Cyclone Tauktae: அரபிக்கடலில் தாக்டே புயல்... கேரளாவில் ஐந்து மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்
அரபிக்கடலில் உருவாகும் தாக்டே புயல் காரணமாக கேரளாவின் இடுக்கி. காசர்கோடு, கோழிக்கோடு. வயநாடு,கண்ணூர் மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. இந்த ஐந்து மாவட்டங்களுக்கும் ரெட் அலெர்ட் விடுக
திருவனந்தபுரம்: அரபிக்கடலில் உருவாகும் தாக்டே புயல் காரணமாக கேரளாவின் இடுக்கி. காசர்கோடு, கோழிக்கோடு. வயநாடு,கண்ணூர் மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. இந்த ஐந்து மாவட்டங்களுக்கும் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Recommended Video
அரபிக்கடலின் தென்கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி படிப்படியாக தீவிரமடைந்து அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெற்று புயலாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு தாக்டே என பெயரிடப்பட்டுள்ளது. புயல் காரணமாக கேரளாவில் கனமழை அதிதீவிர கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
கேரளாவின் இடுக்கி. காசர்கோடு, கோழிக்கோடு. வயநாடு,கண்ணூர் மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த 5 மாவட்டங்களில் சராசரியாக 204 மி மீ மழை பதிவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அதே போல கோட்டையம், எர்ணாக்குளம், திரிச்சூர், மலப்புரம், பாலக்காடு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த 5 மாவட்டங்களில் சராசரியாக 115 மிமீ மழை பதிவாக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்தனம் திட்டா, ஆலப்புழா மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

புயல் சின்னம்
இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரபிக்கடலின் தென்கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது படிப்படியாக தீவிரமடைந்து நாளை காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெற்று புயலாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அரபிக்கடலில் தாக்டே புயல்
இதற்கு தாக்டே என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது இதையடுத்து வடக்கு - வடமேற்கு திசையில் குஜராத் மற்றும் பாகிஸ்தான் கடலோரப் பகுதிகளை நோக்கி புயல் நகரக்கூடும். வரும் 18ஆம் தேதி குஜராத் கடலோரப் பகுதிகளை சென்றடையும் என்று தெரிகிறது.

அதி கனமழை
மாநிலத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், ஜூலை 25 ஆம் தேதி வரை இடுக்கி, காசர்கோடு, கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர் ஆகிய இடங்களில் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் வெளியிட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் அதிக நிவாரண முகாம்களைத் திறப்பதன் மூலமும், அதிக ஆபத்துள்ள பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றுவதன் மூலமும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க மாநில அரசு எச்சரிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியான மழை காரணமாக நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

கனமழைக்கு வாய்ப்பு
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 54.22 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மண் சரிவுகள் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம் மற்றும் பாலக்காடு ஆகிய இடங்களில் ஜூலை 25 வரை ஆரஞ்சு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் 115 மி.மீ வரை மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு அறிவிப்பு
ஜூலை 25 வரை பத்தனம்திட்டா மற்றும் ஆலப்புழாவில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலோரப் பகுதியில் மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்வதை தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல் அலைகள் 4.3 மீட்டர் வரை உயரக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications