கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கரம்.. கேரளாவில் நிலச்சரிவு.. 10 மாவட்டங்களுக்கு பறந்த ஆரஞ்ச் அலர்ட்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல மாவட்டங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அங்கு 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், ஆகஸ்ட் 5 வரை கனமழை நீடிக்கும் என்றும் எச்சரித்துள்ளது. மேலும், மலப்புரம் மாவட்டத்தில் எடப்பால் அருகே நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதனால் கேரளாவில் பதற்றமான சூழலே நிலவி வருகிறது.

இந்தாண்டு தென்மேற்கு பருவமழை கொஞ்சம் தாமதமாகவே ஆரம்பித்தது. நடுவிலும் கூட சில நாட்கள் பெரியளவில் மழை பெய்யாத நிலையில், இப்போது மீண்டும் மழை தீவிரமடைய ஆரம்பித்துள்ளது. குறிப்பாக நமது அண்டை மாநிலமான கேரளாவில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Kerala Kerala rains Oranga alertm Kerala landslides

ஆரஞ்சு அலர்ட்

குறிப்பாக பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர மேலும் சில மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அங்கு கனமழை விடாமல் கொட்டி வரும் சூழலில் 12 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.

நிலைமை மோசம்

ஆறுகளில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், பத்தனம்திட்டா மாவட்டம் மழையினால் மிக கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. அணைகளின் மதகுகள் திறக்கப்பட்டுள்ளன. மலப்புரம் மாவட்டம் கருவரக்குண்டு பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலைமை மோசமாக இருக்கும் சூழலில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்துமாறு பத்தனம்திட்டா மாவட்ட பொறுப்பு அமைச்சரான பி.சி. விஷ்ணுநாத் அறிவுறுத்தியுள்ளார். ஏற்கனவே அங்கு தேசிய பேரிடர் மீட்புப் படை களத்தில் இருக்கும் நிலையில், கூடுதல் டீம் களமிறங்கியுள்ளது. மேலும், திருவனந்தபுரம், பாலக்காடு மற்றும் எர்ணாகுளத்தில் இருந்து தீயணைப்புப் படை வீரர்களும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

நிலச்சரிவு

இதற்கிடையே மலப்புரம் மாவட்டம் கருவரக்குண்டுவில் உள்ள பனக்காடு, எடப்பால் அருகே நிலச்சரிவு ஏற்பட்டது. பத்திரிகையாளர்கள் உட்பட சுமார் நூறு பேர் அங்கு நின்றுகொண்டிருந்தபோது இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. இருப்பினும், நல்வாய்ப்பாக இதில் யாருக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை. அங்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இதுபோன்ற நிலச்சரிவுகள் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. எனவே, பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரண்முலா உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் வடிய குறைந்தது இரண்டு நாட்கள் ஆகும் என்பதால், கூடுதல் நிவாரண முகாம்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது பத்தனம்திட்டா மாவட்டத்தில் மட்டும் 1,669 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மழை தொடரும்

மாநிலம் முழுவதும் ஆகஸ்ட் 5 வரை கனமழை தொடர வாய்ப்புள்ளதாக மாநில வருவாய்த் துறை அமைச்சர் ஏ.பி. அனில்குமார் தெரிவித்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் மாநிலத்தின் பல பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. சனிக்கிழமை மட்டும் இடுக்கி மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் மழை தொடர்பான சம்பவங்களில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேரை காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

அடுத்த சில நாட்களுக்கும் கனமழை தொடரும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தேவையில்லாமல் வெளியே வர வேண்டும் என்றும் பாதுகாப்பான இடங்களில் இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+