பிக் பாஸ் பிரபலத்தை திருமணம் செய்த ஜீ தமிழ் சீரியல் நடிகை..சீரியல் கதாநாயகன் செய்த எதிர்பாராத செயல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் வித்யா நம்பர் 1 சீரியலின் கதாநாயகி தேஜஸ்வினி கவுடாவின் திருமணம் சமீபத்தில் முடிவடைந்து இருக்கிறது.

சீரியல் கதாநாயகியின் திருமணத்திற்கு அந்த சீரியலின் கதாநாயகன் மாப்பிள்ளை தோழனாக கலந்து கொண்டு இருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

விஜய் டிவி சீரியலில் அறிமுகம்

விஜய் டிவி சீரியலில் அறிமுகம்

கன்னட நடிகையாக இருக்கும் தேஜஸ்வினி கௌடா 2018 ஆம் ஆண்டு வெளியான வீணா பொன்னப்பா உடன் பில் ஹிந்தி என்ற கன்னட சீரியல் மூலம் சீரியலுக்கு என்ட்ரி கொடுத்திருக்கிறார். அதற்குப் பிறகு கன்னடம் தெலுங்கு என பழமொழி சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் விஜய் டிவியில் 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒளிபரப்பான சுந்தரி நீயும் சுந்தரன் நானும் என்ற சீரியலின் மூலமாக தமிழுக்கு அறிமுகம் ஆகி இருக்கிறார். முதல் சீரியலிலே இவர் ரசிகர்களின் மனதை கவர்ந்து விட்டார். இந்த சீரியல் முழுக்க காதல், குடும்பம், அரசியல் என மொத்தமாக கலந்து இருந்தாலும் கதாநாயகியாக இவருடைய நடிப்பு ரசிகர்களையும் கவர்ந்திருந்தது.

திடீரென முடிக்கப்பட்ட சீரியல்

திடீரென முடிக்கப்பட்ட சீரியல்

சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியலின் கதாநாயகனாக வினோத் பாபு மற்றும் கதாநாயகியாக தேஜஸ்வினி நடித்திருந்தார்கள். இந்த சீரியல் திடீரென முடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் அதிக அளவில் எதிர்பார்ப்போடு இந்த சீரியல் ஒளிபரப்பானாலும் பின்பு ரசிகர்களின் மத்தியில் பெரிய அளவில் இது கவரப்படவில்லை. இதனால டிஆர்பி குறைந்தால் திடீர் என்று முடிக்கப்பட்டதாக செய்திகள் அந்த நேரத்தில் வெளியாகி இருந்தது. அதற்கு பிறகு தான் இவர் ஜீ தமிழில் பக்கம் தனது பயணத்தை திருப்பி இருக்கிறார்.

ஜீ தமிழில் அறிமுகம்

ஜீ தமிழில் அறிமுகம்

ஜீ தமிழில் ப்ரோமோவின் மூலமாகவே ரசிகர்களை அதிகமாக கவர்ந்த சீரியலாக இந்த சீரியலும் இருந்து வந்தது .ஒரு படிப்பறிவு இல்லாத கிராமத்துப் பெண் கேரக்டரில் தேஜஸ்வினி இதில் வித்யாவாக நடித்திருப்பார். இந்த நிலையில் ஒரு சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு எளிமையாக எங்கேஜ்மென்ட் முடிந்த விஷயத்தை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் ரசிகர்களிடம் பகிர்ந்து இருந்தார். அதற்கு ரசிகர்கள் அதிகமானோர் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வந்தனர். இந்த நிலையில் ஒரு சில நாட்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் எளிமையாக முடிவடைந்து இருக்கிறது.

கணவர் பிக் பாஸ் பிரபலம்

கணவர் பிக் பாஸ் பிரபலம்

தேஜஸ்வினி கணவர் கன்னட பிக் பாஸ் பிரபலம் அமர்தீப் சவுத்ரி தானாம் தன்னுடைய திருமண வைபவத்தை தன்னுடைய youtube பக்கத்தில் இவர் வெளியிட்டு இருந்தார். அதில் வித்யா நம்பர் 1 சீரியலில் இவருக்கு ஜோடியாக கதாநாயகனாக இப்போது நடித்து வரும் சஞ்சய் இவருடைய திருமணத்தில் கலந்து இருக்கிறார். திருமண நிகழ்ச்சியில் ஒரு தோழனாக இவர் வலம் வந்ததை பார்த்து நெட்டிசன்கள் பலவிதமாக கலாய்த்து வருகின்றனர். என்னதான் சீரியலில் கணவராக நடித்தாலும் நிஜ திருமணத்தில் இவர் ஜாலியாக வலம் வருவதை குறித்து பலர் கலாய்த்து கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+