ரெடியா? சென்னையிலிருந்து அப்படியே தாம்பரம், ஆவடி வரை! 2 மணி நேரத்திற்கு கனமழை! வெதர்மேன் வார்னிங்
சென்னை: இன்னும் 1 முதல் 2 மணி நேரத்திற்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பிச்சு உதற போகிறது என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சூடுபிடித்துள்ளது. இதனால் பரவலாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தென் கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்தம் உருவாகியுள்ளது. அது இன்று ஆழ்ந்த காற்றழுத்தமாக மாறியது.

இதையடுத்து அடுத்த 48 மணி நேரத்திற்கு பிறகு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பின்னர் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று முதல் டிசம்பர் முதல் வாரம் வரை மழை தீவிரமாக இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை ஆகிய மாவட்டங்களுக்கு அடுத்த ஒரு மணி நேரம் முதல் 2 மணி நேரத்திற்கு மழை ஊத்த போகிறது. சென்னை டூ தாம்பரம் டூ ஆவடி வரை அதிக கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளார்.

அதன்படி சென்னையில் முகப்பேர், அண்ணாநகர், அரும்பாக்கம், அம்பத்தூர், நொளம்பூர், கோயம்பேடு, வடபழனி, வேளச்சேரி, மடிப்பாக்கம், மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தாம்பரம், முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இன்று முதல் டிசம்பர் முதல் வாரம் வரை மழையின் தீவிரம் அதிகமாக இருக்கும்.
டிசம்பர் 2 ஆம் தேதி புயல் உருவாக போகிறது. இது தமிழகத்திற்கானதா அல்லது ஆந்திராவுக்கு செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இது தமிழகத்திற்கானது என சொல்லப்படுகிறது. இன்னும் ஓரிரு நாட்கள் போனால்தான் எதுவாக இருந்தாலும் சொல்ல முடியும்.
தெற்கு அந்தமான் அருகே வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது தீவிரமடைந்து புயலாக மாறும். இந்த புயலுக்கு மிக்ஜாம் அல்லது மிக்ஜாங் புயல் என பெயரிடப்படுகிறது. குமரிக் கடல் பகுதியில் காற்று சுழற்சியும் அரபிக் கடல் பகுதியின் அருகே புயல் சின்னமும் குஜராத்தில் நிலப்பரப்பில் காற்று சுழற்சியும் உருவானது.
இதனால் நிலக்கோடு பகுதிகளில் இருந்தும் வங்கக் கடலில் இருந்து மழையை தரும் காற்று தமிழகத்தின் நடுவே செல்கிறது. இதனால் வடதமிழகம், ஆந்திர எல்லையோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பரவலாக நேற்று முன் தினமும் நேற்றும் ஆங்காங்கே கனமழை கொட்டியது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications