதா முதல் முறையாக அவருடைய தோழியாக இருக்கும் மைனா நந்தினியை பற்றி பேசி இருக்கிறார்.
ரச்சிதாவின் ரசிகர்கள் பலர் மைனாவை திட்டி வந்த நிலையில் தற்போது ரச்சிதா கூறிய பதில் அனைவரையும் வியக்க வைத்து இருக்கிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் மைனா அதிகமாக நெருக்கம் காட்டாத நிலையிலும் ரச்சிதா மைனாவை பற்றி நல்லவிதமாகவே கூறியிருக்கிறார்.

மைனாவோடு ஏற்பட்ட
ரச்சிதா மகாலட்சுமி விஜய் டிவியில் அறிமுகமானது பிரிவோம் சந்திப்போம் சீரியலாக இருந்தாலும் ரசிகர்களின் மத்தியில் பெரிய அளவில் அவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது என்றால் சரவணன் மீனாட்சி சீரியல் தான். இந்த சீரியலில் தொடர்ந்து பல சீசன்களில் கதாநாயகியாகவே ரச்சிதா நடித்து வந்தார். கதாநாயகன்கள் மாறினாலும் கூட கதாநாயகி இவர்தான் என்று அடித்து கூறும் வகையில் இவரை ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அந்த சீரியலில் ரச்சிதாவின் தோழியாக மைனா கேரக்டரில் நந்தினி நடித்திருந்தார். இந்த சீரியல் வந்து பல வருடங்கள் ஆகிவிட்டாலும் நந்தினி இந்த சீரியல் மூலமாக ரச்சிதாவின் நெருங்கிய தோழியாக மாறிவிட்டார். இதை பல இன்டர்வியூவில் கூட மைனா கூறி இருந்தார்.

ரசிகர்களின் கண்டிப்பு
இந்த நிலையில் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரச்சிதாவும் மைனாவும் இணைந்ததால் இவர்களுடைய கூட்டணி செமையாக இருக்கப்போகிறது. என்டர்டைன்மென்ட்க்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இவர்கள் இருவரும் இந்த நிகழ்ச்சியில் அதிக அளவில் நெருக்கம் காட்டாமல் தான் இருந்தனர். அது மட்டும் அல்லாமல் ஒருவாரம் கழித்து மைனா உள்ளே சென்றாலும் அப்போது ராபர்ட் மாஸ்டர் ரச்சிதாவிடம் நடந்து கொண்ட விதத்தை பற்றி சமூக வலைதளத்தில் பல்வேறு கருத்துக்கள் குவிந்து வந்த நிலையில் அதைப் பற்றி ரச்சிதாவிடம் எந்த ஒரு வார்னிங் கொடுக்காமல் ரச்சிதாவை ராபர்ட் மாஸ்டரை வைத்து கலாய்த்து வந்ததை ரசிகர்கள் மட்டுமல்லாமல் ரச்சிதாவின் கணவரும் கண்டித்து வந்தார்.

நெருங்கிய தோழிகள்
ரச்சிதா அவருடைய கணவரை பிரிந்து இருக்கும் நிலையில் அவர் ரச்சிதா வெளியே வந்த பிறகு மைனாவின் சூழ்ச்சிகளையும் கேரக்டரையும் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார். தற்போது கடந்த வாரம் வெளியே வந்திருக்கிறார் ஆனால் பிக் பாஸ் வீட்டிற்குள் தான் மைனா இருந்து வருகிறார். இதனால் மைனா பற்றி ரச்சிதா என்ன சொல்வார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது. தற்போது அதை போக்கும் விதமாக முதல்முறையாக ரச்சிதா மனம் திறந்து பேசி இருக்கிறார். அதில் நானும் மைனாவும் ரொம்பவே நெருங்கிய தோழிகள். என்னைப் பற்றிய எல்லா விஷயமும் தெரியும் என்று சொல்கிற மாதிரி தான் மைனாவுக்கும் எனக்கும் உறவு இருக்கிறது.

ரசிகர்களின் கேள்விகள்
ஆனால் ஒரு ஆறு வருடங்களுக்கு முன்பு எங்களுக்குள் சிறு கேப் விழுந்து விட்டது.அதற்கு பிறகு இப்போது பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் நாங்கள் சந்தித்ததால் அந்த ஆறு வருடத்தில் என்னவெல்லாம் நடந்ததோ அதை பற்றி மீண்டும் பேசுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது. மைனா தான் என்னுடைய நெருங்கிய தோழி என்று மைனாவை பற்றி பெருமையாக பேசியிருக்கிறார். இதை குறித்து நெட்டிசன்கள் பலர் சமூக வலைத்தளத்தில் ரட்சிதாவிடம் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். உங்களை ரசிகர்களிடம் முதன்மையான பங்கு மைனாவிற்கு இருக்கிறது ஆனால் அதை நீங்கள் மறந்து விட்டீர்களா என்று கேள்வி எழுப்புகின்றனர் இன்னும் ஒரு சிலர் ரச்சிதாவிற்க்கு அவருடைய கணவர் மீது கோபம் இருப்பதால்தான் கணவர் மைனாவை திட்டியதால் மைனாவுக்கு ரச்சிதா சப்போர்ட் செய்கிறாரா என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications