அனிருத் ரிசப்ஷனுக்கும் தனுஷ் வரமாட்டாரா? பின்னணி விஷயம்! 15 வருஷ நன்றி கடிதத்திலும் D பெயர் இல்லையே!
சென்னை: அனிருத் தனுஷ் என்றாலே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது 3 படமும், அந்த படத்தில் இடம்பெற்ற "ஒய் திஸ் கொலவெறி" பாடலும் தான். இசையமைப்பாளராக அனிருத் அறிமுகமான முதல் படமே தனுஷ் நடித்த 3. அதற்கு பிறகு இருவரும் இணைந்து பல வெற்றி பாடல்களை கொடுத்ததால் DnA என்று ரசிகர்கள் இந்த கூட்டணியை கொண்டாட்டினார்கள். ஆனால் இப்போது அனிருத் திருமணத்தில் தனுஷ் இல்லாதது, அதற்கு பிறகு வெளியான அனிருத் 15 வருஷ இசை பயண நன்றி பதிவில் தனுஷ் பெயர் இல்லாதது என அடுத்தடுத்து சில விஷயங்கள் ரசிகர்களை யோசிக்க வைத்திருக்கிறது.
அனிருத் காவியா மாறன் கல்யாணம் கடந்த நவம்பர் 11ஆம் தேதி கிரீஸில் நடைபெற்றது. அந்த புகைப்படங்களில் தனுஷ் இல்லாததை பார்த்த ரசிகர்கள் அப்போ ஏன் அவர் வரவில்லை? என்று கேள்வி எழுப்பினர். ஒருவேலை அவர் நடித்த ஓம் படத்தின் ப்ரோமோஷனில் பிஸியாக இருப்பதால் திருமணத்தில் கலந்து கொள்ளாமல் இருக்கலாம், அதனால் சென்னையில் நவம்பர் 21-ம் தேதி நடைபெற உள்ள திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம் என்றும் கூறி வந்தனர்.

தனுஷுக்கு அழைப்பு இல்லையா?
ஆனால் இப்போது அனிருத் திருமணத்திற்கும் சென்னையில் நடைபெற உள்ள வரவேற்பு நிகழ்ச்சிக்கும் தனுஷுக்கு அழைப்பிதழ் கொடுக்கவில்லை என்று வலைப்பேச்சு டீம் தரப்பில் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதனால் தனுஷ் ரிசெப்ஷனிலும் கலந்து கொள்ள மாட்டார் என்ற பேச்சு கிளம்பியுள்ளது. ஆனால் அழைப்பிதழ் கொடுக்கப்படவில்லை என்ற தகவலை அனிருத் தரப்போ, தனுஷ் தரப்போ அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
கிரீஸ் திருமண போட்டோக்களில் தனுஷ் இல்லாதது ஏற்கனவே பேசப்பட்ட நிலையில், இப்போது ரிசப்ஷனுக்கும் கூப்பிடவில்லை என்ற தகவல் வெளியானதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து இருக்கின்றனர். இதற்கிடையே அனிருத் தனது இசை பயணத்தின் 15 வருடம் நிறைவடைந்ததை முன்னிட்டு நேற்று ஒரு நன்றி பதிவு வெளியிட்டிருந்தார். "இசையமைப்பாளராக தனக்கு வாய்ப்பு கொடுத்தவர்கள், ரசிகர்கள், இசை கலைஞர்கள்" என பலருக்கும் அதில் நன்றி தெரிவித்து இருந்தார்.
ரசிகர்கள் கேள்வி
ஆனால் அனிருத்தின் முதல் படமான 3-யில் அவருக்கு வாய்ப்பு அளித்த தனுஷின் பெயர் அந்த பதிவில் இல்லாததை ரசிகர்கள் சுட்டிக்காட்டி வருகிறார்கள். உங்களுடைய முதல் படமே தனுஷ் நடித்த 3 படம் தான், அப்போது 12ம் வகுப்பு படித்து கொண்டு இருந்த உங்களுக்கு இசையமைக்க வாய்ப்பு கொடுத்தது தனுஷ் தானே? அந்த வாய்ப்பை ஐஸ்வர்யா ரஜினிகாந்திடம் ரெக்கமண்ட் செய்தது அவர்தான், அப்படி இருக்கும்போது 15 வருஷ பயணத்தில் அவருக்கு ஒரு நன்றி கூட சொல்லவில்லையே என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள்.
அனிருத் முன்பு பேசியது
அது மட்டும் அல்லாமல் அனிருத் முன்பு தனுஷ் பற்றி பேசியதும் இப்போது மீண்டும் வைரலாகி வருகிறது. திருச்சிற்றம்பலம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அனிருத் தனுஷ் பற்றி மிகவும் பெருமையாக பேசி இருந்தார். அப்போது, "நான் 12 ஆம் வகுப்பு படித்திருந்தபோது என்னுடைய திறமையை கண்டு எனக்கு வாய்ப்பு கொடுத்தவர் தனுஷ். எங்களுடைய கூட்டணியை DnA என்று சொல்வார்கள். அதனால் நான் பெருமை கொள்வேன். D இல்லாமல் நான் கிடையாது என்று அந்த நிகழ்ச்சியில் பேசி இருந்தார்.
விளக்கம் வருமா?
இப்படியெல்லாம் பேசியவர் இப்போது தனுஷை மறந்து விட்டாரே என்று தனுஷ் ரசிகர்கள் கமெண்டில் வருத்தம் தெரிவித்து வருகிறார்கள். ஏற்கனவே தனுஷ் அனிருத் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள், இருவரும் பேசிக்கொள்ளவில்லை என்ற பேச்சு ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்கும்போது இப்போ இந்த பஞ்சாயத்தும் புதியதாக இணைந்து இருக்கிறது. இது குறித்து அனிருத் அல்லது தனுஷ் என இருவரில் யாராவது வெளிப்படையாக பேசினால் தான் உண்மை தன்மை என்னவென்பது தெரியும். ஓம் படத்தின் ப்ரொமோஷனில் தனுஷ் ஏற்கனவே பேசிக் கொண்டிருக்கும் சமயத்தில் இது பற்றிய விளக்கக் கொடுப்பாரா? இன்று பொறத்திருந்து பார்ப்போம்.




Click it and Unblock the Notifications
