’பணம்..’ தலைக்கு மேல் தொங்கும் கத்தி! எடப்பாடி சிறைக்கு செல்வது உறுதி! அடித்து சொல்லும் தர்மலிங்கம்!

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி : அதிமுகவில் தற்போது பல்வேறு பொறுப்புகளில் நியமிக்கப்பட்டு இருப்பவர்கள் எடப்பாடி பழனிசாமி கொடுத்த பணத்திற்காக அவர் பின்னால் சென்றுள்ளதாகவும், டெண்டர் முறைகேடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி சிறைக்குச் செல்வது உறுதியென ஓ.பன்னீர்செல்வம் சார்பில் நெல்லை மாவட்ட செயலாளராக அறிவித்துள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் அதிரடியாக கூறியுள்ளார்.

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து, தற்போது இறுதிக் கட்டத்தை எட்டி உள்ள நிலையில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி கட்சி பொது குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மேலும் பொதுக்குழு கூட்டத்தில் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கட்சி ஒருங்கிணைப்பாளரும் பொருளாளராக இருந்தவருமான ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிரடியாக நீக்கப்பட்டனர்.

அதிமுகவில் மோதல்

அதிமுகவில் மோதல்

தன்னை நீக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிச்சாமிக்கு இல்லை எனவும் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முக்கிய நிர்வாகிகளை தான் நீக்குவதாக ஓ பன்னீர்செல்வம் அடுத்தடுத்து இரு அறிக்கைகள் வெளியிட்டார். இதேபோல எடப்பாடி தரப்பும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் குறித்த பட்டியலை தயாரித்து அவர்களை அடுத்தடுத்து கட்சியிலிருந்து நீக்கியது. தற்போது இந்த விவகாரம் நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் பரிசீலனையில் உள்ள நிலையில் உண்மையில் எடப்பாடி பழனிச்சாமி கையே அதிமுகவில் தற்போது ஓங்கி இருக்கிறது.

அதிரடி அரசியல்

அதிரடி அரசியல்

இந்நிலையில் கடந்த சில நாட்களாக அமைதியாக இருந்த ஓபிஎஸ், கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து அதிரடி அரசியலை கையில் எடுத்துள்ளார். ஓபிஎஸ் குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்ததோடு தனது தரப்பில் மாவட்ட செயலாளர்கள் தலைமைக் கழக நிர்வாகிகள் என அடுத்தடுத்து அதிரடி காட்டி வருகிறார்.

நிர்வாகிகள் நியமனம்

நிர்வாகிகள் நியமனம்

அந்த வகையில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராக வைத்தியலிங்கம் நியமிக்கப்பட்டதோடு இருவது மாவட்ட செயலாளர்கள் மற்றும் வழக்கறிஞர் அணி உள்ளிட்ட அணிகளுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர் எதற்காக ஓ பன்னீர்செல்வம் இப்படி அதிரடியாக நிர்வாகிகளின் நியமித்து வருகிறார் என தெரியாமல் அதிமுக நிர்வாகிகளும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது.

திருநெல்வேலி செயலாளர்கள்

திருநெல்வேலி செயலாளர்கள்

இந்நிலையில் ஓபிஎஸ் வெலியிட்ட பட்டியலில் திருநெல்வேலி மாநகர் அதிமுக மாவட்ட செயலாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக தர்மலிங்கம், புறநகர் மாவட்ட செயலாளராக முன்னாள் அரசு வழக்கறிஞர் சிவலிங்கமுத்து ஆகியோரை நியமித்துள்ளனர். இதனையடுத்து மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள தர்மலிங்கம், சிவலிங்கமுத்து ஆகியோர் இன்று திருநெல்வேலி வந்து தொண்டர்களை சந்தித்தனர், அப்போது பேசிய தர்மலிங்கம் ஜெயலலிதா காலத்திலிருந்து அதிமுகவில் முக்கிய பொறுப்புகளின் பணியாற்றிய நிலையில் தற்போது இருக்கும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமி கொடுத்த பணத்திற்காக அதிமுகவில் உள்ளனர் எணார்,

 சிறை செல்வது உறுதி

சிறை செல்வது உறுதி

மேலும், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்களால் அதிமுக தொண்டர்களுக்கு ஒரு பலனும் இல்லை. கோடிக்கணக்கில் செலவு செய்து தொண்டர்களைப் போல எடப்பாடி கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாகவும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தோல்வியடைவதற்கு என்ன காரணம் என கேள்வி எழுப்பினார். மேலும் நெடுஞ்சாலை துறையில் டென்டரில் மோசடி நடந்திருப்பதாக எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு வரும் எனவும் அந்த வழக்கு காரணமாக அவர் சிறை செல்வது உறுதி. அப்போது ஓபிஎஸ் தலைமையின் கீழ் அதிமுக வரும், முழுமையான அதிமுகவை ஓபிஎஸ் விரைவில் கைப்பற்றுவார்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+