கரையை கடந்த முரசு புயல்.. இன்று எங்கெல்லாம் மழை கொட்டும்? அடுத்த ஒரு வாரத்துக்கான வானிலை அப்டேட்
சென்னை: நீலகிரி மாவட்டத்தில் இன்று இடி, மின்னலோடு கனமழை கொட்டும் என்றும், சென்னையில் இரு நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. முரசு புயலால் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூரில் 8 செமீ மழை கொட்டியுள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியான வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- நேற்று மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய தீவிர புயல் "முரசு" வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று அதிகாலை 03.30 மணி முதல் காலை 05.30 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரையை நெல்லூருக்கும் நர்சாப்பூருக்கும் இடையே ஒங்கோலுக்கு மிக அருகில் கரையை கடந்தது.

நீலகிரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
இது மேலும் வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று மதியத்திற்குள் வலுவிழந்து புயலாகவும், மேலும் இன்று நள்ளிரவுக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுவிழக்கக்கூடும். சுமார் 0.9 கிமீ உயரத்தில் தென் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார் 1.5 கிமீ உயரம் வரை லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார் 0.9 கிமீ உயரத்தில் கடலோர கர்நாடக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் இன்று நீலகிரி மாவட்டத்தில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோவை, தேனியில் கனமழைக்கு வாய்ப்பு
நாளை தேனி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
5 ஆம் தேதி மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், இதர தென் தமிழகம் மற்றும் வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
7 ஆம் தேதி வரை மழை
6 ஆம் தேதி மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், இதர தென் தமிழகம் மற்றும் வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
7 ஆம் தேதி மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், இதர தென் தமிழகம் மற்றும் வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் எப்படி கிளைமேட்?
சென்னையில் இன்று (03-11-2026) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னையில் நாளை (04-11-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்: 03-11-2026: வட தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 04-11-2026 முதல் 07-11-2026 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள்: 03-11-2026: சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
ஆந்திர கடலோரப்பகுதிகள் & மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள்:
03-11-2026 நண்பகல்: சூறாவளிக்காற்று மணிக்கு 85 முதல் 95 கிலோ மீட்டர்
வேகத்திலும் இடையிடையே 105 கிலோ மீட்டர் வேகத்திலும், நள்ளிரவு காற்றின் வேகம் குறைந்து மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும் அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும்.
04-11-2026: சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 05-11-2026 முதல் 07-11-2026 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை. மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.. என்று கூறப்பட்டுள்ளது.




Click it and Unblock the Notifications
