கேரளாவில் வெடித்த ’மனுஸ்மிருதி’! ஜாதிய அமைப்பை ஆதரித்த ஆதி சங்கராச்சாரியார்- அமைச்சர் சர்ச்சை பேச்சு
திருவனந்தபுரம்: இந்தியாவில் இருக்கும் கொடூரமான ஜாதிய கட்டமைப்புக்கு வக்காலத்து வாங்கி அதன் செய்தித் தொடர்பாளர் போல செயல்பட்டவர் ஆதி சங்கரச்சாரியார் என கேரளா அமைச்சரும் முன்னாள் சபாநாயகருமான எம்பி ராஜேஷ் பேசியிருப்பது பெரும் சர்ச்சையாகி உள்ளது. ஆதி சங்கராச்சாரியாரை இழிவுபடுத்தி கேரளா அமைச்சர் ராஜேஷ் பேசிவிட்டதாக இந்துத்துவா அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
கேரளாவின் வர்கலா சிவகிரி மடத்தில் நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் ராஜேஷ் பேசியதாவது: கேரளாவில் போற்றுதலுக்குரிய ஆச்சாரியார் ஒருவர் இருந்தார் எனில் அது ஸ்ரீநாராயண குரு மட்டும்தான். ஆதி சங்கரச்சாரியார் அல்ல. கேரளாவில் பிறந்த ஆதி சங்கராச்சாரியார்,
மனுஸ்மிருதி அடிப்படையிலான ஜாதிய கட்டமைப்புக்கு ஆதரவானவர். ஜாதிய கட்டமைப்புக்கு செய்தித் தொடர்பாளர் போல பேசியவர்.

ஆனால் ஸ்ரீநாராயண குரு, ஜாதிய கட்டமைப்புக்கு எதிராக, ஜாதிய கட்டமைப்பை ஒழிக்கப் போராடியவர். ஜாதிய கட்டமைப்பை முழுமையாகவும் உறுதியாகவும் ஆதரித்தவர் ஆதி சங்கராச்சாரியார். சமூகத்தில் நிலவும் ஜாதிய ஒடுக்குமுறைகளுக்கு காரணமானவர் ஆதி சங்கராச்சாரியார். இவ்வாறு கேரளா அமைச்சர் ராஜேஷ் விமர்சித்திருந்தார்.
கேரளா அமைச்சர் ராஜேஷின் இந்த கருத்துக்கு மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான முரளீதரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் முரளீதரன் கூறுகையில், இந்து மதத்துக்குள் அமைச்சர் ராஜேஷ் பிரிவினையை ஏற்படுத்துகிறார். ஆதி சங்கராச்சாரியார் குறித்து பொய்யான கருத்தை பேசி வருகிறார். ஜாதிய பாகுபாட்டை கூர்மைப்படுத்தி ஓட்டுகளைப் பெற முயற்சிக்கிறார். சங்கராச்சாரியாரை அவமதிப்பதை நாங்கள் பொறுத்துக் கொள்ள முடியாது என்றார். இதேபோல் பல்வேறு இந்துத்துவா அமைப்பினரும் அமைச்சர் ராஜேஷ் கருத்தை விமர்சித்து வருகின்றனர்.
-
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம்












Click it and Unblock the Notifications