நீங்க என் கேர்ள் ஃப்ரெண்ட்- அசீம் வார்த்தைக்கு ரச்சிதா கொடுத்த பதில்.. எங்கேயும் இதே பாகுபாடு தானா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் தற்போது நடந்து வரும் ஸ்கூல் டாஸ்க் ரச்சிதா தன்னுடைய கேர்ள் பிரண்ட் என்று அசீம் கூறியதற்கு ரச்சிதா கொடுத்த பதில் ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்று இருக்கிறது.
போட்டியாளர்கள் அனைவரும் தங்களுக்கு கொடுத்த கெட்டப்பில் மாறிக் கொண்டிருக்கும் நிலையில் அசீம் தன்னுடைய நிலைமையை எண்ணி ரொம்பவே ஃபீல் பண்ணிக் கொண்டிருக்கிறார்.

பிக் பாஸின் பாகுபாடு
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இந்த வாரம் ஸ்கூல் டாஸ்க் தொடங்கி இருக்கிறது. அதில் போட்டியாளர்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கெட்டப்புகளில் மாணவர்களாகவும், ஆசிரியர்களாகவும் வலம் வருகின்றனர். நேற்று ஆசிரியர்களாக இருந்தவர்கள் இன்று மாணவர்களாக மாறி இருக்கின்றனர். அதில் ஆசிம் ஸ்கூல் ஸ்டூடண்டாக மாறுவதற்காக தான் பல நாட்களாக ஆசைப்பட்டு வளர்த்து வந்த மீசையை இழந்துவிட்டேன் என்று புலம்பி கொண்டிருக்கிறார். நாங்களும்தான் கஷ்டப்பட்டு கெட்டப் போட்டு இருக்கோம் என்று சொல்ல அசீம் உங்களை மாதிரி நான் கிடையாது என்று தன்னுடைய வாக்குவாதத்தை தொடங்கி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ஆண் போட்டியாளர்கள் அனைவரும் மீசையை எடுத்துக் கொண்டு ஸ்டூடண்ட் ஆக மாறி இருப்பதை குறித்து பிக் பாஸ் அனைவரையும் பாராட்டிக் கொண்டிருக்கிறார். ஆனால் பெண் போட்டியாளர்கள் பாராட்டவில்லை என்று ரச்சிதா ஃபீல் பண்ணிக் கொண்டிருக்கிறார்.

சமுதாயத்தில் நடப்பது இதுதான்
அசீம் ரச்சிதாவிடம் நீங்கள் கெட்டப் போட்டால் நாளைக்கு அது சரியாகிவிடும் ஆனால் நான் எத்தனை வருடமாக ஆசையாக வளர்த்த மீசையை எடுத்து இருக்கிறேன். இது வளர்வதற்கு இன்னும் ஒரு மாதம் ஆகும் என்று சொல்ல அதற்கு ரச்சிதா இதுதான் சமுதாயத்திலும் நடந்து கொண்டிருக்கிறது. பொண்ணுங்க சமையல் செய்தால் அது கடமை. செய்ய வேண்டியது தானே என்று ஆகிவிடும். அதுவே ஆண்கள் செய்தால் அது பெருமை என்று பேசுகிறார்கள் என்று சொல்ல ஆமாம் அது பெருமை தான் என்று அசீம் கூறுகிறார்.

மீசை போச்சே
அதற்குத் ரச்சிதா இந்த விஷயத்தில்தான் ஒரு ஏற்றத்தாழ்வு அங்கேயே வந்து விடுகிறது என்று சொல்ல அதற்கு அசீம் இங்க பாருங்க நான் எவ்வளவு கஷ்டப்பட்டு சமையல் செஞ்சிருக்கேன் தெரியுமா? என்று சொல்கிறார். அதற்கு ரச்சிதா நான் இதை தான் சொன்னேன் என்று சொல்ல, ஏ நான் எவ்வளவு கஷ்டப்பட்டு பல வருஷமா மீசையை வளர்த்திருக்கிறேன் தெரியுமா? என்று கேள்வி கேட்கிறார். அப்போது ஷிவின் நான் எப்படி இருக்கேன் பாருங்க என்று ஒவ்வொருவரிடமும் அபிப்பிராயம் கேட்கும் போது தனலட்சுமி நானும் எப்படி இருக்கிறேன் என்று அபிப்ராயம் கேட்கிறார். ஆனால் அங்கு பிக் பாஸ் எந்த ஒரு பதிலும் கூறவில்லைகூறவில்லை.

என்னது கேர்ள் பிரண்டா
பின்பு ரச்சிதா கேமரா முன்பு நின்றபடி நான் எப்படி இருக்கிறேன். ஸ்டிட்டான பொண்ணு மாதிரி இருக்கேனா? இங்க பாருங்க நானும் தான் முடியை முன்னாடி கட் பண்ணி போட்டு இருக்கிறேன் என்று கூறுகிறார். ஆனால் பிக் பாஸ் இடம் இருந்து எந்த பதிலும் வராததால் அழுதது மாதிரி நடித்துக் கொண்டு செல்கிறார். அப்போது அங்கே வந்த அசீம், நீ ஸ்டிட்டான பொண்ணு இல்லை, "சப்போஸ் என்னுடைய கேர்ள் பிரண்ட்,என்னோட ரொமாண்டிக்" என்று பேச, அதற்கு நான் அதை அக்செப்ட் பண்ணலையோ என்று ரச்சிதா பதிலடி கொடுக்கிறார். அட போடா என்று போய்க்கொண்டு இருக்கிறார். இதை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். ஆரம்பத்தில் குயின் சி என்னுடைய கேர்ள் ஃப்ரெண்ட் என்று பேசிக் கொண்டிருந்த நிலையில் இப்போது ரச்சிதாவா என்று பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
பாண்டியன் சட்டையே போடாமல் கேஷுவலா படுத்திருப்பாராம்.. வளையல் கடைக்காரர் ஹீரோவான ஒற்றை நொடி ரகசியம் -
சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் படிக்கட்டில் அந்த சத்தம்! யாருமே கவனிக்காத நடிகர் திலகத்தின் கை ரகசியம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications