என்ன இது? கொத்தி போட்ட அம்மிக்கல் மாதிரி.. இதுதான் நிலவு முகமா? தெறிக்கும் சந்திரயான் மீம்ஸ்
சென்னை: சந்திரயான் 3 குறித்த பதிவுகள் இணைய உலகை ஆக்கிரமித்து உள்ள நிலையில், நெட்டிசன்கள் தங்கள் பாணியில் மீம்ஸ்களாக பதிவிட்டு காமெடியாக ரசிக்கும் படியாகவும் சந்திரயான் குறித்து பகிர்ந்து வருகிறார்கள். அவற்றில் சில மீம்ஸ்களை இங்கே பார்க்கலாம்.
நிலவின் தென் துருவத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் (இஸ்ரோ) சந்திரயான் 3 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது. கடந்த மாதம் 14 ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணுக்கு அனுப்பிய இந்த விண்கலம், புவி வட்டப்பாதையில் இருந்து வெளியேறி நிலவின் சுற்றுவட்டப்பாதைக்கு சென்று பிறகு நிலவின் தென் துருவத்தில் கால் பதித்துள்ளது.

40 நாட்கள் பயணத்திற்கு பிறகு எந்த ஒரு நாடும் இதுவரை கால் பதிக்காத நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 விண்கலம் ஆய்வு மேற்கொள்ள உள்ளது. ஒட்டு மொத்த தேசமே இஸ்ரோவின் இந்த சாதானையை கொண்டாடிக் கொண்டு இருக்கிறது. நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர் கால் பதித்த செய்தி அறிந்ததுமே நாடு முழுக்க கொண்டாட்டங்கள் களை கட்டின. இப்படி நாடு முழுவதும் மக்கள் மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார்கள்.
சமூக வலைத்தளங்களிலும் சந்திரயான் குறித்த பதிவுகளே ஆக்கிரமித்து உள்ளன. மீம்ஸ்களையும் போட்டு இணையத்தை நெட்டிசன்கள் கலகலபாக்கி வருகிறார்கள். சும்மமாவே, புகுந்து விளையாடும் நெட்டிசன்ஸ்,.. இஸ்ரோ செய்து இருக்கும் இந்த சாதனையை எளிதில் விட்டு விடுவார்களா ? என்ன.. தங்களுக்கே உரிய பாணியில் ஜாலியாக பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் சில மீம்ஸ்களை இங்கே தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்க்கலாம்.
1.வடிவேலுவின் சூனா பானா பட காமெடி காட்சியை வைத்து நெட்டிசன் ஒருவர் வெளியிட்டு இருக்கும் மீம்சில், சந்திரயான் 3 நல்லபடியா இறக்கியாச்சு.. கிளம்பு போ..போ.. ஜெய்ஹிந்த் என சொல்லிவிட்டு எல்லாருக்கும் மிட்டாய் கொடு" என மீம்ஸ் போட்டு இருக்கிறார். கடந்த 2 தினங்களாக சந்திரயான் 3 குறித்த பதிவுகளாக நிரம்பியுள்ள நிலையில், இவ்வாறு மீம்ஸ் போட்டு உள்ளார்.

2. "பெண்ணே நிலவு முகம் என்று யாராவது உன்னை வர்ணித்தால் மயங்கிவிடாதே.. சந்திரயான் 3 எடுத்த நிலவின் 'க்ளோசப்' புகைப்படத்தை பார்".. என்று மீம்ஸ் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

3. நிலவை கண்டதில்லை.. உன் முகத்தை நிலவாக காண்கிறேன் அன்பே...
டேய்.. ரொம்ப உருட்டாதடா.. நிலவு போட்டாவ நேற்று தான் டிவி நியூசில் பார்த்தேன்...
கொத்தி போட்ட அம்மிக்கல் மாதிரி இருக்குது.. அப்படியா இருக்கு என் முகம்.. என்ற மீம்சும் இணையத்தில் அதிகம் பரவி வருகிறது.

நிலவை நாம் பூமியில் இருந்து பார்ப்பதற்கும் உண்மையில் அதன் சந்திரயான் எடுத்த படத்திற்கும் இடையே உள்ள வேறுபாட்டை சொல்லும் விதமாக இந்த மீம்ஸை போட்டுள்ளனர்.
4. மற்றொரு மீம்ஸ் ஒன்றில், ஆடி முடிஞ்சு ஆவணியில் எல்லோரையும் சந்திரயான் டாப்ல கொண்டு வந்துடுவான்.. சினிமா வசனத்தை பொருத்தி சந்திரயானின் வெற்றியை ரசிக்க வைக்கும்படியாக மீம்ஸாக கிரியேட் செய்துள்ளனர்.
5. சந்திரயான் 1,2,3 ஆகிய மூன்று விண்கலன்களிலுமே தமிழ்நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் முக்கிய பங்கு வகித்ததை சுட்டிக்காட்டியும் நெட்டிசன்கள் மீம்ஸ் ஒன்றை பகிர்ந்து வருகின்றனர். இதுவும் இணையத்தில் வைரலாக பரவிக் கொண்டு இருக்கிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications