Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குழப்பமான நேரத்திலும் செல்லம்மா சீரியல் நடிகர் அர்னாவ் வெளியிட்ட போஸ்ட்.. எதற்காக இப்படி எல்லாம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா சீரியலின் கதாநாயகனாக நடிக்கும் அர்னாவ் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு ரசிகர்களின் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

நடிகர் அர்னாவ் மற்றும் அவருடைய மனைவி திவ்யா இதுவரைக்கும் இடையில் கருத்து வேறுபாடு சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் அர்னாவ் வெளியிட்ட தத்துவம் தான் ரசிகர்களை யோசிக்க வைத்திருக்கிறதாம்.

லிவ்விங் ரிலேஷன்ஷிப் வாழ்க்கை

லிவ்விங் ரிலேஷன்ஷிப் வாழ்க்கை

திவ்யா தமிழ் கன்னடம் என பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் தற்போது செவ்வந்தி எனும் சீரியலில் நடித்து வருகிறார். அதுபோல அர்னாவ் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா சீரியலின் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் எளிமையாக திருமணத்தை செய்து முடித்திருக்கின்றனர். தற்போது திவ்யா கர்ப்பமாக இருக்கும் செய்தியை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக ரசிகர்களுடன் பகிர்ந்து இருந்தார். இந்த நிலையில் திவ்யா வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் அதில், சமீபத்தில் தான் எனக்கும் அர்னாவ்க்கும் திருமணம் முடிந்திருந்தது. அவர் செல்லமா சீரியலில் நடித்து வருகிறார். சில வருஷத்துக்கு முன்னாடி சீரியல் ஒன்றில் நாங்கள் நடித்தோம்.அதற்குப் பிறகு நாங்க லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் தான் வாழ்ந்து வந்தோம். இரண்டு வருஷத்துக்கு முன்னாடி நாங்க ஒரு வீடு வாங்கினோம். அதற்கு பைனான்ஸ் எல்லாமே நான் தான் செட்டில் பண்ணி இருந்தேன். அப்போ கல்யாணப்பரிசு சீரியல் முடிந்த பிறகு அர்னாவ்க்கு எந்த ஒரு சீரியலும் இல்லாமல் தான் இருந்தார். நான் தான் மகராசி சீரியல் முடிச்சுகிட்டு இஎம்ஐ எல்லாம் கட்டிக்கிட்டு இருந்தேன்.

கதறும் நடிகை

கதறும் நடிகை

அது மட்டுமில்லாமல் அர்னாவ் தனியாகவும் லோன் வாங்கி இருந்தார். அதையும் நான் தான் கட்டியிருந்தேன். அவருக்கு எந்த ஒரு கஷ்டத்தையும் கொடுக்காமல் நான் பார்த்துக்கொண்டு இருந்தேன். வேலை இல்லை என்பதை அவர் ஃபீல் பண்ண கூடாது என்பதற்காக நான் பார்த்து பார்த்து பண்ணுனேன். ஆனா என் ஹஸ்பண்ட் என்னை அடிச்சதால நான் கீழே விழுந்ததில் என்னுடைய வயிறுக்கு அடிபட்டு இருக்கு. என்னுடைய காலில் அவர் மிதித்ததால் நான் மயங்கி விழுந்துட்டேன். கொஞ்ச நேரம் கழிச்சு தான் நான் முழித்து பார்த்தேன். அப்போது அவர் அங்கே இல்லை. என்னால் ஹாஸ்பிடலுக்கு வர முடியவில்லை. வயிறு வலி வந்துடுச்சு. ப்ளீடிங் ஆகிவிட்டது என்று திவ்யா கதறி அழுத வீடியோ தற்போது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

பாசமும் இருக்கு

பாசமும் இருக்கு

இந்த நிலையில் சின்னத்திரை நடிகர்களான திவ்யா மற்றும் அர்னாவ் இருவரும் ஒருவரை மாற்றி ஒருவர் குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். அதில் தன்னுடைய மனைவி தன் மீது மிகுந்த அன்பும் பொஸஸ்நஸ் வைத்திருக்கிறார். அதனால் தான் இவர் இப்படி செய்து கொண்டிருக்கிறார். ஆனால் தற்போது ஒரு சிலருடைய தவறான வழிகாட்டல்களால் தன்னுடைய மனைவி தன் மீது பல்வேறு அவதூறுகளை கிளப்பி வருவதாகவும் இவர்கள் இருவருக்கும் இடையில் பிரச்சனைக்கு காரணமே இவர்களுடைய நண்பர்கள் தான் என்றும் செய்தி சேனல்களுக்கு பேட்டியளித்துக் கொண்டிருந்தார்.

சிறப்பான தத்துவம்

சிறப்பான தத்துவம்

தனக்கு தன்னுடைய மனைவியும் குழந்தையும் வேண்டும். தன்னுடைய மனைவி ரொம்பவும் பாசமானவர்தான் ஆனால் சிலருடைய சொல் பேச்சுகளை கேட்டு திவ்யா இப்படி நடந்து கொண்டிருக்கிறார். அதோடு தன்னுடைய மனைவி கோபத்தில் இருந்தாலும் அடுத்த நேரத்தில் சமாதானம் ஆகும் கேரக்டர் தான் என்று கூறி இருக்கிறார். இவர்களுடைய பிரச்சனை தற்போது சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கப்பட்டிருக்கும் நேரத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அர்னாவ், "மூன்று விஷயங்களை நீண்ட காலங்களுக்கு மறைக்க முடியாது. சந்திரன், சூரியன், மற்றும் உண்மை .உண்மை தாமதமாகலாம் ஆனால் ஒருபோதும் வராமல் இருக்காது" என்று தத்துவத்தை உதிர்த்து போஸ்ட் வெளியிட்டு இருக்கிறார் .இதை பார்த்து ரசிகர்கள் ஒரு பக்கம் இவருக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள். இன்னொரு பக்கம் இவருக்கு எதிராக நெகட்டிவ் கருத்துக்களையும் வெளியிட்டு வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+