திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கேரளா போல ஒரு மாநிலத்தைத்தான் மக்கள் விரும்புவார்கள் - யோகிக்கு பினராயி விஜயன் பதிலடி

கேரளாவில் ஏழைகள் சதவிகிதம் குறைவு... கல்வி கற்றவர்கள் அதிகம் உள்ளதாக பினராயி விஜயன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: உத்தரபிரதேச மாநிலம் கேரளா போல மாறினால் அங்கு ஏழைகள் குறைந்து விடுவார்கள். கல்வி கற்றவர்கள் அதிகரிப்பார்கள் என்று யோகிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன். நிதிஆயோக் அளித்துள்ள அறிக்கையை சுட்டிக்காட்டி பதிவிட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநில சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தில் பேசிய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், தேர்தலின் போது நீங்கள் தவறு செய்துவிட்டால், காஷ்மீர், கேரளா, பெங்கால் போல உத்தரப்பிரதேசம் மாற அதிக நாட்கள் எடுத்துக்கொள்ளாது. இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

என்னுடைய ஐந்து ஆண்டு உழைப்புக்கு, உங்கள் ஓட்டுகள் தான் வாழ்த்தாக அமையும். குற்றம் இல்லாத, பயம் இல்லாத, கலவரம் இல்லாத மாநிலமாக உத்தரப்பிரதேசத்தை மாற்ற உங்கள் ஓட்டு வழிவகுக்கும் என்று பேசி இருந்தார். யோகியின் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

நிதி ஆயோக் அளித்த அறிக்கையின் படி இந்தியாவில் அதிக ஏழைகள் மிகுந்த மாநிலங்களில் பீகார் முதலிடத்தை பிடித்திருந்தது.. ஜார்கண்ட், உத்தரப் பிரதேசம் மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களிலும் இடம்பெற்றிருந்தன... வறுமை குறைந்த மாநிலமாக கேரளா அறிவிக்கப்பட்டது. கேரளாவின் மக்கள் தொகையில் 0.71 சதவீதம் பேர் மட்டுமே வறுமையில் உள்ளனர் என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டப்பட்டிருந்தது முக்கிய கவனத்தை அப்போது ஈர்த்தது.
வறுமை ஒழிப்பு

அந்த அறிக்கையை சுட்டிக்காட்டி பெருமையாக பதிவிட்டுள்ளார் பினராயி விஜயன். உத்தரப் பிரதேச மாநிலம் கேரளாவாக மாறினால், அந்த மாநிலத்திற்கு சிறந்த கல்வி கிடைக்கும். சுகாதார சேவைகள் மேம்படும் என்றும் கூறியுள்ளார். #KeralaStandsout என்ற ஹேஷ்டேக் பதிவிட்டுள்ள பினராயி விஜயன், நிதி ஆயோக் அறிக்கையின் படி கேரளாவில் தேசிய சராசரியான 25.01%க்கு எதிராக 0.71% மக்கள் மட்டுமே ஏழைகளாக உள்ளனர். கேரளாவில் வறுமை ஒழிக்கப்பட்டுள்ளது.

கேரளாவைப் போல உபி மாறினால்.. யோகி ஆதித்யநாத்துக்கு பட்டியலிட்டு பதிலளித்த பினராயி விஜயன்! கேரளாவைப் போல உபி மாறினால்.. யோகி ஆதித்யநாத்துக்கு பட்டியலிட்டு பதிலளித்த பினராயி விஜயன்!

பினராயி விஜயன்

பினராயி விஜயன்

அந்த அறிக்கையை சுட்டிக்காட்டி பெருமையாக பதிவிட்டுள்ளார் பினராயி விஜயன். உத்தரப் பிரதேச மாநிலம் கேரளாவாக மாறினால், அந்த மாநிலத்திற்கு சிறந்த கல்வி கிடைக்கும். சுகாதார சேவைகள் மேம்படும் என்றும் கூறியுள்ளார். #KeralaStandsout என்ற ஹேஷ்டேக் பதிவிட்டுள்ள பினராயி விஜயன், நிதி ஆயோக் அறிக்கையின் படி கேரளாவில் தேசிய சராசரியான 25.01%க்கு எதிராக 0.71% மக்கள் மட்டுமே ஏழைகளாக உள்ளனர். கேரளாவில் வறுமை ஒழிக்கப்பட்டுள்ளது.

தனித்து நிற்கும் கேரளா

தனித்து நிற்கும் கேரளா

கேரளா குழந்தை இறப்பு விகிதத்தில் தனித்து நிற்கிறது. இது உலகெங்கிலும் உள்ள பல வளர்ந்த நாடுகளின் விகிதத்திற்கு சமம் மற்றும் அமெரிக்காவை விட சிறந்தது என்றும் ஆதாரத்துடன் பதிவிட்டுள்ளார். இந்தியா டுடே செய்தி இதழின் மாநில கணக்கெடுப்பு 2021 இல் மகிழ்ச்சி குறியீட்டில் சிறந்த மாநிலமாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது இதன்மூலமும் கேரளா தனித்து நிற்கிறது என்றும் பதிவிட்டுள்ளார்.

ஆரோக்கிய குறியீடு

ஆரோக்கிய குறியீடு

நிதி ஆயோக்கின் இன் நிலையான வளர்ச்சிக் குறியீடு 2020-2021 மற்றும் நிதி ஆயோக்கின் உடல் ஆரோக்கிய குறியீடு 2019-20 82.2 மதிப்பெண்களுடன் முதலிடத்தில் இருப்பதால் கேரளா தனித்து நிற்கிறது என்றும் பதிவிட்டுள்ளார். பொது விவகாரக் குறியீடு 2021-ன் மூலம் இந்தியாவின் சிறந்த ஆளுமை மிக்க மாநிலமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. கேரளா சரியான காரணங்களுக்காக நிற்பதால் தனித்து நிற்கிறது என்றும் பதிவிட்டுள்ளார்.

மக்கள் விருப்பம் அதுவே

மக்கள் விருப்பம் அதுவே

உத்தரபிரதேச மாநிலம் கேரளாவைப் போல மாறினால, அங்கு சமூக நலம் மேம்படும், வாழ்க்கைத் தரம் உயரும், சமூகத்தில் ஒற்றுமையும் நல்லிணக்கமும் நிலவும், ஜாதி, மதத்தின் பெயரால் யாரும் கொலை செய்யப்பட மாட்டார்கள். அதுபோல வளர்ச்சியடைந்த அமைதி சூழ்ந்த மாநிலத்தைத்தான் மக்களும் விரும்புவார்கள் என்று யோகிக்கு தன்னுடைய ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார் பினராயி விஜயன்.

English summary
Kerala CM post his twitter page, Kerala stands Out as it is identified as the best governed State in India by the Public Affairs Index 2021. Kerala stands out since it stands up for the right causes. If the state of Uttar Pradesh becomes like Kerala, the poor there will be reduced. Kerala Chief Minister Pinarayi Vijayan has taken to Twitter to retaliate against Yogi for increasing the number of educated people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X