சென்னை டூ குமரி வரை.. அடுத்த 2 மணி நேரம் விட்டு விளாசப் போகுது மழை.. 12 மாவட்டங்களுக்கு அலர்ட்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, சேலம், தர்மபுரி, குமரி, தென்காசியில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்களில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மாலை நேரங்களில் அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையில் கடந்த இரு நாட்களாக மாலை முதல் இரவு வரை இடி, மின்னலுடன் கனமழை விட்டு விளாசி வருகிறது. இதனால் தாழ்வான சாலைகளில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்றும் தலைநகர் சென்னை உள்பட தமிழகம் முழுக்க 12 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, சேலம், தர்மபுரி, தென்காசி, குமரி மற்றும் நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
