குருவாயூர் கோயிலுக்கு துர்கா ஸ்டாலின் திடீர் விசிட்... எடைக்கு எடை நேர்த்திக் கடன் செலுத்தி வழிபாடு
திருவனந்தபுரம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் குருவாயூர் கோயிலுக்கு திடீரென பயணம் செய்தவர் அங்கு துலாபாரம் நேர்த்திக்கடனை செலுத்தி உள்ளார்.
தேர்தல் சமயங்களில் மு.க.ஸ்டாலின் அரசியல் பரப்புரை சுற்றுப்பயணம் செல்லும்போது உடன்வரும் துர்கா ஸ்டாலின், ஆன்மிக யாத்திரையும் செய்துவிடுவது வழக்கம்.
தற்போது மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆன பின்னர் தமிழகத்தில் பிரதான கோயிலுக்கு சென்று வழிபட்டு வருகிறார். அந்த வகையில் குருவாயூர் கோயிலுக்கும் சென்று நேர்த்திகடன் செலுத்தி உள்ளார்.

கடவுள் பக்தி உள்ளவர் துர்கா ஸ்டாலின்
திமுக பகுத்தறிவு சிந்தனைகளை அதிகமாகப் பேசினாலும் ஆன்மிக உணர்வுகள் சம்பந்தமான விஷயங்கள் தற்போதெல்லாம் அதிகமாக தலையிடுவதில்லை என்றே சொல்லலாம். கடவுள் மறுப்பு கொள்கை உடைய திராவிட குடும்பத்தைச் சேர்ந்த துர்கா ஸ்டாலின் கோயில்களில் வழிபாடு நடத்துவதற்கு விமர்சனங்கள் பல எழுந்தன. ஆனாலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் கோயிலுக்கு சென்று வழிபடுவதை எப்போதும் நிறுத்தியதில்லை. இது அவரின் தனிப்பட்ட உரிமை என்ற அளவிலேயே அணுகப்பட்டுள்ளது. அவர் அதிக அளவு ஆன்மிகப் பற்று உள்ளவராகவே திகழ்ந்து வருகிறார் என்பதில் ஐயமில்லை.

கிருஷ்ணர் கோயிலுக்கு விசிட்
துர்கா ஸ்டாலின் தமிழ்நாட்டில் உள்ள கோயில்கள் மட்டும் அல்லாது திருப்பதி உள்ளிட்டி நாட்டின் பிற மாநிலங்களில் உள்ள கோயில்களுக்கும் சென்று வழிபட்டு வருகிறார். ஏற்கனவே மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின்போது அவருடன் செல்லும் துர்கா ஸ்டாலின் அப்படியே அங்கிருக்கும் கோயில்களில் வழிபடுவது வழக்கம். தற்போது மு.க.ஸ்டாலின் முதல்வர் பதவி ஏற்ற பிறகும் துர்கா ஸ்டாலின் அனைத்து கோயில்களுக்கும் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் கேரளாவில் மிகப் பிரபலமான குருவாயூரில் உள்ள கிருஷ்ணர் கோயிலுக்கு துர்கா ஸ்டாலின் வெள்ளிக்கிழமையன்று திடீர் விசிட் செய்தார்.

சாமி தரிசனம் செய்தார்
குரூவாயூர் கோயிலுக்கு மாலை நேர தீபாராதனை சமயத்தில் சென்று கிருஷ்ணரை வழிபட்டார். அவரை தேவசம்போர்டு தலைவர் மோகன் தாஸ், நிர்வாக குழு உறுப்பினர் கே.வி.ஷாஜி ஆகியோர் வரவேற்றனர். கோயிலை சுற்றி உள்ள 'சுற்று விளக்கு'களில் தீபங்கள் ஏற்றப்பட்டன. இதற்கான தொகை 40 ஆயிரம் ரூபாய் ஏற்கனவே துர்கா ஸ்டாலின் தரப்பில் செலுத்தப்பட்டிருந்தது.

எடைக்கு எடை நேர்த்திக்கடன்
சுற்று விளக்கு நேர்த்திக் கடனை தொடர்ந்து துலாபாரம் நேர்த்திக் கடன் நடத்திய துர்கா ஸ்டாலின் அதற்கான தொகை 9 ஆயிரத்து 200 ரூபாயை கட்டணத்தை கோயில் வளாகத்தில் இருந்த தேவசம் போர்டு கவுண்ட்டரில் செலுத்தினார். அவர் துலாபாரத்தில் ஏறி அமர்ந்த பின்னர் எடைக்கு எடையைக சர்க்கரை, கோயில் மணிக்கிணற்றில் உள்ள தீர்த்தம் ஆகியவற்றை நேர்த்திக்கடனாக செலுத்தினார். முதலமைச்சரின் மனைவி இவ்வளவு எளிமையாக வந்து சாமி தரிசனம் செய்து நேர்த்திக் கடன் செலுத்தியதை அங்கிருந்த கேரள மக்கள் மிகவும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications