திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

3 ஆண்டுகளில் அரபிக் கடலில் 10, வங்கக் கடலில் 10.. கேரளாவை தாக்கிய 20 புயல்கள்.. காரணம் என்ன?

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: அரபிக் கடல் மற்றும் வங்கக் கடலில் உருவாகும் புயல்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் கேரள மாநிலம் மீது அதிக கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 3 ஆண்டுகளில் 20 புயல்கள் அந்த மாநிலத்தை பதம்பார்த்துள்ளது.

Recommended Video

    Tauktae Cyclone | Tamilnadu Weatherman மற்றும் வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன? | Oneindia Tamil

    வங்கக் கடல், அரபிக் கடல் ஆகிய இடங்களில் உருவாகும் புயல்கள் தாக்கும் இடங்களில் கேரளாவும் ஒன்று. இந்த புயல்கள் தாக்குவது இல்லாமல் தென்மேற்கு பருவமழையால் கேரளா மாநிலம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

    பொதுவாக அரபிக் கடலில் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு புயல்கள் உருவாகி கேரளாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இவை வருவதும் தெரியாது, போவதும் தெரியாது. சுமாரான பாதிப்பையே ஏற்படுத்திவிட்டு செல்லும்.

    டவ்-தே புயல்.. நாளை மறுநாள் காலை குஜராத்தின் துவாரகை அருகே கரையை கடக்கிறது! டவ்-தே புயல்.. நாளை மறுநாள் காலை குஜராத்தின் துவாரகை அருகே கரையை கடக்கிறது!

    வீரியம்

    வீரியம்

    ஆனால் அண்மைகாலங்களில் இந்த புயல்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அத்துடன் அதன் வீரியமும் அதிகமாகவே காணப்படுகிறது. இதனால் சாலைகள், வீடுகள், பொது சொத்துகள் சேதமடைவதும் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

    புயல்கள்

    புயல்கள்

    கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் கேரளாவை 20 புயல்கள் தாக்கியது என்றால் பார்த்து கொள்ளுங்கள். அதாவது அரபிக் கடலில் உருவான 10 புயல்கள், வங்கக் கடலில் உருவான 10 புயல்கள் என மொத்தம் 20 புயல்கள் கேரளாவுக்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.

    எத்தனை புயல்கள்

    எத்தனை புயல்கள்

    வங்கக் கடலில் 2018ஆம் ஆண்டு தயே, திட்லி, கஜா, பேதெய், ஆகிய புயல்களும், 2019-ஆம் ஆண்டு பாபுக், ஃபனி, புல்புல் ஆகிய புயல்களும் 2020ஆம் ஆண்டு ஆம்பன், நிவர், புரேவி ஆகிய புயல்களும் தாக்கின. அது போல் அரபிக் கடலை எடுத்துக் கொண்டால் 2018ஆம் ஆண்டு சாகர், மேக்குனு, லிபன் ஆகிய புயல்கள் கேரளத்தை தாக்கின.

    என்னென்ன புயல்கள்

    என்னென்ன புயல்கள்

    அது போல் 2019ஆம் ஆண்டு வாயு, ஹிக்கா, கியார், மகா, பவன் ஆகிய புயல்களும் 2020ஆம் ஆண்டு நிசர்கா, கடி ஆகிய புயல்களும் கேரளாவுக்கு பாதிப்பை கொடுத்துள்ளன. இவற்றில் தீவிர புயல்களாக ஆம்பன், கியார் ஆகியவை இருந்தன. இந்த புயல்களால் மணிக்கு 222 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது.

    தீவிர புயல்

    தீவிர புயல்

    அது போல் மேக்னு, ஃபனி, மகா ஆகிய புயல்களின் போது மணிக்கு 160 முதல் 222 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. இது போல் புயல்களின் அதிகரிப்பு ஏன் என்று பார்த்தால், பருவநிலை மாற்றம் மற்றும் உலக வெப்பமயமாதலால் கடலில் உள்ள வெப்பநிலை அதிகரிக்கிறது. இதனால் அடிக்கடி புயல்கள் ஏற்படுவதாக நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

    English summary
    The cyclones formed in Arabian Sea and Bay of Bengal rises and creates concern for Kerala.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X