1 மணி நேரத்தில்.. வடசென்னையில் கொட்டித்தீர்த்த கனமழை.. தண்டையார்பேட்டையில் 7.3 செ.மீ. மழை பதிவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை தண்டையார்பேட்டையில் வெறும் 1 மணி நேரத்தில் 7.3 செ.மீ. அளவுக்கு கனமழை கொட்டி தீர்த்துள்ளது. இன்று மாலை 6 மணி முதல் 7 மணி வரை நிலவரப்படி கொரோனேஷன் நகரில் 7 செ.மீ. மழையும், திருவொற்றியூரில் 6.9 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது.

வட தமிழக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கடலோராஅந்திர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. கர்நாடகா கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இருந்து குமரிக் கடல் பகுதிகள் வரை, ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. லட்சத்தீவின் வடக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது.

Heavy Rain

லட்சத்தீவின் வடக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியில் இருந்து தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை, கேரளா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் சென்னையில் இன்று மாலை முதல் பல்வேறு பகுதிகளில் இடி. மின்னலுடன் கனமழை பெய்து வருகிறத்ஜு. குறிப்பாக வடசென்னையின் திருவொற்றியூர், ராயபுரம், தண்டையார்பேட்டை, எண்ணூர், பாரிமுனை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி இருக்கிறது. இதனால் வடசென்னை சாலைகளின் பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் தேங்கி இருக்கிறது./

அதிலும் மாலை 6 மணி முதல் 7 மணி வரை ஒரு மணி நேரத்தில் தண்டையார்பேட்டையில் 7.3 செ.மீ. மழையும், திருவொற்றியூரில் 6.9 செ.மீ. மழையும் பதிவாகி இருக்கிறது. வழக்கமாக 10 செ.மீ மழை பெய்தால், அது மேக வெடிப்பாக கணக்கிடப்படும். இந்த மழை வேகவெடிப்புக்கான அளவை எட்டாவிட்டாலும், வடசென்னையில் ஒரு மணி நேரத்தில் சுமார் 7.5 செ.மீ. மழை பதிவாகி இருப்பது மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+