திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஃபேஸ்புக் அட்டூழியம்.. 17 வயது பெண்ணின் துணிச்சல்.. வீட்டு வாசலிலேயே சுருண்டு விழுந்த பரிதாபம்

பலருடன் நட்பு வைத்திருந்த காதலியை கத்தியால் அறுத்து கொன்றுவிட்டார் இளைஞர்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: சோஷியல்மீடியா எந்த அளவுக்கு மனிதகுலத்துக்கு உபயோகமாக இருக்கிறதோ, அதே அளவுக்கு அதை தவறாக பயன்படுத்துபவர்களுக்கு கெடுதலாகவும் அமைந்துவிடுகிறது.. சிலசமயம் அவர்களது உயிருக்கே உலை வைத்தும் விடுகிறது.. அப்படி ஒரு சம்பவம்தான் கேரளாவில் நடந்துள்ளது.

வடசேரி கரையைச் சேர்ந்த திவ்யாவுக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 17 வயதுதான் ஆகிறது.. சம்பவத்தன்று நள்ளிரவில் தன்னுடைய வீட்டை தட்டி உள்ளார்.. இந்த நேரத்தில் யார் வீட்டை தட்டுவது என்று பெற்றோர் கதவை திறந்து பார்த்தனர்.

அங்கே தங்களுடைய மகள் திவ்யா வாசற்படியில் நின்றிருப்பதை பார்த்து பதறிவிட்டனர்.. அவளது கழுத்து அறுக்கப்பட்டிருந்தது.. ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது.. இதை பார்த்து அலறிய பெற்றோர்கள், உடனடியாக மகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

செப்டம்பரில் தென் மாநில முதலமைச்சர்கள் மாநாடு! திருவனந்தபுரம் செல்கிறார் ஸ்டாலின்! செப்டம்பரில் தென் மாநில முதலமைச்சர்கள் மாநாடு! திருவனந்தபுரம் செல்கிறார் ஸ்டாலின்!

 பவ்யம் திவ்யா

பவ்யம் திவ்யா

தீவிரமான சிகிச்சையும் தரப்பட்டு வருகிறது.. திவ்யா எப்போதுமே ஃபேஸ்புக்கில் மூழ்கி இருப்பவராம்.. யார் நட்பு விடுத்தாலும், உடனே ஏற்றுக் கொள்வாராம்.. அடுத்த செகண்டே, அவர்களிடம் சாட்டிங்கிலும் ஈடுபட்டு விடுவாராம். அப்படித்தான் பள்ளிக்கல் பகுதியைச் சேர்ந்த கோபு என்ற இளைஞர், பேஸ்புக் மூலம் திவ்யாவுக்கு அறிமுகமாகி உள்ளார்.. வழக்கம்போல் திவ்யா இவரிடம் சேட்டிங் செய்து வந்துள்ளார்.. ஒருகட்டத்தில் கோபு, திவ்யாவை காதலிப்பதாக சொல்லி உள்ளார்.. திவ்யாவும் பதிலுக்கு காதலிப்பதாக சொல்லி உள்ளார்.. திவ்யாவை கோபு உயிருக்கு உயிராக விரும்பினார்..

மெசேஜ்ஜா

மெசேஜ்ஜா

ஆனால் அதேசமயம், திவ்யா நள்ளிரவு நேரங்களிலும் ஃபேஸ்புக்கில், வேறு சில நபர்களுக்கு மெசேஜ் செய்வதாக கோபு சந்தேகப்பட்டார்.. மிட்நைட்டிலும் ஆன்லைனில் இருக்கிறாயே என்று கோபு கேட்டதற்கு, அப்படி இல்லவே இல்லை என்று திவ்யா மறுத்துள்ளார்.. வேறு யாருடனாவது நட்புடன் பழகுகிறாயா, மெசேஜ் செய்கிறாரா? என்று கோபு கேட்டதற்கும், திவ்யா அதற்கும் மறுப்பு சொல்லி உள்ளார்.. கோபுவுக்கு சந்தேகம் தீரவில்லை என்றாலும், திவ்யா மீதுள்ள காதலால், தகராறு எதுவும் தகராறு செய்யாமல் இருந்தார்.

 மெசேஞ்சர்

மெசேஞ்சர்

இந்நிலையில், 'அகில்' என்ற இளைஞர் திவ்யாவுக்கு முகநூலில் நட்பு அழைப்பு விடுத்தார்.. திவ்யாவும் அவரது நட்பை ஏற்றதுடன், வழக்கம்போல் மெசேஞ்சரில் சேட்டிங் செய்ய துவங்கி உள்ளார்.. சில நாட்களில் திவ்யாவை காதலிப்பதாக அகில் கூறியுள்ளார்.. இதைக்கேட்டு சந்தோஷப்பட்ட திவ்யா, தானும் காதலிப்பதாக அகிலிடம் சொல்லி உள்ளார்.. ஒருநாள் திவ்யாவை நேரில் பார்க்க வேண்டும் என்று அகில் சொல்லவும், திவ்யாவும் அன்றைய தினம் இரவே தன்னுடைய வீட்டிற்கு பக்கத்தில் வருமாறு அகிலிடம் சொல்லி உள்ளார்.

 ஹெல்மெட்

ஹெல்மெட்

நள்ளிரவில் வீட்டில் அனைவரும் தூங்கியபிறகு, கதவை திறந்து கொண்டு வெளியேறியுள்ளார் திவ்யா.. அப்போது நள்ளிரவு ஒன்றரை மணி ஆகியிருந்தது.. சொன்னபடியே, வீட்டு பக்கத்தில் காத்திருந்தார் கோபு.. தலையில் ஹெல்மட் அணிந்து பைக் மீது உட்கார்ந்திருந்தார்.. அகில் அருகில் சென்ற திவ்யா, இந்த நேரத்தில்தான் யாருமில்லையே, ஹெல்மெட்டை கழற்றுமாறு சொல்லியுள்ளார். அகிலும் ஹெல்மெட்டை கழற்றியுள்ளார்.. அப்போதுதான் அது தன்னுடைய காதலன் கோபு என்பதை அறிந்து திவ்யா அதிர்ச்சி அடைந்தார்..

 குற்றுயிரும் குலையுயிரும்

குற்றுயிரும் குலையுயிரும்

நள்ளிரவு நேரத்தில் முன்பின் தெரியாத ஒருத்தனை இப்படித்தான் வந்து பார்ப்பதா? காதலன் நான் இருக்கும்போது, இன்னொருவனை சந்திப்பதற்காக நள்ளிரவில் வீட்டை விட்டு வரும் அளவிற்கு உனக்கு தைரியமா? என்று கேட்ட கோபு, கையோடு கொண்டு வந்திருந்த கத்தியால், திவ்யாவின் கழுத்தை அறுத்துவிட்டு, பைக்கில் இருந்து தப்பிச்சென்று விட்டான்.. அதற்கு பிறகுதான் குற்றுயிரும் குலையுயிருமான திவ்யா, தன் வீட்டுக்கதவை தட்டியுள்ளார்.. இவ்வளவும் பெற்றோர்களிடம் சொல்லிய திவ்யா, கடைசியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரையும் விட்டுவிட்டார்.. இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

 கிஃப்ட் இந்தா

கிஃப்ட் இந்தா

பரிசு ஒன்றை தரவேண்டும், அதற்காக நேரில் சந்திக்க வேண்டும் என்று அகில் என்ற கோபு திவ்யாவிடம் சொன்னாராம். பைக்கில் ஹெல்மெட்டுடன் கோபு உட்கார்ந்திருக்கவும், முகத்தை சரியாக பார்க்க முடியவில்லை, ஹெல்மெட்டை கழட்டு என்று திவ்யா கேட்டாராம்.. இறுதியில், திவ்யாவின் கழுத்தை அறுத்த கோபு, அவரிடமிருந்து செல்போனையும் பறித்து கொண்டு தப்பியது தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.. அத்துடன், திவ்யா வேறு யார் யாருடன் சேட்டிங் செய்திருக்கிறார் என்றும் கோபு ஆராய்ந்துள்ளார்.. இப்போது போலீசார் அந்த செல்போனை, கோபுவிடம் இருந்து பறித்து, இவர்கள் அனைவரின் சேட்டிங்கையும் ஆராய்ந்து வருகிறார்களாம்.

English summary
Crime in Kerala and 17 year old girl attacked by boy friend due to illegal relationship
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X