Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொடைக்கானல் ஊட்டி போல் சூப்பர் இடம்.. பொங்கலுக்கு தேனி மேகமலை போனால் மிஸ் பண்ண கூடாத இடம்

Subscribe to Oneindia Tamil

தேனி: பொங்கலுக்கு தேனி மாவட்டம் மேகமலைக்கு போனால் அங்குள்ள அருவியை மிஸ் பண்ணிவிடாதீர்கள்- தற்போது தண்ணீர் அற்புதமாக பாய்ந்து ஓடுகிறது. சுற்றிலும் தண்ணீரால் அணைகளுக்கு நடுவே தேயிலை தோட்டங்களில், மேகங்கள் தவழும் மேகமலை பொங்கலுக்கு போக மிகச்சிறந்த இடம். கிளைமேட் அருமையாக இருக்கிறது..

பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இன்று முதல் ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. பலருக்கும் சுற்றுலா செல்ல ஆசையாக இருக்கும். அப்படி சுற்றுலா போக விரும்புவோர் கொடைக்கானல், ஊட்டியைத்தான் பெரும்பாலும் விரும்புவார்கள். அது வேண்டாம் என்று நினைப்போர் கேரள மாநிலத்தில் உள்ள மூணாறு, வாகமன், தேக்கடியை விரும்புவார்கள். தமிழ்நாட்டில் என்றால் ஏற்காடும், மேகமலையும் விருப்பமான இடமாக இருக்கும். இதேபோல் கர்நாடகாவில் என்றால் கூர்க் பலருக்கும் பிடிக்கும்.

 If you go to Theni Megamalai for Pongal instead of ooty kodaikanal, it is a place not to be missed

தேனி சுற்றுலாதளங்கள்: இதில் நாம் பார்க்க போவது தேனி மற்றும் மேகமலையை பற்றி தான். ஒரே மாவட்டத்திற்கு வந்து சென்றால் இத்தனை சுற்றுலா தளங்களுக்கு செல்ல முடியும் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். அப்படியான மாவட்டம் தான் தேனி.. தேனி மாவட்டத்திற்கு வந்துதான் கொடைக்கானலே போக முடியும். அதேபோல் மூணாறு , வாகமன், தேக்கடி, குரங்கணி, டாப் ஸ்டேசன், கொழுக்குமலை, மேகமலை, சுருளி, சின்ன சுருளி, வைகை அணை, சோத்துப்பாறை, கும்பக்கரை, வீரப்ப அய்யனார் கோவில், வீரபாண்டி கௌமாரியம்மன், குச்சனூர் சனீஸ்வரன் கோவில், உத்தமபாளையம் ராகு கோவில், இடுக்கி அணை, ராமக்கல் மேடு, போடி மெட்டு, 18ம் கல்வாய் தொட்டிப்பாலம் என சொல்லிக்கொண்டே போகலாம் .. அவ்வளவு இடங்களுக்கும் வழி தேனி மாவட்டம் தான்..

மேகமலை அருவி: சரி விஷயத்திற்கு வருவோம்.. நாம் சொல்ல வந்தது தேனி மாவட்டம் மேகமலை பற்றித்தான்.. தேனி மாவட்டம் சின்னமனூர் நகரத்திலிருந்து கூப்பிடும் தூரத்தில் அமைந்துள்ள மலைவாசல் தளம் ஆகும். சின்னமனூரில் இருந்து ( 34 கிலோ மீட்டர் தூரத்தில் ) ஒரு மணி நேரத்தில் மேகமலை போகலாம். மேகமலை இயற்கை காதலர்களுக்கு மிகவும் பிடித்த இடம். இயற்கை இயற்கையாக அப்படியே உள்ள பகுதி என்றால் அதுமேகமலை தான். மேகங்கள் தவழும் மலை என்பதால் இதனை மேகமலை என்று அழைக்கிறார்கள். சுற்றுலா தளம் என்று சொல்லி விடவே முடியாது. பெரிய மரங்கள், பசுமையான நிலப்பரப்புடன், மிக அழகான சாய்ந்த நிலப்பரப்பில் உள்ள தேயிலை, காபி பயிர்த் தோட்டங்கள் இருக்கின்றன, உயர்ந்த மலைகளுக்கு நடுவில் மிக ஆழமான பள்ளத்தில், அழகிய ஏரிப்பகுதியுடன் காணப்படுகிறது. நாலைந்து மலைச்சிகரங்கள் நடுவே உள்ள ஒரு பள்ளத்தாக்கு தான் மேகமலை..

மேகமலையில் என்னவெல்லாம் சுற்றி பார்க்கலாம்: இங்கு நிறைய அணைகள் உள்ளன. ஹைவேவிஸ் மேலணை, கீழணை, தூவாணம் அணை, மணலாறு அணை, வெள்ளியாறு அணை, இரவங்கலாறு அணை என ஐந்து அணைகள் உள்ளன. . உட்பிரையர் என்ற தனியார் நிறுவனத்தாரின் தேயிலைத் தோட்டங்கள் தான் மேகமலையில் பெரும்பாலும் இருக்கின்றன. . அவர்களின் தேயிலைத் தொழிற்சாலைக்குச் சென்று டீ தூள் தயாரிக்கும் முறை பற்றித் தெரிந்துகொள்ளலாம். அதற்கு தனிக் கட்டணம் வசூலிப்பார்கள். ஹைவேவிஸ் அணையைக் கடந்து சென்றால் 'இறைச்சல் பாறை' என்ற அழகான அருவி இருக்கும். இதுதான் செய்தியின் ஆரம்பத்தில் சொன்ன தவறவிடவே கூடாத இடம் ஆகும். எப்போதுமே தண்ணீர் இங்கு பாய்ந்தோடும். மேகமலையில் கொடைக்கானலுக்கு நிகரான கிளைமேட் இருக்கும்..மேகங்கள் உங்களை முத்தமிட்டு செல்வதை பார்த்து மெய்சிலிர்த்துபோவீர்கள்.

மேகமலை பேருந்து வசதி: அதேநேரம் சபரிமலை சீசன் என்பதால் யானைகள் எல்லாம் மேகமலையை ஒட்டிய வனப்பகுதியில் இரவு நேரங்களில் மற்றும் மாலை வேளைகளில் முகாமிட்டிருக்கும். எனவே கவனமாக செல்ல வேண்டும். மேகமலைக்குச் செல்ல சின்னமனூரிலிருந்து காலை, மாலை இரு நேரங்களில் பேருந்து வசதி இருக்கிறது. சுற்றி பார்க்க பேருந்துகளில் செல்வது சரியாக இருக்காது. சொந்த வாகனத்தில் அல்லது வாடகை வாகனத்தில் செல்லலாம். மேகமலை அடிவாரப் பகுதியான தென்பழஞ்சியில் அமைந்துள்ள வனத்துறையின் சோதனைச் சாவடியில் காலை 6 மணிக்கு மேல் மற்றும் மாலை 6 மணிக்குள் மட்டுமே சோதனைச் சாவடியை கடந்து செல்ல அனுமதிப்பார்கள். மேகமலையில் தனியார் தங்கும் விடுதிகள் மிக குறைவாகவே உள்ளன. இயற்கையை இயற்கையாக மட்டும் பார்க்க விரும்புவோருக்கு அருமையான இடம் மேகமலை..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+