வங்கக்கடலில் நடந்த மாற்றம்.. சென்னை மற்றும் வட மாவட்டங்களில் இன்னைக்கு சம்பவம் இருக்கு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. இந்நிலையில் தற்போது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதாகவும், இதன் காரணமாக சென்னை தொடங்கி வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

COMK வெளியிட்டுள்ள அறிவிப்பில், "நேற்று இரண்டு நிகழ்வுகள் நடந்தன.. வடமேற்கு இந்தியாவில் இருந்து பருவமழை பின்வாங்கத் தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அறிவித்தது. மேலும், வடக்கு அந்தமான் கடலில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (LPA) உருவாகியுள்ளதாகவும் அறிவித்தது.

rain

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த ஓரிரு நாட்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, புதன்கிழமை வாக்கில் ஆந்திரப் பிரதேசம் / ஒடிசா கடற்கரையை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் ஏற்படும் மேக குவிதல், இந்தியாவில் மீண்டும் பரவலான இடியுடன் கூடிய மழையைக் கொண்டுவரும்.

கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களின் சில பகுதிகள் அதிக பாதிப்புள்ள பகுதிகளாக இருக்கலாம். நேற்றைய பதிவில், சென்னையில் பரவலான இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று குறிப்பிட்டிருந்தேன். நேற்று ஏமாற்றமாக இருந்தபோதிலும், இன்றோ நாளையோ இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல, தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டிருக்கும் x பதிவில், "கடந்த 2024ம் ஆண்டு'ஃபெங்கல்' (Fengal) புயலுக்குப் பிறகு கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் இன்று மிக அதிகனமழை பதிவாகியுள்ளது.

இன்றும் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மிகத் தீவிரமான மழைப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது. திருச்சி, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், வேலூர், கள்ளக்குறிச்சி, ஈரோடு மற்றும் டெல்டா பகுதிகள் உட்பட கிட்டத்தட்ட அனைத்து உள்மாவட்டங்களிலும் மழை பெய்யும். வழக்கம் போல தென் தமிழகத்தில் மதுரை மற்றும் சிவகங்கை பகுதிகளிலும் மழை இருக்கும்.

பெங்களூரைப் பொறுத்தவரை, இன்று அங்கு மிக அதிகனமழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் மழை பெய்தாலும், துரதிர்ஷ்டவசமாக கடந்த இரண்டு நாட்களாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் (KTCC) மழையை தவறவிட்டிருக்கின்றன. எனவே இன்று இப்பகுதிகளிலும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று தெரிவித்திருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+