திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாற்றி, மாற்றி பேசும் கேரள அரசு.. சபரிமலையில் 51 இளம் பெண்கள் தரிசனம் செய்யவில்லையாம்!

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில், பருவ வயதை சேர்ந்த 51 பெண்கள் தரிசனம் செய்யவில்லை என்றும், வெறும் 2 பெண்கள்தான் தரிசனம் செய்தனர் என்றும், கேரள தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்தார்.

கேரள சட்டசபையில், இதுதொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் முரளீதரன் உள்ளிட்டோர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து, இன்று, சுரேந்திரன் கூறியதாவது:

Not 51, only 2 women offered prayers in Sabarimala Aayyappa Temple

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட இளம் பெண்கள் 2 பேர்தான் தரிசனம் செய்துள்ளனர். இது தேவசம் போர்டு செயல் அதிகாரி வழங்கிய புள்ளி விவரமாகும் என்று கூறினார்.

ஜனவரி 18ம் தேதி கேரள அரசு, சபரிமலை வழக்கு தொடர்பாக சுப்ரீம் கரோ்ட்டில் தாக்கல் செய்த பதில் மனுவில், மொத்தம் 51 இளம் பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ததாக கூறப்பட்டிருந்தது. ஆனால் அதில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் பெயர்கள் மட்டுமின்றி, ஆண்கள் பெயர்களும் இடம் பெற்றிருந்தன. இந்த விவரத்தை மலையாள டிவி சேனல் ஒன்று வெளியிட்டதால் சர்ச்சை வெடித்தது.

இதனிடையே, இப்போது கேரள அரசு சட்டசபையில் வைத்து அளித்துள்ள அதிகாரப்பூர்வ பதிலில், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் தரிசனம் செய்தது 2 இளம் பெண்கள்தான் என்று கூறியுள்ளது.

கேரள அரசு குறிப்பிட்ட இரு பெண்களும், பிந்து மற்றும் கனக துர்கா என தெரிகிறது. அவ்விருவருக்குமே, வலதுசாரிகளால், உயிருக்கு ஆபத்து இருப்பதாக தகவல் வெளியானதால், போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது நினைவிருக்கலாம்.

English summary
Kerala Devasom Minister Kadakampally Surendran on Monday informed the assembly that the state government has given confirmation about only two women (between 10-50 age) offering prayers in Sabarimala temple.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X