
அப்பாவான மகிழ்ச்சியில் செம்பருத்தி சீரியல் கதாநாயகன் வெளியிட்ட பதிவு.. கவிதைகளில் வழியும் பாசம்.!!
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் கதாநாயகனாக நடித்த கதிர் ஒரு குழந்தைக்கு தந்தையாக மாறி இருக்கிறார்.
அப்பாவான மகிழ்ச்சியில் விஜே கதிர் வெளியிட்ட உருக்கமான கவிதைகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
குழந்தை என்றாலே அனைவருக்கும் பிடிக்கும் தான் அதுவும் தனக்கு பிடித்த மாதிரி பெண் குழந்தையே பிறந்துள்ளது என்று கதிர் தன்னுடைய மகிழ்ச்சியை ரசிகர்களோடு பகிர்ந்துள்ளார்.
திருமணத்தை ரகசியமாக வைத்திருந்த சன் டிவி சீரியல் ஜோடி.. குழந்தையை குறித்து வெளியிட்ட பதிவு

நடன திறமை
ஜீ தமிழில் ஒளிபரப்பான டான்ஸ் நிகழ்ச்சி மூலமாக தனது நடன திறமையை காட்டி ரசிகர்கள் பட்டாளத்தை தனக்கென்று உருவாக்கிக் கொண்ட கதிர், அதற்கு பிறகு ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்துள்ளார். ஏழ்மையான குடும்பத்தை சார்ந்த கதிர் ஜீ தமிழில் டான்ஸ் நிகழ்ச்சியின் மூலமாக பலருக்கும் பரீட்சையமாக ஆகிவிட்டார். நடனம் திறமையின் மூலமாக இவருக்கு ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருந்தது.

செம்பருத்தி சீரியல் அருண்
செம்பருத்தி சீரியலில் அருண் கேரக்டரில் கதிர் நடித்திருந்தார். தொடர்ந்து இந்த சீரியலின் கடைசி வரைக்கும் அந்த கதாபாத்திரத்தில் கதிருடைய நடிப்பு அனைவரையும் கவர்ந்திருந்தது. அகிலாண்டேஸ்வரியின் இளைய மகனாக இவருடைய நடிப்பு ஆரம்பத்தில் துறுதுறுப்பாக நடித்த இவர் பின்பு பொறுப்பு சிகாமனியாக மாறிவிட்டார் என்று கூறினாலும் இதுவும் நன்றாகத் தான் இருக்கிறது என்று பலரும் இவருக்கு ஆதரவு கொடுத்து வந்தனர். அந்த சீரியலில் பணக்கார வீட்டு இளைய மகனாகவும், பொறுப்பில்லாமலும் ஆரம்பத்தில் சுற்றி தெரிந்த இவர் பின்பு அண்ணனுக்கு தகுந்த தம்பியாக மாறி இருந்தார்.

முடிவடைந்த செம்பருத்தி சீரியல்
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சிந்து என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணத்திற்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்தி வந்தனர். சில பெண் ரசிகைகள் இவருடைய திருமணம் குறித்து ஃபீல் பண்ணி கருத்துக்களை வெளியிட்டு வந்தனர். இந்த நிலையில் தற்போது இவர் நடித்து வந்த செம்பருத்தி சீரியல் முடிவடைந்து விட்டது. இது இவருக்கு மட்டுமல்லாமல் இவருடைய ரசிகர்களுக்கும் வருத்தத்தை தான் கொடுத்துக் கொண்டிருக்கிறதாம். இதனால் மீண்டும் இவர் எப்போது சீரியலுக்கு வருவார் என்று ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

மகள் வந்தாச்சி
தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு அழகான பெண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களோடு பகிர்ந்து உள்ளார். அது மட்டுமல்லாமல் தன்னுடைய செல்ல மகளுக்கு உருக்கமாக எழுதி இருக்கிறார். அதில், இன்று மகள்கள் தினத்தை கொண்டாடும் ஒவ்வொரு தந்தைக்கும் மகிழ்ச்சி. .!! நானும் என் மகளுடன்! ஆம்..... எங்கள் அழகான இளவரசி வந்து விட்டாள். அவள் தன் வீட்டை என் கைகளில் கண்டாள். அவள் வந்து வீட்டை சொர்க்கத்தின் தூண்டாக மாற்றினாள என்று கேப்டன் கொடுத்து இருக்கிறார். மகளுக்காக, ஆயிரம் உறவுகள் என்னை அழைத்தாலும் "அப்பா" என்ற ஒற்றை வார்த்தையில் என்னை கட்டி இழுக்க வந்த "ஆசை மகளே" ஆயுள் முழுவதும் உந்தன் முழுமதி முகத்தில் மலரும் புன்னகை கண்டே எந்த நாட்கள் நகர வேண்டுமடி வைரமே!! என்று கவிதைகளை உணர்வுபூர்வமாக எழுதியுள்ளார். இவருடைய இந்த பதிவு இருக்கு சின்னத்திரை பிரபலங்களும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.