Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எழில், அமிர்தா திருமணத்தை நடத்தி வைக்க போவது யார் தெரியுமா? கடைசியில் நடக்கும் ட்விஸ்ட் இதுதானா?

பாக்கியலட்சுமி சீரியலில் எழில் அமிர்தாவின் திருமணத்தை கடைசி நேரத்தில் நடத்தி வைக்க போவது சின்னத்திரை நடிகர் ஜீவா என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் எழில் மற்றும் அமிர்தா திருமணம் கடைசி நேரத்தில் நடக்க இருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ஏற்கனவே எழில் குடும்பத்திற்காக வர்ஷினியை திருமணம் செய்வதற்கு சம்மதித்திருக்கிறார்.

அமிர்தாவிடம் தன்னுடைய திருமண விஷயத்தை சொல்ல சென்ற எழில் பின்பு சொல்ல முடியாமல் வந்து விட்டதால் அமிர்தாவுக்கு எழிலுடைய திருமண விஷயம் தெரியாமல் தான் இருந்து வருகிறது.

இந்த நிலையில் பிரபல நடிகர் இந்த சீரியலில் அறிமுகமாகி எழில் மற்றும் அமிர்தாவின் திருமணத்தை நடத்தி வைப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

பெயர் மாறியதால் ஏற்பட்ட பிரச்சனை

பெயர் மாறியதால் ஏற்பட்ட பிரச்சனை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது விறுவிறுப்பான கதைக்களத்தோடு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் ஆரம்பத்தில் இருந்தே தன்னுடைய தன்மானத்தை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்று பாக்கியா ஒவ்வொரு பிரச்சனைகளையும் தாண்டி வந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இதுவரைக்கும் பாக்யாவுக்கு ஆதரவாக இருந்து வந்த எழில் தற்போது தன்னுடைய திருமண விஷயத்தில் முடிவெடுக்க முடியாமல் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறார். கோபி இரண்டாவது திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டு சென்றுவிட்ட நிலையில் வீட்டின் பெயரை எழில் பாக்யா என மாற்றியதால் பெரும் பிரச்சனை வெடித்து இருக்கிறது.

 காதலை விட்டுக் கொடுத்த எழில்

காதலை விட்டுக் கொடுத்த எழில்

என் பெயரில் இருக்கும் வீட்டை எப்படி பாக்கியாவின் பெயரில் மாற்றலாம் என சண்டையிட்ட கோபி நான் இந்த வீட்டை விற்க போகிறேன் என்று சொல்ல, அதற்கு எழில் நான் இந்த வீட்டை வாங்கிக் கொள்கிறேன் என்று சவால் விட்டார். ஆனாலும் அவருக்கு கூறியபடி பணம் கிடைக்க விடாமல் அவரை ஒருதலையாக காதலித்து வந்த வர்ஷினியின் அப்பா பிரச்சனைகளை செய்ய, தற்போது கோபி இடம் தான் செய்த சவாலில் ஜெயிக்க வேண்டும் என்றும் தன்னுடைய குடும்பம் உடைந்து பிரிந்து விடக்கூடாது என்றும் எழில் தான் இத்தனை வருடங்களாக காதலித்து வந்த அமிர்தாவின் காதலை விட்டு விட்டு வர்ஷினியை திருமணம் செய்ய அவருடைய பாட்டி மற்றும் தாத்தாவிடம் சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

யாருடன் திருமணம்

யாருடன் திருமணம்

ஆரம்பத்தில் இருந்தே எழிலுடைய காதலுக்கு நான் சப்போர்ட் செய்கிறேன் என்று கூறிவந்த பாக்யா இந்த நேரத்தில் என்ன முடிவு எடுக்க என்று தெரியாமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது தான் கோபிக்கு எழில் திருமண விஷயம் தெரிய வருகிறது. அதுவும் அடுத்த நாளே எழில் திருமணம் என்ற விஷயத்தை கேட்டு அதிர்ச்சியாகி இருக்கிறார். இந்த நிலையில் ராதிகா இது நல்லதல்ல என்று சொல்ல முயற்சி செய்தாலும், சொல்லாமல் நிறுத்தி விடுகிறார் .தற்போது எழில் வர்ஷினியை திருமணம் செய்வாரா? அல்லது அமிர்தாவை திருமணம் செய்வாரா? என்ற பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

புதியதாக வரும் நபர்

புதியதாக வரும் நபர்

ஏற்கனவே எழில் திருமணம் வர்ஷினியோடு மணமேடை வரை வந்த புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைத்தளத்தில் பரவி வரும் நிலையில், தற்போது கடைசி நேரத்தில் அமிர்தாவுக்கு விஷயம் தெரிந்து அமிர்தாவோடு எழிலுக்கு திருமணத்தை நடத்தி முடிப்பதற்காக நடிகர் ஜீவா சீரியலில் அறிமுகமாக இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஜீவா தற்போது திருமகள் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார் .இந்த நிலையில் அவர் ராதிகாவாக நடிக்கும் ரேஷ்மாவோடு எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இருப்பதால் ரசிகர்கள் இந்த தகவல்கள் உண்மையாகத்தான் இருக்குமோ என்று கருத்து கூறி வரும் நிலையில் கடைசி நேரத்தில் ராதிகாவால் தான் இந்த திருமணம் தடுத்து நிறுத்துவதற்காக ஜீவா வந்திருக்கிறாரா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+