மர்ம தேசமான "கடவுளின் தேசம்"! போலீஸ் காவலில் கேரளா நரபலி கொலையாளிகள்.. என்னென்ன மர்மங்கள் விலகுமோ?
திருவனந்தபுரம்: கேரள நரபலி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மூவரையும் 12 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்படும் நிலையில் பல்வேறு மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படும் என தெரிகிறது.
கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் எலாந்தூர் கிராமத்தில் கடவந்தரா பகுதியை சேர்ந்தவர் ரோஸ்லின். இவருக்கு 50 வயதாகிறது. இவர் லாட்டரி சீட்டு விற்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.
இவர் கடந்த செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி முதல் காணாமல் போனார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அவரது செல்போன் சிக்னலை வைத்து ஆய்வு செய்த போது ரோஸ்லின் கடைசியாக பத்தனம்திட்டா மாவட்டம் திருவல்லா பகுதியில் சிக்னல் இருந்தது.

சிசிடிவி காட்சிகள்
சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வந்த நிலையில் ரோஸ்லின் மசாஜ் சிகிச்சையாளரான பகவந்த் சிங் வீட்டருகே சென்றிருந்தது தெரியவந்தது. இதனிடையே கலடி பகுதியை சேர்ந்த தமிழகத்து பெண் பத்மா என்பவரை கடந்ஜ ஜூன் மாதம் முதல் காணவில்லை என்ற புகார் எழுந்தது. அந்த புகாரின் பேரில் அவரது செல்போன் எண்ணை வைத்து போலீஸார் ஆய்வு செய்தனர்.

செல்போன் சிக்னல்
அப்போது அவரது செல்போன் சிக்னலும் பகவந்த் சிங் வீட்டருக்கே இருந்தது. இதனால் இருவரையும் பகவந்த் சிங் தரப்புதான் ஏதோ செய்திருக்க வேண்டும் என கருதினர். இதையடுத்து விசாரணையில் பகவந்த் சிங், அவரது மனைவி லைலா மற்றும் மந்திரவாதி முகமது ஷபி ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இரு பெண்களும் கடுமையாக சித்ரவதை செய்யப்பட்டு நரபலி கொடுக்கப்பட்டது தெரியவந்தது.

லைலாவுடன் உல்லாசம்
பகவந்த் சிங்கின் மனைவி லைலாவுக்கு முகமது ஷபி பழக்கமாகியுள்ளார். இருவரும் தனிமையில் உல்லாசமாக பல முறை இருந்துள்ளனராம். இன்னும் சொல்ல போனால் பகவந்த் சிங்கை கொலை செய்து விட்டு ஷபியுடன் லைலா செல்ல திட்டமிட்டிருந்தாராம். இந்த நிலையில் நரபலி கொடுத்தால் விரைவில் பணக்காரராகலாம் என முகமது ஷபி கூறியதன் பேரில் பகவந்த் சிங் வீட்டிற்கு தனக்கு தெரிந்த பத்மாவையும் ரோஸ்லினையும் ஷபி அழைத்து வந்துள்ளார்.

ஆபாச படத்தில் நடிக்க வாய்ப்பு
அவர்களுக்கு ஆபாச படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக ஆசை வார்த்தை கூறி முகமது ஷபி, இரு பெண்களையும் பகவந்த் சிங் வீட்டிற்கு வரவழைத்து அவர்களின் மார்பகங்களை அறுத்து, பிறப்புறுப்பில் கத்தியை நுழைத்து மிகக் கொடூரமான முறையில் கொன்றுவிட்டு அவர்களின் உடலை துண்டு துண்டாக வெட்டியது தெரியவந்தது.

நரபலி சம்பவங்கள்
இந்த நிலையில் இவர்கள் இதற்கு முன்னர் இது போல் நரபலி சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனரா என்பதை விசாரிக்க கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் போலீஸார் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை ஏற்ற நீதிபதி குற்றம்சாட்டப்பட்ட மூவரையும் 12 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்?












Click it and Unblock the Notifications