திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

90 நாளில் 204 இலங்கை விமானங்களுக்கு எரிபொருள்! அசத்தும் திருவனந்தபுரம் விமான நிலையம்! லாபம் என்ன?

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: பொருளாதார நெருக்கடி காரணமாக வெறும் 3 மாதத்தில் 204 இலங்கை விமானங்கள் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பி உள்ளன. இதனால் தரையிரங்கும் கட்டணம், வரி வருவாய் அதிகமாக கிடைக்கிறது.

Recommended Video

    Indian Ocean தான் குறி! China Spy Ship-க்கு முன்பாக Sri Lanka போன Indiaவின் Gift Dornier228

    இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலையில் மக்கள் வீதிகளில் இறங்கி தொடர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து ராஜபக்சேக்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர்.

    தற்போது இலங்கயைில் இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. நாட்டை விட்டு ஓடிய கோத்தபய ராஜபக்சேவை அமெரிக்காவில் தஞ்சமடையலாம் என கூறப்படும் நிலையில் அவர் விரைவில் இலங்கை திரும்பலாம் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் - அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்!6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் - அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்!

     போக்குவரத்து சேவை பாதிப்பு

    போக்குவரத்து சேவை பாதிப்பு

    மேலும் இலங்கையில் நிலவி வரும் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைந்தபாடில்லை. பெட்ரோல், டீசல் உள்பட பல்வேறு பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எரிபொருள் பற்றாக்குறையால் அந்த நாட்டில் போக்குவரத்து சேவை முற்றிலுமாக முடங்கி உள்ளது. இதேபோல் விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது.

    உதவும் திருவனந்தபுரம் விமான நிலையம்

    உதவும் திருவனந்தபுரம் விமான நிலையம்

    இலங்கை ஏர்லைன்ஸ் சார்பில் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் அதிக லாபம் கொடுக்கும் வகையிலான விமான சேவைகள் மட்டும் இந்தியாவின் உதவியுடன் இலங்கையில் இருந்து இயங்கி வருகிறது. அதாவது இலங்கையில் இருந்து புறப்படும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உள்பட பிற நிறுவனங்களின் விமானங்கள் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பி வருகின்றன. இந்த விமான நிலையம் தொழில்அதிபர் அதானி குழுமத்தால் நிர்வகிக்கப்பட்டு வரும் நிலையில் அவருக்கு அதிக லாபம் கிடைக்கிறது. அதோடு மத்திய, மாநில அரசுக்கும் வரிவருவாய் கிடைத்து வருகிறது

    200யை கடந்த விமானங்கள்

    200யை கடந்த விமானங்கள்

    இந்நிலையில் தான் வெள்ளிக்கிழமை இலங்கையில் இருந்து வந்த 4 சர்வதேச விமானங்கள் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பி கொண்டன. இதில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் 3 விமானங்கள் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன், சிட்னி, பிரான்ஸ் தலைநகர் பாரிசுக்கு சென்றன. ஏர் அரேபியா விமானம் ஷார்ஜாவிற்கு புறப்பட்டு சென்றது. இதன்மூலம் இலங்கை பொருளாதார நெருக்கடியால் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பிய விமானங்களின் எண்ணிக்கை என்பது 200யை கடந்துள்ளது.

    90 நாளில் 204 விமானங்கள்

    90 நாளில் 204 விமானங்கள்

    அதாவது மே 27 ம் தேதி முதல் 90 நாட்களுக்குள் மொத்தம் 204 விமானங்கள் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிரங்கி எரிபொருள் நிரப்பி உள்ளன. இதில் பாதிக்கு மேல் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸை சேர்ந்தவையாகும். இதில் மெல்போர்ன், சிட்னி, பாரிஸ் மற்றும் பிராங்பூர்ட் உள்ளிட்ட நகரங்களுக்கு சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் 130 விமானங்கள், துபாய் சென்ற 11 பிளைட்பாய் விமானங்கள், ஷார்ஜா சென்ற 45 ஏர் அரேபியா விமானங்கள், மஸ்கட் சென்ற 9 ஓமன் ஏர் விமானங்கள், பஹ்ரைன் சென்ற 7 கல்ப் விமானங்கள் உள்ளிட்டவை முக்கியமானதாகும்.

    வருவாய் அதிகரிப்பு

    வருவாய் அதிகரிப்பு

    இதன்மூலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிரங்கும் கட்டணமாக மட்டும் சுமார் ரூ.1.5 கோடி வரை கிடைத்துள்ளது. இதுதவிர எரிபொருள் நிரப்பும் செலவு, வரிவருவாய் தனியாக உள்ளது. இதனால் இது மத்திய, மாநில அரசு மற்றும் விமான நிலையத்தை நிர்வகிக்கும் அதானி குழுமத்துக்கு லாபமானதாக பார்க்கப்படுகிறது. இதற்கிடையே தான் தற்போது சில விமானங்கள் தற்போது கொச்சி விமான நிலையத்தையும் எரிபொருள் நிரப்ப பயன்படுத்த துவங்கி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Due to economic crisis, 204 Sri Lankan flights have refueled at Thiruvananthapuram airport in just 3 months. As a result, land tax and tax revenue is increased.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X