பைக்ல பெட்ரோல் கம்மியா இருக்கு..கட்டுங்க ரூ.250 அபராதம்..வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த போலீஸ்!
திருவனந்தபுரம்: கேரளாவில் இருசக்கர வாகனத்தில் போதிய பெட்ரோல் இன்றி பயணித்ததற்காக ஒருவருக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் போக்குவரத்து துறை போலீசாரிடம் சிக்கி நாயகர்களும், காமெடி நடிகர்களும் அபராதம் செலுத்தும் காட்சியை பார்த்திருப்போம். அதில் அபராதங்கள் விதிப்பதற்காக வித்தியாச வித்தியாசமாக காரணங்கள் கூறப்படும். அண்மையில் காருக்கு ஹெல்மெட் போடவில்லை என்றும் போலீசார் அபராதம் விதித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்படி சைக்களிக்கு லைசன்ஸா என்ற கேட்கும் வகையில் அவ்வப்போது சில சம்பவங்கள் இந்தியாவில் நடைபெறும்.

அந்த வகையில், போதிய பெட்ரோல் இன்றி இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டதற்காக கேரளாவில் நபர் ஒருவருக்கு ரூ.250 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவின் முக்கியப் பகுதியில் பேசில் ஷ்யாம் என்பவர் தனது புல்லட் வாகனத்தில் தனது அலுவலகத்திற்கு புறப்பட்டுள்ளார். அப்போது சிறிது நேரம் தாமதமானதால், ஒருவழிச்சாலையின் எதிர்புறம் இரு சக்கர வாகனத்தை ஓட்டியுள்ளார். இதனை கண்ட போலீசார், ஷ்யாமிற்கு ரூ.250 அபராதம் விதித்து சலான் கொடுத்துள்ளார்.
அதனை கட்டுவிட்டு அலுவலகம் சென்றபோது, சலானை பார்த்துள்ளார். அதில் போதிய பெட்ரோல் இல்லாததால் அபராதம் விதிக்கப்பட்டதாக காரணம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை புகைப்படம் எடுத்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் அதிகமானோரால் பகிரப்பட, அவர் இந்த விளக்கத்தை கொடுத்துள்ளார். ஆனால் இதுபோன்ற காரணங்களுக்கு அபராதம் விதிக்கலாமா என்ற கேள்வியும் வாகன ஓட்டிகள் மத்தியில் எழுந்துள்ளது.
அதற்கு பதிலளிக்கும் வகையில் ஆய்வு செய்து பார்க்கையில், பொதுப் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களில் குறிப்பிட்ட சதவிகிதம் பெட்ரோல் அல்லது டீசல் நிரப்பட்டிருக்க வேண்டும். ஒருவேளை அப்படி நிரப்பப்படவில்லை என்றால் வாகனத்தின் உரிமையாளருக்கு ரூ.250 அபராதம் விதிக்கலாம். ஆனால் இந்த விதிமுறை தனியார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு பொறுந்தாது.
இருந்தும் இதுபோன்ற காரணங்களுக்காக போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதிக்கலாம் என்ற விதிமுறைகள் வாகன பயன்பாட்டாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications