Elnino: 150 ஆண்டுக்கு பிறகு! சென்னையில் அதிக மழை! 2027-ல் கொங்குவில் தண்ணீர் பஞ்சம்! வெதர்மேன் பகீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சூப்பர் எல் நினோ ஆண்டில் சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்படுமா? என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கியுள்ளார். மேலும் இந்த ஆண்டு எங்கெல்லாம் மழை என்பது குறித்து அவர் கூறிய கருத்துகளையும் பார்க்கலாம்.

இதுகுறித்து அவர் சன் நியூஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: சென்னையை பொருத்தவரையில் 22 நாட்களாக மழையில்லை. கடைசியாக செப்டம்பர் 21 ஆம் தேதி ஒரு மழை பெய்திருந்தது. நேற்று காலை முதலே ஒரு சில பகுதிகளில் மழை, ஒரு சில பகுதிகளில் வெயில் என்பதை போல் டிரென்ட்டை பார்க்கிறோம்.

weather rain

இன்று வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது. கடலூர் மாவட்டங்களில் மழை பெய்தால் அது வடகிழக்கு பருவமழை என்பதை அதிகாரப்பூர்வமாக வானிலை மையம் அறிவிக்கும். இது காற்றழுத்த பகுதியோ, இல்லை புயல் சார்ந்த மழையோ கிடையாது. அப்பப்ப ஒரு மழை வரும். இரவு அல்லது அதிகாலை நேரங்களில் அதிக மழை இருக்கும்.

நல்ல மழை

நேற்று முன் தினம் இரவு முதலே தூத்துக்குடி, நாகப்பட்டினம், ராமநாதபுரம், காரைக்கால் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை படிப்படியாக தொடங்கிவிட்டது. சென்னையிலும் தாம்பரம், அண்ணாநகர், கூடுவாஞ்சேரி என ஆங்காங்கே மழை பெய்துள்ளது.

விட்டு விட்டு மழை

திடீரென வெயில் இருக்கும், திடீரென இருட்டிக் கொண்டு மழை பெய்யும். ஆழ்ந்த மேகங்கள் இல்லாததால் விட்டுவிட்டு மழை பெய்யும். வரும் நாட்களிலும் இந்த டிரென்ட் தொடரும். மழையின் தாக்கமும் அதிகரிக்கும். வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக குறையும்.

சூப்பர் எல் நினோ

இந்த ஆண்டு சூப்பர் எல் நினோ ஆண்டு. 2015, 1997 ஆகிய எல் நினோ ஆண்டுகளில் தமிழகத்தில் நல்ல மழை பதிவாகியுள்ளது. 1997 ஆம் ஆண்டுதான் தமிழகத்திற்கு அதிகபட்சமான மழை பெய்துள்ளது. அதாவது சராசரி 440 மி.மீ. முதல் 450 மி.மீ. மழை பெய்யும். 1997ஆம் ஆண்டு 810 மி.மீ. மழை பெய்துள்ளது.

அதிகபட்ச மழை

2015 ஆம் ஆண்டு 670 மி.மீ. மழை பெய்துள்ளது. கடந்த எல் நினோ ஆண்டுகளில் அதிகபட்ச மழை இருந்ததை பார்த்திருக்கிறோம். ஆனால் இநத் ஆண்டு இது சூப்பர் எல் நினோவையும் தாண்டி ஹிஸ்ட்டாரிக் எல்நினோ! சூப்பர் எல் நினோ என்பது கடலின் வெப்பநிலை சராசரியை விட 2 டிகிரிக்கு மேல் இருப்பதைதான் சொல்கிறோம். ஆனால் இந்த ஆண்டு கிட்டதட்ட 3 டிகிரிக்கு மேல் எதிர்பார்க்கிறோம்.

150 ஆண்டுக்கு முன்னர்

இதற்கு முன்னர் இந்த சூப்பர் எல்நினோ எப்போது வந்திருக்கிறது என்றால் 150 ஆண்டுகளுக்கு முன்பு! அதாவது 1877 ஆம் ஆண்டு! அப்போதும் சராசரியை விட அதிக மழை இருந்தது. அக்டோபர் மாதம், முதல் 15 நாட்களில் பெரிய அளவிலான மழை இல்லை. ஆனால் அடுத்த 15 நாட்களுக்கு நல்ல மழை பெய்யும். கடலோர மாவட்டங்கள், சென்னை, உள்மாவட்டங்களிலும் நல்ல மழை இருக்கும்.

மழைக்கு வாய்ப்பு

எனவே இந்த முறையும் சராசரியை விட அதிக அளவு மழை இருப்பதற்கான வாய்ப்பிருப்பதாகவே பார்க்கிறோம். இது சூப்பர் எல் நினோவை விட ஒரு படி மேலே!எல் நினோ ஆண்டுகளில் தமிழகத்திற்கு வடகிழக்கு பருவமழை நன்றாகவே பெய்துள்ளது. அதிலும் அரிதாக 1982 ஆம் ஆண்டு சென்னையில் சூப்பர் எல்நினோவின் போது மழை குறைவாகவே கிடைத்துள்ளது. இதுவரை எல்நினோ ஆண்டுகளில் 98 சதவீதம் அதிக மழைபொழிவுதான் கிடைத்திருக்கிறது.

வெள்ளமாகுமா?

அதற்காக எல்லா மழையும் வெள்ளம் வந்துவிடும் என்பதில்லை. எல் நினோவில் அடுத்தடுத்து கேப்பே இல்லாமல் சுழற்சிகள் வந்துக் கொண்டே இருக்கும். பெரிய புயல்கள் வங்கக் கடலில் வராது, அதே நேரத்தில் அரபிக் கடலில் புயல்கள் ஏற்படும். இதனால் காற்று ஈர்ப்பு ஏற்பட்டு தமிழகத்தின் உள்மாவட்டங்களுக்கு நல்ல மழை கிடைக்கும்.

வறண்ட நிலை

இப்போது எங்கு பார்த்தாலும் வறண்ட நிலையே இருக்கிறது. எனவே எங்கு மழை பெய்தாலும் அதை பூமி உறிஞ்சிக் கொள்ளும். நீர் நிலைகளும் வறண்டிருக்கின்றன. எனவே மழை பெய்யட்டும். 1877 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை படுதோல்வி! வறட்சியால் நிறைய பேர் உயிரிழந்தனர். ஆனால் வடகிழக்கு பருவமழை கை கொடுத்தது.

அடுத்த ஆண்டு தண்ணீர் பஞ்சம்

எல் நினோ ஆண்டுகளில் தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் அதிகபட்ச மழை பெய்யும். உள் மாவட்டங்களை பொருத்தமட்டில் குன்னூர், கொடைக்கானல், மாஞ்சோலை போன்ற மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அதிக மழை பெய்யும். அரபிக் கடலில் புயல்கள் உருவாகும் போது கிழக்கு நோக்கி வரும் காற்றால் ஈரப்பதம் ஏற்பட்டு மழை கொடுக்கும். சென்னை உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் தேங்கும். 2027 ஆம் ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதை எதிர்கொள்ள நமக்கு தண்ணீர் தேவை. கொங்கு மாவட்டங்களில் அடுத்த ஆண்டு தண்ணீர் பற்றாக்குறை இருக்கும். கடலோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்து நீர் நிலைகள் நிரம்பும். இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+