ஆண்களே பொறாமைப்படுறாங்களாம்.. மீசை வளர்க்கும் பெண்.. கேரள மீசைக்காரி ஷைஜா! கலக்கும் படங்கள்
திருவனந்தபுரம்: கேரளாவில் இளம் பெண் ஒருவர் மீசை வளர்க்கும் முயற்சிக்குப் பலரது ஆதரவும் கிடைத்துள்ளது.
கேரள மாநிலம் கண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர் ஷைஜா. 34 வயதான இவர் தன்னை மீசைக்காரி என்றே அறிமுகம் செய்து கொள்கிறார்.
டீன் ஏஜ் பருவத்தில் இருந்த சமயத்தில் இவருக்கு மீசை இருக்கும் இடத்தில் கீழே முடி வளர தொடங்கி உள்ளது. முதலில் குறைந்த அளவே முடி இருந்ததால் அதைக் கண்டுகொள்ளவில்லை.

கேரளா
இருப்பினும், காலப்போக்கில் முடி அதிகமாக வளரத் தொடங்கி உள்ளது. இதனால் நாளடைவில் அந்த பெண்ணுக்கு மீசை வளரத் தொடங்கி உள்ளது. இருப்பினும், தனக்கு மீசை வளர்வதை நினைத்து ஒருபோதும் ஷைஜா கவலை அடையவில்லை. அப்போது சிலர் அவரை மீசைக்காரி என்று கிண்டல் செய்யத் தொடங்கினர். இருப்பினும், அப்போதும் கூட அவர் மீசையை ஷேவ் செய்ய வேண்டும் என்று நினைத்ததில்லையாம்.

ஆண்கள் ரியாக்ஷன்
மீசையை வைத்துக் கிண்டல் செய்வதையே தனது அடையாளமாக மாற்றிக் கொள்ள முடிவு செய்தார். அனைவரிடமும் தன்னை மீசைக்காரி என்று கூறியே அறிமுகம் ஆகிறார். மேலும், சமூக வலைத்தள பக்கங்களுக்கும் மீசைக்காரி என்ற பெயரையே வைத்துள்ளார். பல ஆண்களும் ஷைஜாவின் இந்த முயற்சியைப் பாராட்டி வருகின்றனர். இருப்பினும், சிலர் இந்த மீசை ஒர்ஜினல் மீசைத் தானே என்று சந்தேகத்துடனேயே பார்க்கிறார்களாம்.

பிரச்சினை இல்லை
இன்னும் சிலரோ பெண்ணுக்கு எதற்கு இப்படி வினோத ஆசை என்றும் அறிவுரை கூறுகிறார்கள். இது தொடர்பாக ஷைஜா கூறுகையில், "மீசை இருப்பதில் எனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. எனது கணவருக்கும் குடும்பத்தினருக்கும் கூட இதில் பிரச்சினை இல்லை என்ற போது நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. இதை எல்லாவற்றையும் விட மீசை என்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது" என்பதே ஷைஜாவின் பதிலாக உள்ளது.

காதல்
மேலும், ஷைஜா இது பற்றிக் கூறுகையில், "நான் என் மீசையைக் காதலிக்கிறேன். என்ன கொடுத்தாலும் அதற்காக மீசையை ஷேவ் செய்ய மாட்டேன். கிண்டல் செய்கிறார்கள் என்பதற்காக மீசையை அகற்ற முடியாது. பள்ளி, கல்லூரி மற்றும் வேலை பார்க்கும் இடங்களில் நான் பிரச்சினைகளை எதிர்கொண்டு இருக்கிறேன். ஆனால், மீசையை எடுக்க வேண்டும் என ஒரு நாளும் யோசித்தது இல்லை" என்றார்.

கணவர்
கணவர் லட்சுமணனும் ஷைஜாவின் மீசை காதலுக்குத் தடை போடவில்லை. இதுவரை ஒரு வார்த்தை கூட ஷைஜாவின் மீசை பற்றி லட்சுமணன் தவறாகப் பேசியது இல்லையாம். எட்டாம் வகுப்பு படிக்கும் மகள் அவிஷ்காவும் தாய்க்கு மீசை இருப்பதை மகிழ்ச்சியாகவே பார்க்கிறார். ஷைஜா ஒரு ஆணாகப் பிறக்க வேண்டும் என்றும் தப்பித் தவறி பெண்ணாகப் பிறந்துவிட்டதாகச் செல்லமாகக் கிண்டல் செய்கிறார்கள் ஷைஜேவின் உறவினர்கள்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications