கவன்வர் யாத்திரை தவறு என்றால்.. பக்ரீத் கொண்டாட்டங்களும் தவறு தான்.. காங்கிரஸ் மூத்த தலைவர் தாக்கு
திருவனந்தபுரம்: கொரோனா காலத்தில் கன்வர் யாத்திரை தவறு என்றால் பக்ரீத் கொண்டாட்டங்களும் தவறு தான் எனக் கூறியுள்ள காங்கிரஸ் தேசிய செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, கேரள அரசு பக்தீத்தை முன்னிட்டு தளர்வுகளை அறிவித்துள்ளதை விமர்சித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக உச்சத்தில் இருந்து கொரோனா இப்போது தான் கட்டுக்குள் வந்துள்ளது. இன்று நாட்டில் 41 ஆயிரம் பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம் கொரோனா 2ஆம் அலை இன்னும் முழுமையாக முடியவில்லை என்பதால் மாநில அரசுகள் தளர்வுகளை அறிவிக்கும்போது உச்சபட்ச கவனத்துடன் செயல்பட வேண்டும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

காங்கிரஸ் விமர்சனம்
இந்நிலையில் கேரள அரசு பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சில தளர்வுகளை அறிவித்துள்ளது. இதை அம்மாநில காங்கிரஸ் கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் தேசிய செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்வி தனது ட்விட்டரில், "கேரளாவில் பக்ரீத் கொண்டாட்டங்களுக்கு 3 நாட்கள் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது சரியான நடவடிக்கை இல்லை. குறிப்பாக தற்போது அங்கு கொரோனா பரவலும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.. கொரோனா காலத்தில் கன்வர் யாத்திரை தவறு என்றால், பக்ரீத் கொண்டாட்டங்களும் தவறு தான்" என அவர் விமர்சித்துள்ளார்.

கன்வர் யாத்திரை
கொரோனா பரவல் காரணமாக வட மாநிலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற கன்வர் யாத்திரையை உத்தரகண்ட் அரசு ரத்து செய்வதாக அறிவித்தது. அதேநேரம் உத்தரப் பிரதேச அரசு கன்வர் யாத்திரைக்கு அனுமதி அளிக்கவுள்ளதாகத் தெரிவித்திருந்தது. கொரோனா அச்சம் இன்னும் விலகாத சமயத்தில் கன்வர் யாத்திரைக்கு அனுமதி அளிக்கப்பட்டதைப் பலரும் விமர்சித்திருந்தனர்.

உபி அரசு
மேலும், இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தானாக முன் வந்து வழக்கையும் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கு விசாரணையில் நீதிபதிகள், "கொரோனா காலத்தில் ஏன் இப்படியொரு முடிவு? இந்திய மக்கள் முற்றிலும் குழப்பத்தில் உள்ளனர். மக்களை மேற்கொண்டு குழப்ப வேண்டாம்" எனக் கடுமையாக விமர்சித்திருந்தனர். இதையடுத்து கனவர் யாத்திரையை ரத்து செய்வதாக உத்தரப் பிரதேச அரசு அறிவித்துள்ளது.

கேரளா
அதேநேரம் தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் வைரஸ் பாதிப்பு மெல்ல மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அங்கு நேற்று மட்டும் 16150 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில், பக்ரீத் காரணமாக கொரோனா ஊரடங்கில் கேரள அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது. துணிக்கடைகள், எலக்டிரிக் கடைகள், நகைக்கடைகள் செயல்படும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தாக்கு
அதேபோல குறைந்தது ஒரு டோஸ் வேக்சின் எடுத்துக் கொண்டவர்கள், 40 பேர் வரை வழிபாட்டுத் தளங்களில் பிரார்த்தனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கேரள அரசின் இந்த உத்தரவை அம்மாநில எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர். கொரோனா மற்றும் ஜிகா வைரஸ் அதிகரித்து வரும் சூழ்நிலையில் ஏன் இதுபோன்ற தளர்வுகள் எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications