For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அசந்துட்டாரே அப்பாவு.. "இளவட்டக்கல்"லை அலேக்கா தூக்கிய பெண்கள்.. மலைத்து பார்த்த ஆண்கள்.. வாவ் நெல்லை

நெல்லை அருகே நடந்த பொங்கல் நிகழ்ச்சியில் இளவட்டக்கல் தூக்கி சாதனை நிகழ்த்தப்பட்டது

Google Oneindia Tamil News

நெல்லை: திருநெல்வேலி மாவட்டம் வடலிவிளையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான இளவட்டக்கல் தூக்கும் போட்டியில், பல இளைஞர்கள் கலந்து கொண்டு சாதனை நிகழ்த்தினர்... அதேபோல, ஆண்களுக்கு போட்டியாக பெண்களும் 40 கிலோ எடை கொண்ட உரலை தூக்கி போட்டு தங்களது ஆர்வத்தை வெளிப்படுத்தினர்.

பெரும்பாலான கிராமங்களில் உருண்டையான வடிவில் இளவட்டக்கல் இருப்பதை பார்த்திருப்போம்... ஊருக்குப் பொதுவான இடத்தில் இந்த கல் கிடக்கும்.. பல ஊர்களில் அந்த கல் மண்ணில் பாதி புதையுண்டு காணப்படும்..

ஆனால், இந்த கல்லுக்கென்று ஒரு பண்பாட்டு பின்னணியும் உண்டு.. பண்டைய காலத்தில் இந்த கல்லை தூக்கினால் தான் பெண் தரப்படும் என்ற மரபு இருந்தது..

 பச்சை நிற சட்டை, நெற்றியில் விபூதி . கண்களுக்கு கூலிங்கிளாஸுடன்.. பொங்கல் கொண்டாடிய விஜயகாந்த் பச்சை நிற சட்டை, நெற்றியில் விபூதி . கண்களுக்கு கூலிங்கிளாஸுடன்.. பொங்கல் கொண்டாடிய விஜயகாந்த்

 நடிகை ராதா

நடிகை ராதா

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த முதல்மரியாதை படத்தில், இந்த இளவட்டக்கல்லை ஒரு காட்சி அமைக்கப்பட்டிருக்கும். "இளவட்டக்கல்லை" தூக்கிவிட்டால் உன்னை கட்டிக் கொள்கிறேன் என்று ராதா விளையாட்டாக சவால்விட, அந்தக் கல்லை கடந்து போகும் ஒவ்வொரு முறையும் சிவாஜி கணேசன் அதைத் தூக்குவதற்கு முயல்வார்.. கடைசியில் முழுமையாக அந்த கல்லை தூக்கிவிடுவார்... பெரும்பாலும் இன்றைய தலைமுறைக்கு இளவட்டக்கல் குறித்த விஷயங்கள் தெரியாமலேயே போய்க்கொண்டிருக்கிறது..

முதல்மரியாதை

முதல்மரியாதை

ஆனால், நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே வடலிவிளை கிராமத்தில் வருடாவருடம் இளவட்டக்கல் தூக்கும் போட்டிகள் பிரத்யேகமாக நடத்தப்படுவது மகிழ்ச்சியான விஷயம்.. ஒவ்வொரு முறை பொங்கல் விழாவின்போதும் தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டுகளில் ஒன்றான இளவட்டக்கல் தூக்கும் போட்டிகள் நடக்கும்.. அந்தவகையில் இந்த வருடமும் நடைபெற்றதில், ஆண்களை தவிர பெண்களும் கலந்து கொண்டு அசத்திவிட்டார்கள்.. இந்த போட்டியை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார். இந்த இளவட்டக்கல் விளையாட்டு போட்டியில் பல இளைஞர்கள் கலந்து கொண்டனர்.. அனைவருமே இளவட்ட கற்களை தூக்கி வலம் வந்து அபாரமான கைதட்டலை பெற்றனர்..

உரல்கள்

உரல்கள்

ஆண்களுக்கு போட்டியாக பெண்களும் 40 கிலோ எடை கொண்ட உரலை தூக்கி போட்டு தங்களது ஆர்வத்தை வெளிப்படுத்தினர்... உரல்களை அதிகமுறை தூக்கிபோட்ட பெண்களுக்கு சிறப்புப்பரிசும் வழங்கப்பட்டது.. இதில், பல இளைஞர்கள் உரலை ஒருகையால் தலைக்கு மேல் நீண்டநேரம் தூக்கி நிறுத்திவைக்கும் சாதனையையும் நிகழ்த்தி காட்டினார்கள்.. பெண்கள் உரல் தூக்கும் போட்டியில் முதல்பரிசு ராஜகுமாரியும், 2-ம் பரிசு தங்க புஷ்பம் ஆகியோர் பெற்றனர். இளவட்ட கல் 129 கிலோ கல்லை தூக்கி சாதனை படைத்த செல்லப்பாண்டி என்பவருக்கு முதல்பரிசும் அருண் வெங்கடேஷ் என்பவருக்கு இரண்டாம் பரிசும் வழங்கப்பட்டது.

 திருமணமான பெண்

திருமணமான பெண்

குறிப்பாக, திருமணமான பெண்கள் பங்கேற்ற உரல் தூக்கும் போட்டியில் ராஜகுமாரி ஒரு நிமிடத்தில் 11 முறையும், தங்கபுஷ்பம் 7 முறையும் தூக்கி முதல் 2 இடங்களை வென்றனர்... இந்த பெண்கள் வெற்றி பெற்றதையடுத்து, சுற்றியிருந்த கூட்டம், கைகளை தட்டி கரகோஷம் எழுப்பியது.. பின்னர், உரலை ஒற்றை கையால் தூக்கி நிறுத்தும் போட்டியில் அஜய் 30.59 வினாடிகளும், பாலகிருஷ்ணன் 29.15 வினாடிகளும் நிறுத்தி முதல் 2 இடங்களை பிடித்தனர்... போட்டியை ஆர்வத்துடன் ரசித்த அப்பாவு, வெற்றி பெற்ற அனைவரையும் உற்சாகத்துடன் பாராட்டி, பரிசுகளை வழங்கி ஊக்குவித்தார்..

அசந்துட்டாரு

அசந்துட்டாரு

முன்னதாக, அப்பாவு நிகழ்ச்சியில் பேசும்போது, "தமிழக விளையாட்டுகளில் கபடி, சிலம்பாட்டம் போல, மண்ணின் விளையாட்டுகள் தமிழக அரசு விளையாட்டாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறதோ, அதுபோல் இந்த இளவட்ட கல் தூக்குகின்ற விளையாட்டு போட்டியையும் நிச்சயமாக நம்முடைய தமிழக அரசு விளையாட்டிலே சேர்ப்பதற்கு நான் ஏற்பாடு செய்வேன்.. இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி கவனத்திற்கும் கொண்டு செல்வேன்" என்றார்.

English summary
Thirunelveli Radhapuram youngsters lifted the small stone and Speaker appavu appreciates
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X