கேரள விஷு பம்பர் லாட்டரி.. ரூ.12 கோடி தட்டி தூக்கியது பாலக்காடு! கோடிகளை அள்ளிய அதிர்ஷ்டசாலி
திருவனந்தபுரம்: கேரள விஷு பம்பர் லாட்டரி டிக்கெட்டின் குலுக்கல் இன்று பிற்பகல் நடைபெற்றது. இந்த லாட்டரி டிக்கெட்டிற்கு முதல் பரிசாக ரூ.12 கோடி அளிக்கப்படுகிறது. கேரள லாட்டரியில் முதல் பரிசு தட்டி தூக்க போகும் அதிர்ஷ்ட எண் எது என்பதை ஆர்வத்துடன் கேரள சேட்டன்கள் எதிர்பார்த்து இருந்தனர். கடந்த முறையை போல இந்த தடவையும் பாலக்காட்டில் விற்கப்பட்ட லாட்டரிக்கே முதல் பரிசு அடித்துள்ளது.
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரிகள் மிகவும் பிரபலம்.அங்கு நாள்தோறும் லாட்டரி குலுக்கல் நடைபெறும். இதற்கு பரிசுத்தொகையாக ரூ.1 கோடி அளிக்கப்படுகிறது. இதுபோக ஆண்டுக்கு 6 பம்பர் லாட்டரி குலுக்கலும் நடைபெறுகிறது. கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர், சம்மர் பம்பர், விஷு பம்பர், மான்சூன் பம்பர், ஓணம் பம்பர், பூஜா பம்பர் என வருடத்திற்கு ஆறு பம்பர் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் முதல் பரிசாக பல கோடி ரூபாய் கிடைக்கும். குறிப்பாக ஓணம் பம்பரில் முதல் பரிசு ரூ.25 கோடி பரிசுத்தொகை அளிக்கப்படுகிறது.

தற்போது ரூ.12 கோடி முதல் பரிசுத்தொகையாக கொண்ட விஷு பம்பர் லாட்டரி டிக்கெட் விற்பனை நடைபெற்று வந்தது. கடந்த இரண்டு மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த லாட்டரி டிக்கெட்டின் குலுக்கல் இன்று நடைபெறுகிறது.BR103 விஷுபம்பர் லாட்டரியின் குலுக்கல் கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள லாட்டரி தலைமை அலுவலகத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்றது. இதில் முதல் பரிசாக ரூ. 12 கோடி VD 204266 என்ற எண்ணிற்கு விழுந்துள்ளது. பாலக்காட்டில் உள்ள ஜஸ்வந்த என்ற ஏஜென்சியிடம் இருந்து வாங்கப்பட்ட லாட்டரிக்கு முதல் பரிசு அடித்துள்ளது. கடந்த முறையை போலவே இந்த முறையும் தமிழக எல்லையோர மாவட்டத்திற்கு லக் அடித்துள்ளது.
பாலக்காட்டில்தான் அதிக டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு இருந்தது. திருவனந்தபுரம், திருச்சூர் ஆகிய மாவட்டங்கள் டிக்கெட் விற்பனையில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. விஷூ பம்பர் லாட்டரி டிக்கெட்டின் விலை ரூ. 300 ஆகும். மொத்தம் ஆறு சீரியஸ்களில் இந்த டிக்கெட் அறிமுகம் செய்யப்பட்டது. லாட்டரி டிக்கெட் பரிசு விவரம்
முதல் பரிசு: ரூ.12 கோடி-VD 204266
2-வது பரிசு அடித்த எண்கள் விவரம்: தலா ரூ.1 கோடி
1) VA 699731
2) VB 207068
3) VC 263289
4) VD 277650
5) VE 758876
6) VG 203046
3-வது பரிசு தலா ரூ.10 லட்சம்
1) VA 223942
2) VB 207548
3) VC 518987
4) VD 682300
5) VE 825451
6) VG 273186
4-வது பரிசு தலா ரூ.5 லட்சம்
1) VA 178873
2) VB 838177
3) VC 595067
4) VD 795879
5) VE 395927
6) VG 436026
முதல் பரிசு தமிழகத்தின் எல்லையோர மாவட்டமான பாலக்காட்டில் விழுந்து இருப்பதால் அதிர்ஷ்டசாலி இந்த முறை தமிழகத்தை சேர்ந்தவரா என கேரள லாட்டரி பிரியர்கள் ஆர்வத்துடன் தங்கள் டிக்கெட் எண்களை செக் செய்து வருகிறது. கடந்த சம்மர் பம்பரில் முதல் பரிசாக ரூ.10 கோடி பாலக்காட்டில் வாங்கிய டிக்கெட்டிற்கு விழுந்தது. தமிழகத்தின் சேலத்தை சேர்ந்தவருக்கு இந்த முதல் பரிசு விழுந்ததாக சொல்லப்பட்டது. கேரள லாட்டரிகளை பொறுத்தவரை தமிழகம் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட மாநிலங்களில் விற்பனை செய்வது சட்டவிரோதம் ஆகும். தமிழகத்தில் விற்பனை செய்தால் போலீசார் கடும் நடவடிக்கை எடுப்பார்கள். கேரள லாட்டரி பரிசு எண்களை லாட்டரிதுறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் செக் செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications