கமலின் மகாநதி படத்தில் இருந்து இதுக்கு மேல இருந்தா அசிங்கம்னு வந்துட்டேன்.. சேரன் சொன்ன காரணம்
சென்னை: கமல் நடித்த மகாநதி திரைப்படத்தில் வேலை பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைத்தபோது அந்த திரைப்படத்திலிருந்து திடீரென வெளியேறிய காரணத்தைப் பற்றி சேரன் பேசியிருக்கிறார்.
மகாநதி திரைப்படத்தில் நடிக்கும் போது வெளியே தெரியாத பிரச்சனை நடந்தது இருக்கிறது.
இதற்கு மேல் அந்த இடத்தில் இருந்தால் தமக்கு மரியாதை இல்லை என்று சேரன் விலகி இருந்தாராம்.
சேரன் ஆரம்பத்தில் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்று இப்போது உணர்ந்து கொண்டதாக அதை குறித்து பேசி இருக்கிறார்.

பல நாள் ஆசை
நடிகர் சேரன் கமல் மீது கொண்ட பாசத்தின் காரணமாக ஒரு முறையாவது அவருடைய படத்தில் வேலை பார்த்து விட வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே அதிகமாக ஆசையில் இருந்தாராம். அப்போதுதான் தயாரிப்பாளர் தேனப்பன் மூலமாக சந்தான பாரதியின் மகாநதி திரைப்படத்தில் வேலை பார்க்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த திரைப்படத்தில் தனக்கு தன்னுடைய ஆசை நிறைவேற்றி விட்ட மகிழ்ச்சியில் சேரனும் இருந்திருக்கிறார். இந்த திரைப்படம் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த ஒருவரை ஒருவர் ஏமாற்றுகிறார். இதனால் கமல் பண மோசடியில் ஜெயிலுக்கு போக, அவருடைய மகள் விபச்சார இடத்தில் விற்கப்படுகிறார் .மேலும் அவருடைய மகனும் அதே நேரத்தில் காணாமல் போக ஜெயிலிலிருந்து வெளியே வந்த கமல் இவர்களை எப்படி கண்டுபிடித்து தன்னை ஏமாற்றிய நபரை பழி வாங்குகிறார் என்பதுதான் கதை.

படத்தில் இருந்து வெளியேற்றம்
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அறுபது நாட்கள் நடந்த நிலையில் சில கருத்து வேறுபாடு காரணமாக நாலு பேர் படத்தின் பாதியிலே வெளியேறி இருந்தார்களாம். அவர்களின் ஒருவராக சேரனும் இருந்திருக்கிறார். நாங்கள் அவரோடு சண்டை போட்டது எங்களுடைய அறியாமையினால் தான் என்பது பிறகு தான் புரிந்து கொண்டது. ஒரு காட்சியை எப்படி இயக்க வேண்டும் என ஒரு கலைஞர்கள் பலவிதமாக யோசிப்பார்கள் என்பது அப்போது எனக்கு புரியவில்லை. அதுபோலத்தான் கே எஸ் ரவிக்குமார் உடன் வேலை பார்த்த கமலுக்கு அன்றைக்கு அந்த இடத்தில் கற்பனை திறன் வேறு மாதிரி இருந்திருக்கிறது.

கமலின் கோபம்
அப்படித்தான் ஒரு காட்சியில் நேம்பியர் பாலத்தில் கமல்ஹாசனும் பூரணம் விஸ்வநாதனும் பேசிக்கொள்ளும் ஒரு காட்சி காலையில் இருந்ததாம். அப்போது விடியற்க்காலையில் சூரியனும் வந்திருக்கிறது. உடனே கமலஹாசனுக்கு மழையில் வானவில்லை ஒரு காட்சி எடுக்கலாம் என என்றும் தோன்றியிருக்கிறது. ஒருவேளை நாங்களும் இயக்குனராக இருந்திருந்தால் அந்த நேரத்தில் எங்களுக்கும் அந்த எண்ணம் தோன்றியிருக்கலாம் என்று சேரன் கூறியிருக்கிறார். இதே நேரத்தில் கமலஹாசன் காட்சிக்கு தயார் செய்துவிட்டு திரும்பி பார்த்தால் கேமரா மேனை காணவில்லையாம். கேமரா மேன் கேமராவை அண்ணா சமாதி பக்கம் இருக்கும் வேனில் வைத்து விட்டாராம். கேமரா எங்கே என கமல் கேட்டதும். சேரன் உடன் சேர்ந்தவர்கள் வண்டிக்கு சென்று விட்டது என சொன்னார்களாம். அதனால் கமலுக்கு சரியான கோபம் வந்து விட்டதாம்.

இப்பதான் புரிகிறது
கமலுக்கு கோபம் வந்ததும் சேரன் அணியினர் கேமராவை கொண்டுவரச் சொல்ல, அவர் தரமாட்டேன் என்று கூறினார். பின்னர் அடித்து பிடித்து கேமராவை கொண்டு வந்தால் அதற்குள் மழை நின்று விட்டதாம். வானவில்லும் காணாமல் போய்விட்டதாம். இதனால் கடுமையாக கோபமடைந்த கமல் இவர்களை திட்ட, உடனே துணை இயக்குனர் கோபமடைந்து வேலை வேண்டாம் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டாராம். இயக்குனரே சென்றுவிட்டார் இனிமேல் நாம் இங்கு இருந்தால் நமக்கு அசிங்கம் என எண்ணி என்னுடன் இருந்த இரண்டு பேரும் அங்கிருந்து வந்து விட்டோம் ஆனால் இப்போதுதான் இயக்குனர் ஆகிய பிறகு தெரிகிறது துனை இயக்குனர்கள் படும்பாடு என்னவென்று, அன்று கமல்ஹாசனுடன் நடந்த கசப்பான சம்பவம் குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகரும் இயக்குனருமான சேரன் பேசியிருக்கிறார். ஆனால் இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் பலர் இதைக் குறித்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது எதுவுமே பேசவில்லையே என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications