இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது இருவரா? இணையத்தில் லீக்கான தகவல்கள்.. செம ட்விஸ்ட்
சென்னை: பிக் பாஸ் ஆறாவது சீசனில் முதல் எலிமினேஷன் ஆக வெளியாக போகும் போட்டியாளர்களின் விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது.
முதல் எலிமினேஷனில் 2 போட்டியாளர்கள் வெளியேறப் போகிறார்களாம்.
கடைசி நேரத்தில் நடைபெற்ற சண்டை சச்சரவு காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் எதிர்பாராத பல திருப்புங்கள் நடைபெற்று இருக்கிறது.

போட்டியாளர்களுக்கு கிடைத்த வாய்ப்பு
விஜய் டிவியில் தற்போது பிக் பாஸ் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசன்களில் கிடைத்த வரவேற்பை பார்த்து தான் தற்போது ஆறாவது சீசனில் போட்டியாளர்கள் பலர் போட்டி போட்டுக் கொண்டு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கின்றனர். 20,000 பேர் போட்டி போட்ட இடத்தில் 21 போட்டியாளர்கள் செலக்ட் செய்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கின்றனர். திரைப்படங்கள், சின்னத்திரை பிரபலங்கள், சமூக வலைதள பிரபலங்கள், செய்தி வாசிப்பாளர்கள், டான்ஸ் மாஸ்டர்கள், பாடகர்கள் என பல்வேறு தரப்பட்ட போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கின்றனர்.

வெளியே வரும் சுய கேரக்டர்
இதுவரைக்கும் பலர் போட்டியாளர்களின் வெளியே தெரியாத பல கேரக்டர்கள் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளியே தெரிந்துவிடும். இது ஒவ்வொரு சீசனிலும் நடக்கும் வழக்கமான ஒன்றுதான். அதுபோலத்தான் தற்போதைய சீசனிலும் நடந்து வருகிறது. என்ன தான் திரை மூலமாக அதிகமான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருந்த போட்டியாளர்கள் கூட இந்த சீசன் தொடங்கி ஒரு வாரத்திற்குள் தங்களுடைய சுய கேரக்டரை காட்ட தொடங்கி விட்டார்கள் என்று ரசிகர்கள் சொல்லும் அளவிற்கு தான் இருந்து வருகிறார்கள்.

முதல் இடத்தில் ரட்சிதா
ஆறாவது சீசன் தொடங்கி ஒரு வாரம் முடிவடைந்த நிலையில் இரண்டாவது வாரத்தில் 12 போட்டியாளர்கள் எலிமினேஷன் லிஸ்ட்டில் இருக்கின்றனர். இதில் இரண்டாவது வாரம் ஆகிய இந்த வாரத்தில் யார் வெளியேறப் போகிறார்கள் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. இந்த நிலையில் இன்று வரைக்கும் ஹாட்ஸ்டாரில் ரசிகர்கள் ஓட்டு அளித்த அடிப்படையில் போட்டியாளர்கள் பெற்ற மதிப்பெண் விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கின்றது. அதில் முதலிடத்தில் ரட்சிதா மகாலட்சுமி விருந்து வருகிறார்.

இரண்டு எவிக்ஷன்
போட்டியாளர்கள் என்னதான் விக்ரமனை ஒதுக்கி வைத்து, அவரை தனிமைப்படுத்தி வந்தாலும் ரசிகர்கள் அவருக்கு அதிகமான வாக்குகள் அளித்து இரண்டாவது இடத்தில் அவர் இருந்து வருகிறார். அவரை தொடர்ந்து அசீம்,குயின்ஸ்சி,ஆயிஷா, நிவா, தனலட்சுமி, ராம், செர்ல்லின், சிபின், விஜே மகேஸ்வரி, சாந்தி இருந்து வருகின்றனர். கடைசி இடத்தில் விஜே மகேஸ்வரி மற்றும் சாந்தி இருப்பதால் இவர்கள்தான் இந்த வீட்டை விட்டு வெளியேற இருப்பவர்கள் என்று புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இன்றைய எபிசோட் நடந்து கொண்ட செயல்களை பார்க்கும்போது அவரை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்படுவதாக பலர் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் ஏற்கனவே ஜிபி முத்து தன்னை வீட்டை விட்டு அனுப்ப வேண்டும். தன்னுடைய வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கூறி வருவதால் இந்த வாரம் இரண்டு எவிக்ஷன் இருக்கப் போகிறது என்று பலரும் கருத்து கூறி வருகிறார்கள். ஆனால் கடைசி நேரத்தில் பல ட்விஸ்ட்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications