திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கேரளாவில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில்.. கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு.. என்னென்ன தெரியுமா?

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் சனிக்கிழமை போடப்பட்டு இருந்த முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா தொற்றுநோயின் தீவிரம் குறைந்து வருவதாக அந்த மாநில சுகாதாரத்துறை வீணா ஜார்ஜ் கூறியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் வேகம் எடுக்கிறது. குறிப்பாக நமது அண்டை மாநிலமான கேரளா கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வர முடியாமல் தவித்து வருகிறது.

 ஷாக்கடிக்கும் டீன் ஏஜ்.. 3 ஆண்டுகளில் 1.65 லட்சம் பேர் தற்கொலை.. 4வது இடத்தில் தமிழ்நாடு ஷாக்கடிக்கும் டீன் ஏஜ்.. 3 ஆண்டுகளில் 1.65 லட்சம் பேர் தற்கொலை.. 4வது இடத்தில் தமிழ்நாடு

கேரளாவில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக தினமும் 20,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. அதிக அளவு தடுப்பூசிகள் போட்டு வந்த போதிலும் கேரளாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை.

கேரளாவில் அதிக பாதிப்பு

கேரளாவில் அதிக பாதிப்பு

நேற்று மட்டும் கேரளாவில் 23,676 கொரோனா பாதிப்புகள் பதிவாகி இருக்கின்றன. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34,49,149 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 148 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 17,103 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக கேரளாவில் அதிக கொரோனா பாதிப்புகள் உள்ளன.

சனிக்கிழமை ஊரடங்கு நீக்கம்

சனிக்கிழமை ஊரடங்கு நீக்கம்

தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து ஆறு பேர் கொண்ட குழுவை மத்திய அரசு கேரளாவுக்கு அனுப்பியுள்ளது. அந்த குழுவினர் தொற்று பரவல் குறித்து மாநில அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். கேரளாவில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் எந்த வித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு போடப்பட்டு இருந்தது. கொரோனா அதிகரித்து வரும் நிலையில் இனிமேல் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் வார இறுதி ஊரடங்கு நீடிக்கும் என்றும் சனிக்கிழமை ஊரடங்கு நீக்கப்படுவதாகவும் கேரள அரசு அறிவித்துள்ளது.

 கடைகள் திறக்கும் நேரம் என்ன?

கடைகள் திறக்கும் நேரம் என்ன?

மாநிலத்தில் கொரோனா தொற்றுநோயின் தீவிரம் குறைந்து வருவதாகக் கூறிய கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் புதன்கிழமை, சனிக்கிழமை லாக்டவுன் இருக்காது என்றும் மாநிலத்தில் உள்ள கடைகள் திங்கள் முதல் சனி வரை வாரத்தில் ஆறு நாட்கள் காலை 7 மணி முதல் 9 மணி வரை திறந்திருக்கும் என்று கூறியுள்ளார்.சுதந்திர தின கொண்டாட்டங்கள் மற்றும் ஓணம் பண்டிகையை கருத்தில் கொண்டு ஆகஸ்ட் 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் கேரளாவில் ஊரடங்கு இருக்காது என்றும் திருமணம் மற்றும் இறுதிச் சடங்குகளுக்கு 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் ஜார்ஜ் கூறினார்.

 கொரோனா பாசிட்டிவ் விகிதம்

கொரோனா பாசிட்டிவ் விகிதம்

கேரளாவில் கொரோனா பாசிட்டிவ் விகிதத்தை(டிபி ஆர்) வைத்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதாவது 5% க்குக் கீழே உள்ள டி.பி.ஆர் உள்ள பகுதிகள் ஏ எனவும், 5 முதல் 10% வரை டி.பி.ஆர் உள்ள பகுதிகள் பி எனவும், 10 முதல் 15% வரை டி.பி.ஆர் உள்ள பகுதிகள் சி எனவும், 15% மேல் டிபிஆர் கொண்ட பகுதிகள் டி எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. கேரளாவில் நேற்று பாதிப்பு அதிகமாக இருந்தாலும் அங்கு கொரோனா பாசிட்டிவ் விகிதம் 12 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைந்துள்ளதாகவும், ஒரு சில இடங்களில் மட்டும் பாசிட்டிவ் விகிதம் 15%-க்கும் மேல் உள்ளதாகவும் அந்த மாநில சுகாதாரத்துறை கூறியுளளது.

English summary
The entire curfew imposed on Saturday has been canceled as the corona is on the rise in Kerala. Veena George, the state health minister, said the severity of the corona epidemic in Kerala was declining
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X