அண்ணா நகரில் 50 மி.மீ மழை! சென்னையை சுத்துப்போட்ட மேகங்கள்! இன்னைக்கும் சம்பவம் இருக்கு! - வெதர்மேன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இருப்பினும் கடந்த ஓரிரு நாட்களாக சென்னை உட்பட வட கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று சென்னை அண்ணா நகரில் 50 மி.மீ அளவுக்கு மழை பதிவாகியிருக்கிறது. இன்றும் இதேபோல மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார்.

இது குறித்து தனது x பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது, "சென்னையில் அதிகபட்சமாக நேற்று அண்ணா நகரில் 50.1 மி.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது. இது சென்னைக்கு சிறந்த நாள். அதேபோல இன்றும் காற்றின் போக்கு இருக்கிறது. எனவே இன்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

rain chennai

இன்று இரவும் சென்னையில் மழை பெய்யும். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. இருப்பினும் எந்த நேரத்தில் மழை பெய்யும் என்பதை கணிப்பதில் சிரமம் இருக்கிறது" என்று வெதர்மேன் தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக நேற்று வெளியாகியிருந்த வானிலை அறிவிப்பில், "24-08-2026: கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், மதுரை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

25-08-2026: கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

26-08-2026 முதல் 29-08-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னை வானிலை

இன்று (24-08-2026) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+