இரண்டு கத்தரிக்கோல்கள்! பெண்ணின் வயிற்றிலேயே வைத்து தைத்த மருத்துவர்கள்.. கேரளாவை அதிர வைத்த சம்பவம்
திருவனந்தபுரம்: கேரளாவில் ஒரு பெண்ணின் வயிற்றில் 5 ஆண்டுகளாக இரண்டு கத்தரிக்கோல்கள் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுகாதாரத்துக்கும், மருத்துவ சிகிச்சைகளுக்கும் பெயர் போன கேரளாவிலேயே இப்படியொரு சம்பவம் நடைபெற்றிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
மகப்பேறு அறுவை சிகிச்சையின் போது அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தவறுதலாக அப்பெண்ணின் வயிற்றிலேயே கத்தரிக்கோல்களை வைத்து தைத்திருப்பது தெரியவந்தது.
கேரளாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.

அரசு மருத்துவமனை என்றாலே..
ஒருகாலத்தில் அரசு மருத்துவமனைக்கு செல்லவே மக்கள் பயந்த காலம் உண்டு. 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை நாட்டு மக்கள் மத்தியில் அரசு மருத்துவமனைகள் என்றாலே ஒருவித அச்சமும், அருவருப்பும் இருந்தது. அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் சரியாக கவனிக்க மாட்டார்கள்; அங்குள்ள அறைகளும், கழிப்பிடங்களும் சுத்தமாக பராமரிக்கப்படாது என்ற எண்ணம் மக்களிடையே காணப்பட்டது. ஆனால், பல மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக இன்று இந்தியாவில் உள்ள பெரும்பாலான அரசு மருத்துவமனைகள் தரத்திலும், சுகாதாரத்திலும் மேம்பட்டுள்ளது. இப்போதுதான், சில வசதி படைத்தவர்கள் கூட அரசு மருத்துவமனையில் சிகிச்சை நன்றாக இருக்கும் என நம்பி செல்ல தொடங்கியுள்ளனர். ஆனால், தற்போது கேரளாவில் நடந்துள்ள சம்பவம் அரசு மருத்துவமனைகள் மீதான நமது பழைய பார்வையை மீண்டும் கொண்டு வந்துள்ளது.

தாங்க முடியாத வயிற்று வலி
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹர்ஷினா (30). இவருக்கு கடந்த 3 வருடங்களாக வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இதையடுத்து, அருகில் உள்ள மருத்துவர்களிடம் சென்று மருந்து, மாத்திரைகளை உட்கொண்டு வந்திருக்கிறார். இந்த சூழ்நிலையில், கடந்த 6 மாதங்களாக தாங்க முடியாத வயிற்று வலியால் ஹர்ஷினா அவதிப்பட்டு வந்திருக்கிறார். பல மருந்துகளை சாப்பிட்ட போதிலும் அவருக்கு வயிற்று வலி குணமாகவில்லை.

வயிற்றுக்குள் இரு கத்தரிக்கோல்கள்
இதையடுத்து, கடந்த மாதம் அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு ஹர்ஷிதாவை அவரது கணவர் அழைத்துச் சென்றார். அப்போது அவரது வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்த போது மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர். ஏனெனில் அவரது வயிற்றில் குறுக்கும் நெடுக்குமாக இரண்டு கூர்மையான கத்தரிக்கோல்கள் இருந்துள்ளன. அவை வீட்டில் பயன்படுத்தப்படும் கத்தரிக்கோல்கள் அல்ல; அறுவை சிகிச்சையில் உபயோகப்படுத்தப்படும் கத்தரிக்கோல்கள் ஆகும். அந்தக் கத்திரிக்கோல்கள் அவரது சிறுநீரக பையை குத்திக் கிழித்துக் கொண்டு இருந்துள்ளன. இதனால்தான் அவருக்கு தாங்க முடியாத அளவுக்கு வயிற்று வலி இருந்துள்ளது.

5 ஆண்டுகளாக வயிற்றுக்குள்..
ஹர்ஷிதா 5 வருடங்களுக்கு முன்பு மகப்பேறு அறுவை சிகிச்சைக்காக கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அவருக்கு 'சி செக்' எனப்படும் அறுவை சிகிச்சை செய்து குழந்தை வெளியே எடுக்கப்பட்டது. அந்த சமயத்தில்தான், மருத்துவர்கள் அவரது வயிற்றில் இரண்டு கத்தரிக்கோல்களை மறந்து வைத்திருப்பது தெரியவந்துள்ளது. 5 வருடங்களாக வயிற்றில் கத்தரிக்கோல்களுடன் அந்தப் பெண் நரக வேதனையில் வாழ்ந்து வந்துள்ளார். இந்த சூழலில், அதே கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் கடந்த 17-ம் தேதி அவரது வயிற்றில் இருந்த கத்தரிக்கோல்கள் அகற்றப்பட்டன.

விளக்கம் கேட்டு நோட்டீஸ்
இதுகுறித்து ஹர்ஷிதா குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர், இந்த விவகாரம் ஊடகங்களிலும் வெளியாகி பூதாகரமானது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தவறிழைத்த மருத்துவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக கோழிக்கோடு அரசு மருத்துவமனை சார்பிலும் சம்பந்தப்பட்ட மருத்துவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications