முதல் வெற்றியை எதிர்நோக்கும்... கேரள முதல்வர் பினராயி விஜயனின் மருமகன்.. 15000 வாக்குகள் முன்னிலை
திருவனந்தபுரம்: கேரளாவில் சட்டசபை தேர்தலில் முதல்வர் பினராயி விஜயனின் மருமகன் சுமார் 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளார்,
கேரளாவில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாகச் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இன்று கேரளா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தற்போதுவரை தமிழகத்தில் திமுக கூட்டணி, புதுவையில் என்ஆர் காங்கிரஸ் கூட்டணி, மேற்கு வங்கத்தில் திரிணாமுல், அசாமில் பாஜக ஆகிய கட்சிகள் அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளன.

பினராயி விஜயன் மருமகன்
கேரளா சட்டசபை தேர்தலில் முதல்வர் பினராயி விஜயனின் மருமகனும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞரணி தலைவருமான முஹம்மது ரியாஸ் பேபூர் தொகுதியில் களமிறங்கியிருந்தார். பேபூர் தொகுதி காலம் காலமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கட்சி வலுவாக இருக்கும் இடங்களில் ஒன்றாகும். இதனால் பேபூர் தொகுதியில் முஹம்மது ரியாஸ் எளிதில் வெற்றி பெற்றுவிடுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

15 ஆயிரம் வாக்குகள்
அதேபோல இன்று காலை முதலே முஹம்மது ரியாஸ் பேபூர் தொகுதியில் முன்னிலையில் இருந்தார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பி.எம். நியாஸைவிட சுமார் 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளார். முன்னதாக கடந்த 2009இல் கோழிக்கோடு மக்களவை தொகுதியில் போட்டியிட்ட முஹம்மது ரியாஸ், 1000க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்தார்.

இடதுசாரிகளுக்குப் பெரும்பான்மை?
கேரளாவில் மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் இடதுசாரிகள் கூட்டணி 94க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதேபோல காங்கிரஸ் கூட்டணி 43 இடங்களில் முன்னணியில் உள்ளது. அதேநேரம் பாஜக வெறும் மூன்று தொகுதிகளில் மட்டுமே முன்னணியில் உள்ளது. நேமம், பாலக்காடு, மஞ்சேஸ்வரம் ஆகிய மூன்று தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது.

40 ஆண்டுகளில் முதல்முறை
இன்று வாக்கு எண்ணிக்கை முழுவதும் இதே நிலை தொடர்ந்தால் இடதுசாரிகள் மீண்டும் ஆட்சி அமைக்கும். கேரளாவில் இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மாறி மாறியே ஆட்சி அமைத்துள்ளன. தொடர்ந்து இரண்டு தேர்தல்களில் ஒரே கட்சி வென்றதில்லை. கடந்த 40 ஆண்டுகளில் முதல்முறையாகக் கேரளாவில் தொடர்ந்து இரண்டாவது முறையாக இடதுசாரிகள் ஆட்சி அமைக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications