பல்லை காட்டிய வந்தே பாரத்.. இதுதான் புல்லட் ரயிலுக்கு சமமா? ஆசையாக போன பயணிகளுக்கு அதிர்ச்சி!
திருவனந்தபுரம்: நேற்று கேரளாவில் தொடங்கி வைக்கப்பட்ட முதல் வந்தே பாரத் ரயிலின் வேகம் குறித்து கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
சமீபத்தில் சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார். சென்னை முதல் பெங்களூர் வரை ஏற்கனவே வந்தே பாரத் சேவை உள்ளது. முதல்முறையாக தமிழ்நாடு உள்ளேயே வந்தே பாரத் ரயில் சென்னை - கோவை இடையே திறக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 6 மணி நேரத்தில் கோவை செல்ல முடியும்.
இந்த ரயில் மக்கள் இடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. சென்னை - கோவை இடையே பயணிகள் அதிக அளவில் பயணிக்கும் நிலையில் வந்தே பாரத் ரயில் சேவைக்கான டிக்கெட் வரிசையாக இந்த மாதம் முழுக்க பல சீட்களுக்கு புக் செய்யப்பட்டு உள்ளது.

அந்த அளவிற்கு மக்கள் இந்த ரயிலில் செல்ல தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த ரயில்கள் புதன்கிழமை தவிர வாரத்தின் பிற 6 நாட்களும் இருமார்க்கமாக இயங்க உள்ளது. சராசரியாக மணிக்கு 110 கி.மீ வேகத்தில் ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் 8 ஏசி பெட்டிகளுடன் இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. மொத்தம் 536 இருக்கைகள் இருக்கும். அதன்பிறகு பெட்டிகளின் எண்ணிக்கை 16 ஆக அதிகரிக்கப்படும்.
திருவனந்தபுரம் ரயில்:அதேபோல் நேற்று கேரளாவில் முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரயில் திருவனந்தபுரத்திலிருந்து காசர்கோடு வரை இயக்கப்படும்.
ஆனால் இந்த ரயில் திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு செல்ல 8 மணி நேரம் 5 நிமிடங்கள் ஆகும். முதல் நாள் பயணத்தில் இது சரியாக 8 மணி நேரம் 5 நிமிடங்கள் வரை எடுத்துக்கொண்டது. கிட்டத்தட்ட 68 கிமீ வேகத்தில்தான் இந்த ரயில் பயணம் செய்தது.
இந்த ரயிலில் சென்றால் விரைவாக சென்றுவிட முடியும் என்று நினைத்த பயணிகள் பலரும் பயண நேரத்தால் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
முன்னதாக சோதனை ஓட்டத்திலேயே இந்த ரயில் தாமதமாக வந்தது குறிப்பிடத்தக்கது. திருவனந்தபுரம் - கன்னூர் வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டத்திலேயே 10 நிமிடம் தாமதமாக வந்துள்ளது. திருவனந்தபுரம் - கன்னூர் வந்தே பாரத் ரயில் 7. 20 மணி நேரத்தில் திருவனந்தபுரம் ஸ்டேஷனில் இருந்து கன்னூர் வந்தே பாரத் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளது .
இந்த ரயில் வெறும் 70 கிமீ வேகத்தில்தான் பயணம் செய்துள்ளது. கன்னூரில் பிற்பகல் 2.10க்கு தொடங்கி இரவு 9.30 மணிக்குத்தான் இந்த ரயில் திருவானந்தபுரம் வந்துள்ளது.
சராசரியாக இரண்டு இடங்களுக்கு இடையே மேற்கொள்ளப்படும் ரயில் பயணத்தை விட இது 10 நிமிடம் அதிகம் ஆகும். வந்தே பாரத் ரயில் இப்படி முதல் நாள் சோதனை ஓட்டத்திலேயே 10 நிமிடம் தாமதமாக வந்துள்ளது.
அதன்பின் நேற்று முதல் பயணத்திலும் ரயில் தாமதமாக சென்றது.

புல்லட் ரயிலா?:வந்தே பாரத் ரயில் 130 கிமீ வேகத்தில் செல்லும் என்றாலும், இதன் சராசரி வேகம் 84 கிமீதான். மத்திய பிரதேசத்தை சேர்ந்த சந்திரசேகர் கார் என்பவர் தாக்கல் செய்த ஆர்டிஐ மனுவில் இந்த பதில் ரயில்வே துறை மூலம் அளிக்கப்பட்டு உள்ளது.
வந்தே பாரத் ரயிலால் 130 கிமீ வேகத்தில் செல்ல முடியும் என்றாலும் தண்டவாளங்கள் தன்மையால் இந்த வேகத்தை எட்ட முடியவில்லை என்று கூறப்படுகிறது.
ஆனாலும் கேரளாவில் இது வெறும் 68 - 70 கிமீ வேகத்தில் சென்றது அதிர்ச்சி அளித்துள்ளது.
ரயில் வேகம் குறைவு ஏன்?:முன்னதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் இந்த ரயில் பற்றி அளித்த பேட்டியில், நம்முடைய புல்லட் ரயில் கனவு நினைவாகி இருக்கிறது. 2016ஆம் ஆண்டு சீனா சென்றிருந்தபோது புல்லட் ரயிலில் சென்றேன். அதேபோல் நம்முடைய நாட்டிலும் புல்லட் ரயில் இயக்கப்படுமா என்று கனவு எனக்கு இருந்தது, தற்போது அந்த கனவு நினைவாகி இருக்கிறது. வந்தே பாரத் ரயில் நான் பாஜக எம்எல்ஏவாக இருக்கும் சமயத்தில் விடப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என்று வானதி சீனிவாசன் குறிப்பிட்டு இருந்தார்.
வந்தே பாரத் ரயிலை அவர் புல்லட் ரயிலுடன் ஒப்பிட்டு இருக்கிறார். ஆனால் புல்லட் ரயிலுடன் ஒப்பிடுகையில் வந்தே பாரத் ரயில்.. மிகவும் மெதுவான ரயில் என்றுதான் கூற வேண்டும். ஏனென்றால்..
வந்தே பாரத் ரயில் 90 கிமீ வேகத்தில்தான் செல்கிறது. 495 km தூரத்தை 5 மணி நேரம் 50 நிமிடத்தில் கடக்கிறது. இது அதிகபட்சமாக ஒரு சில இடங்களில் 130 கிமீ தூரத்தை கூட தொட்டாலும் அதேஹ் வேகத்தில் செல்வது இல்லை. சராசரி வேகம் என்னவோ 90 கிமீ / 1 மணி நேரம்தான்.

ஆனால் சீனாவின் ஷாங்காய் புல்லட் ரயிலை எடுத்துக்கொண்டால் அது 431 கிமீ வேகத்தை அதிகபட்சம் அடையும். சாராரியாக் 245 கிமீ வேகத்தில் செல்லும்.
நாம் ஜப்பானுடன் இணைந்து புல்லட் ரயிலை அமைப்பதாக இருந்தது. இந்த ஜப்பான் புல்லட் ர்யில் அதிகபட்சமாக 500 கிமீ வேகத்தில் செல்லும். சராசரியாக 450 கிமீ வேகத்தில் செல்லும். சின்கன்ஸென் புல்லட் ரயில்கள் சராசரியாகவே 480 கிமீ வேகத்தை அடையும்.
ரஷ்யாவின் அதிவேக ரயில்கள் 220 கிமீ வேகத்தை சராசரியாக தொட கூடியவை.
இந்த ரயில்களின் வேகத்தில் வந்தே பாரத் துளி கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications