ரெடியா இருங்க.. மழை கொட்டித் தீர்க்கப்போகுது.. மருத்துவப் பணியாளர்களை அலர்ட் செய்த சுகாதாரத்துறை!
சென்னை: தமிழ்நாட்டில் மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், மருத்துவப் பணியாளர்கள் தயார் நிலையில் இருக்குமாறு சுகாதாரத்துறை அலர்ட் செய்துள்ளது.
தமிழ்நாட்டில் கோடை காலம் காரணமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் கடந்த ஒரு சில நாட்களாக கோடை மழை பொழிந்து வருகிறது. தமிழகத்தின் பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், அடுத்த சில நாட்களுக்கு மிக கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் 21ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிக மிக பலத்த மழை பெய்யும் என்பதால் கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது. தமிழகத்திற்கு மே 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது என வானிலை மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை வெளுத்து வாங்கும் நிலையில், சுகாதார மையங்களில் 24 மணி நேரம் மின்சாரம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். போதிய எரிபொருள் உடன் ஜெனரேட்டர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும், மருத்துவப் பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிக முதல் அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்துள்ள நிலையில் அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்களும் மருத்துவ பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வநாயகம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், தேவையான மருத்துவ பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும். அவரச கால மருத்துவ குழுக்கள், நிவாரண மையங்களில் மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
தேவையான அளவு கிருமி நாசினி மருந்துகள், நிவாரண முகாம்களில் உள்ளவர்களுக்கு சுத்தமான குடிநீர், சுகாதாரமான உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் அவரச கால மருந்துகளைத் தேவையான அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும்.
மேலும், சுகாதார மையங்களில் 24 மணி நேரம் மின்சாரம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். போதிய எரிபொருள் உடன் ஜெனரேட்டர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் இதனை அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
Chennai Rain: சென்னையில் இன்று விட்டு விளாசப் போகுது! இனி ஒரு வாரத்துக்கு கனமழை தான்.. வானிலை மையம் எச்சரிக்கை! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
ஏற்கனவே அவிஞ்சு போய் கிடக்கு.. மேற்கொண்டு வெறியைக் கிளப்பும் எல்-நினோ! ஆகஸ்ட் வரை வெயில் தானாம்! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications