Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வளிமண்டல காற்றலை.. சென்னையில் இன்றும் மழை கொட்டும்.. 27 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் குமரிக்கடல் பகுதிகளிலிருந்து வடக்கு கேரள கடலோரப்பகுதிகள் வரை ஒரு கிழக்கு வளிமண்டல காற்றலை (Easterly waves) நிலவுவதால் சென்னையில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும். இதேபோன்று 27 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை தொடரும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விடைபெற்ற போதிலும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று முன் தினம் முதல் தமிழகத்தில் மழை பெய்ய தொடங்கி இருக்கிறது. சென்னை உள்பட தமிழகத்தின் வட மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இன்றும் சென்னையில் விட்டு விட்டு மழை பெய்தது.

Easterly Waves to Bring Rain to Chennai Showers Likely Across Tamil Nadu Until 27th

இன்று எங்கெல்லாம் மழைக்கு சான்ஸ்

மழை குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
குமரிக்கடல் பகுதிகளிலிருந்து வடக்கு கேரள கடலோரப்பகுதிகள் வரை ஒரு கிழக்கு வளிமண்டல காற்றலை நிலவுகிறது. இதனால் இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 27 ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 28-01-2026 முதல் 31-01-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னையில் மழை எப்படி?

சென்னையில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 26 முதல் 27° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 முதல் 23* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

சென்னையில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 முதல் 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்: 25-01-2026: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

26-01-2026 முதல் 29-01-2026 வரை: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்: 25-01-2026: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 26-01-2026 முதல் 29-01-2026 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை.

மழை அளவு:

வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), மரக்காணம் (விழுப்புரம்) தலா 4 செமீ மழை பெய்துள்ளது.
Z 15 சோழிங்கநல்லூர் (W 197) (சென்னை), Z 15 உத்தண்டி (W 200) (சென்னை), சத்யபாமா பல்கலைக்கழகம் ARG (செங்கல்பட்டு), ஊத்து (திருநெல்வேலி), காரைக்கால் (காரைக்கால்). நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்), நாலுமுக்கு (திருநெல்வேலி), நியூ சென்னை டவுன்ஷிப் AWS (செங்கல்பட்டு), மகாபலிபுரம் AWS (செங்கல்பட்டு) தலா 3 செமீ மழை பெய்துள்ளது.

Z 15 ஈஞ்சம்பாக்கம் (W 194) (சென்னை), Z 14 மேடவாக்கம் (W 191) (சென்னை), தரங்கம்பாடி (மயிலாடுதுறை), VIT சென்னை AWS (செங்கல்பட்டு). காக்காச்சி (திருநெல்வேலி), தென்பரநாடு (திருச்சிராப்பள்ளி), காரைக்கால் AWS (காரைக்கால்), Z 14 பள்ளிக்கரணை (W 189) (சென்னை), கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), Z 15 ஒக்கியம் தொரைப்பாக்கம் (W 195) (சென்னை) தலா 2 செமீ மழை பெய்துள்ளது. என்று கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+