மீண்டும் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. இந்த முறை தமிழ்நாட்டுக்கு.. இருக்கு கச்சேரி!
சென்னை: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் நவம்பர் 2வது வாரத்தில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழ்நாடு, ஆந்திரா கடற்கரையை நோக்கி நகரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் தேதி தொடங்கியது. பருவமழை தொடங்குவதற்கு முன்பே இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, வங்கக்கடலில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகின.

இதில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்றது. டானா என பெயரிடப்பட்ட அந்த புயல், ஒடிசா அருகே கரையைக் கடந்தது. இதையடுத்து மழைப் பொழிவு சற்று ஓய்ந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் வடகிழக்கு பருவமழை வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் நவம்பர் மாதத்திற்கான வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி நவம்பர் மாதத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 123 சதவீதம் அதிகமாக இருக்கும் என கணித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளாவில் நவம்பர் மாதத்தில் இயல்பை விட கூடுதலாக மழை பெய்யும். நவம்பர் இரண்டாவது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு உட்பட தென் மாநிலங்களில் நவம்பரில் 123 சதவீதம் அதிக மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளில் இந்த ஆண்டு இயல்பை விட அதிக மழை நவம்பர் மாதத்தில் பெய்யும் எனவும் இந்திய மாநில மையம் தெரிவித்துள்ளது. நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் தமிழகத்தில் இயல்பான அளவு மழை பெய்யும் என்றும் ஒரு சில இடங்களில் இயல்புக்கு குறைவான அளவில் மழை பதிவாகும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஆனால் நவம்பர் இரண்டாவது வாரத்தில் படிப்படியாக மழையின் அளவு அதிகரித்து இயல்பை விட அதிக மழைப்பொழிவு பதிவாகும் எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது இயல்பை விட 23 சதவீதம் அதிகமாக மழைப் பொழிவு இருக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நவம்பர் முதல் வார இறுதியில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழ்நாடு, ஆந்திரா கடற்கரையை நோக்கி நகர வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் நவம்பர் இரண்டாவது வாரத்தில் தமிழகத்திற்கு அதிக மழைப் பொழிவு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications