தனுசு ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. அடுத்தடுத்து அதிர்ஷ்டம்.. கையெழுத்து விஷயத்தில் ரொம்ப கவனம்
வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை, மார்கழி 21 ஆம் தேதி முதல் மார்கழி 27 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

மார்கழி மாதம் பீடை மாதம் என்பார்கள். ஆனால், அப்படியல்ல மிகவும் உத்தமமான மாதமாகும். மார்கழி மாதத்தில் தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் அகல்விளக்கு ஏற்றி வருவது உங்களுக்கு அற்புதமான நன்மைகளைத் தரும். அந்த வகையில், ஜனவரி 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை, மார்கழி 21 ஆம் தேதி முதல் மார்கழி 27 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். மேலதிகாரிகள் விஷயத்தில் அதிக கவனமாக இருக்க வேண்டும். சட்டத்திற்குப் புறம்பானவர்களின் தொடர்புகளை தவிர்த்துக் கொள்வது நன்மை பயக்கும். தான் உண்டு, தன்னுடைய வேலை உண்டு என்றிருப்பது நல்லது. வண்டி, வாகனத்தில் செல்லும்போது ஸ்டன்டுகளை செய்யாமல் விதிமுறைகளைக் கடைப்பிடித்துச் செல்வது நல்லது.
முன்னேற்றம்
தொழில், வியாபாரம், உத்தியோகம், படிப்பு என எல்லா விஷயங்களிலும் அபிவிருத்தியும், முன்னேற்றமும் ஏற்படும். எடுத்த காரியங்களில் வெற்றி ஏற்படும். வியாபாரத்தில் அனுகூலம் ஏற்படும். அரசுத் துறை, அரசியல்வாதிகள் மிக கவனமாக இருப்பது நல்லது. வியாபாரிகள் ஜிஎஸ்டி, இன்கம் டாக்ஸ் போன்ற விஷயங்களை சரியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
தடை நீங்கும்
சுபகாரியத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். வேற்று மொழி மனிதர்களால் அதிகளவில் ஆதாயம் ஏற்படும். இடமாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம், படிப்பு மாற்றம் என அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றம் ஏற்படும். தனிப்பட்ட முறையில் உங்களுடைய செல்வாக்கு கூடும். பூமி சம்பந்தப்பட்ட சிக்கல்கள், பாதிப்புகள் அனைத்தும் நீங்கும். இழுபறியாக இருக்கும் அனைத்து விஷயங்களிலும் அடுத்தடுத்து முன்னேற்றம் உண்டாகும்.
ஆவணங்களில் கவனம்
ஆவணங்கள் விஷயத்தில் மிகுந்த கவனம் தேவை. கையெழுத்துப் போடுவதற்கு முன்பு ஒருமுறைக்கு இருமுறை படித்துப் பார்த்துவிட்டு போடுவது நல்லது. கடன் வாங்கும் சமயத்தில் ஆவணங்களின் நகலை நீங்கள் வாங்கி வைத்துக் கொள்வது நல்லது. வங்கிகள், வெளியிடங்கள் என எந்தப் பகுதியில் கடன் வாங்கினாலும் ஆவணங்களின் நகலை நீங்கள் வாங்கி வைத்துக் கொள்வது எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும்.
ஆரோக்கியம், வழிபாடு
நரம்பு, தலைவலி, கழுத்து, ஹார்மோன் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அதிகளவில் பாதிப்புகள் வரும் வாய்ப்புள்ளதால் மிகுந்த கவனம் தேவை. டெல்லியில் வசிக்கும் தனுசு ராசிக்காரர்கள் காற்று மாசில் சிக்கும் வாய்ப்புள்ளதால் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பெருமாள், தாயார், அனுமன் வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும். பெருமாள் கோயில்களுக்கு வெண்மலர்கள், வெண்சாமந்தி கொடுப்பது உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: மிதுன ராசியினர் ஜொலிக்கப் போறீங்க.. ஆசைப்பட்டதெல்லாம் நிறைவேறும் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: கன்னி ராசிக்கு மே 14க்கு பிறகு மாறும் வாழ்க்கை.. தொட்டதெல்லாம் துலங்கும் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: ரிஷப ராசிக்கு பொற்காலம் ஆரம்பம்.. சனியின் அருளால் கொட்டும் அதிர்ஷ்டம் -
தமிழ் புத்தாண்டு பலன்: கடக ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம்.. நல்லவை நடக்கும் காலம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது












Click it and Unblock the Notifications