இது வேற லெவல்.. காலேஜ் கேம்பஸ் உள்ளே ரொமான்ஸ் கூடாது.. என்ஐடி போட்ட ஆர்டர்
காதலர் தினத்தையொட்டி இந்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளதால் மாணவர்கள் மத்தியில் இது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
திருவனந்தபுரம்: காதலர் தினம் இன்னும் சில நாட்களில் வரவுள்ள நிலையில் கோழிக்கோடு என்ஐடி விடுத்துள்ள சுற்றறிக்கை பெரும் விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
எதிர் வரும் பிப்ரவரி 14ம் தேதியன்று காதலர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. காதலர் தினம் 14ம் தேதி தொடங்கினாலும், அதற்கு முன்னாளிலிருந்தே கொண்டாட்டங்கள் தொடங்கி விடுகின்றன. அதன்படி பிப்ரவரி 7ம் தேதி ரோஸ் டே தொடங்குகிறது. இதற்கு அடுத்த நாள் பிரபோஸ் டே பின்பற்றப்படுகிறது. இந்த நாளில் தங்களுக்கு பிடித்தவர்களிடம் தங்கள் காதலை தெரிவிப்பது வழக்கமாக இருக்கிறது. இதன் பின்னர் பிப்ரவரி 9ம் தேதி சாக்லேட் டேவாக கொண்டாடப்படுகிறது.
பெயருக்கு ஏற்றார் போல தங்களுக்கு பிடித்தவர்களுக்கு சாக்லேட் வாங்கிக் கொடுத்து அதன் மூலம் அன்பை வெளிப்படுத்துவது சாக்லேட் டே என அழைக்கப்படுகிறது. இதற்கு அடுத்த நாளான பிப்ரவரி 10ம் தேதி டெடி டே என்று சொல்லப்படுகிறது. அன்றைய தினம் கரடி பொம்மையை வாங்கிக்கொடுத்து தங்களது அன்பை வெளிக்காட்டலாம் இப்படியே 14ம் தேதி வரை ஒரு பெரிய லிஸ்ட் போட்டு கொண்ட இளைஞர்கள் முதல் ரிட்டயர் ஆனவர்கள் வரை லவ்வர்ஸ் டேவை கொண்டாட தயாராகி வருகின்றனர்.

மாணவர்கள்
இளைஞர்கள், வயோதிகர்களை கடந்து மாணவர்கள் மத்தியில்தான் இந்த காதலர் தினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. காதல் பருவம் பள்ளியில் தொடங்கி கல்லூரியில் அதன் நடுத்தர வயதை எட்டிவிடுகிறது. இந்த காலத்தில் காதல் தோல்விகள், இழப்புகள், புதிய காதல், புதிய புதிய நட்புகள் என வாழக்கை பாடம், தன்னுடைய சிலபஸை சீரியசாக கற்றுக்கொடுக்கிறது. அந்த வகையில் கல்லூரி மாணவ/மாணவிகள் எல்லோருக்குமே 'காதலர் தினம்' மிகுந்த எதிர்பார்ப்பை கொடுக்கிறது. இப்படி மாணவர்கள் காதலர் தினத்தை கொண்டாட தயாராகி வருகையில் பலர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

COW HUG DAY
விஷ்வ இந்து பர்ஷித், இந்து மகாசபை, இந்து மக்கள் கட்சி என வலதுசாரி கட்சிகள்/அமைப்புகள், காதலர் தினத்தில் நம்முடைய கலாச்சாரம் கெட்டுவிடுவதாக கூறி இதனை எதிர்த்து வருகின்றன. இந்த நாளில் ஜோடியாக சுற்றுபவர்களை தாக்கி அவர்களுக்கு கட்டாய திருமணமும் செய்து வைக்கின்றனர். இது சட்டப்படி குற்றம் என்றாலும், இதுதான் எங்களுடைய கலாச்சாரத்தை காக்கும் வழிமுறை என்று கூறி வருகின்றனர். இந்நிலையில் மத்திய மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் 'இந்திய விலங்குகள் நல ஆணையமானது' பிப்ரவரி 14ம் தேதியை 'COW HUG DAY'-ஆக கொண்டாட வேண்டும் என்று அறிவித்திருக்கிறது.

உத்தரவு
இந்த அறிவிப்பு வலதுசாரி கட்சிகள் மற்றும் அமைப்புகளின் அரஜாக செயல்பாடுகளின் தொடர்ச்சியாக இருப்பதாக இடதுசாரிகளும், இதர எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த பஞ்சாயத்துகள் ஒருபுறம் ஓடிக்கொண்டிருக்கையில், மறுபுறம் இடதுசாரிகள் ஆட்சி செய்யும் கேரளாவின் கோழிக்கோட்டில் இயங்கி வரும் என்ஐடி (National Institute of Technology) தனது மாணவர்களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில், மாணவர்கள் தங்களது அன்பை வெளிக்காட்டுவது அவர்களை சுற்றி இருப்பவர்களை எரிச்சலடைய செய்யக்கூடாத வண்ணம் இருக்க வேண்டும் என்றும், பொது வெளியில் இப்படி முகம் சுழிக்கும் வகையில் நடந்துக்கொள்ள கூடாது எனவும் கூறியுள்ளது.

காரணம்
கடந்த சில நாட்களாக இது தொடர்பான புகார்கள் வந்ததால் இப்படியான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று கல்லூரி முதல்வர் விளக்கமளித்துள்ளார். மேலும் இது போன்ற செயல்கள் மற்ற மாணவர்களின் படிப்பை கெடுப்பதாகவும், எனவே இந்த உத்தரவை மீறும் மாணவர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார். மாணவர் சங்கத்தினர் இந்த உத்தரவை கடுமையாக எதிர்த்துள்ளனர்.
-
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம்












Click it and Unblock the Notifications