Rasi Palan This Week: தனுசு ராசியினரின் பிரச்சனைகளுக்கு எண்டு கார்டு.. வாயில்தான் கண்டமே ரொம்ப கவனம்
வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை, மார்கழி 28 ஆம் தேதி முதல் தை 4 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

குரு பகவான் மிதுன ராசியில் வக்கிரமாக இருக்கிறார். கேது சிம்ம ராசியில் சஞ்சாரம் செய்கிறார். சந்திரன் தனது பயணத்தை துலாம் ராசியில் இருந்து தொடங்குகிறார். 4 கிரக சேர்க்கை தனுசு ராசியில் ஏற்படுகிறது. ராகு கும்ப ராசியில் இருக்கிறார். ஜனவரி 12 ஆம் தேதி சுக்கிரன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்குள் பிரவேஷம் செய்கிறார். ஜனவரி 14 ஆம் தேதி சூரியன் தனுசு ராசியில் இருந்து நகர்ந்து மகர ராசிக்குள் நுழைகிறார். ஜனவரி 15 ஆம் தேதி தை மாதம் பிறக்கவுள்ளது.
அந்த வகையில், ஜனவரி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை, மார்கழி 28 ஆம் தேதி முதல் தை 4 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
தனுசு
தனுசு ராசி அல்லது லக்கினக்காரர்களுக்கு இந்த வாரமே உங்களுக்கான வாரமாக இருக்கும். பிரச்சனைகள் எல்லாம் முடிவுக்கு வரும். மேலதிகாரிகளுடனான பிரச்சனை, புரொஜெக்ட் பிரச்சனை, மன அழுத்தம், மனவலிமை குன்றுவது என அனைத்துப் பிரச்சனைகளும் நீங்கும். புதிய பல் பொருத்துவீர்கள், பழைய கண்ணாடிகளை மாற்றுவீர்கள். கண்களில் வந்த பிரச்சனைகள் நீங்கும்.
குரு பார்வை
வாழ்க்கைத் துணைக்கு ஆரோக்கிய குறைபாடு ஏற்படும். அடிவயிறு சார்ந்த பாதிப்புகள் வந்து போகும். ராசி லக்கினத்தில் புதனும், சந்திரனும் இணைந்திருக்கின்றனர். குரு பார்வையில் அமர்ந்திருப்பதால் பாசிட்டிவான நிலைமை அமையும். நல்ல மண வாழ்க்கை அமையும். திருமண வாழ்க்கை அமையும். பிரிந்து போன தம்பதிகள் ஒன்று சேரும் வாய்ப்புள்ளது.
ஆரோக்கியம்
காது, மூக்கு, தொண்டை பாதிப்புகளில் கவனம் தேவை. வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய காலகட்டம். இழுபறியாக இருந்த நிலைமைகள் எல்லாம் படிப்படியாக மாறும். குடும்பத்தில் மற்றவர்களின் தலையீட்டை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களின் குடும்ப விஷயத்தில் உங்களுடைய தலையீடு இல்லாமல் இருப்பது நல்லது.
பேச்சில் கவனம்
அர்த்தாஷ்டம சனி இருப்பதால் உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பது நன்மையை ஏற்படுத்தும். வாக்குவாதத்தில் ஈடுபட்டால் தேவையில்லாத மன கஷ்டம் ஏற்படும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. குடும்பத்திலும் வெளிவட்டாரத்திலும் வெள்ளைக் கொடி காட்டுவது நல்லது. கணவன் மனைவி வாக்குவாதம், சண்டை சச்சரவுகளைத் தவிர்த்து நிதானத்தைக் கடைப்பிடித்து பேசுவது நல்லது.
தடைகள் நீங்கும்
உத்தியோகம், தொழில், வியாபாரம், படிப்பு ரீதியாக இருந்து வந்த தடைகள் எல்லாம் தவிடு பொடியாகும். பேச்சினைக் குறைத்துக் கொள்வது நல்லது. பேச்சினால் குடும்பத்துக்குள் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. கடன்கள் கேட்டால் கிடைக்கும். கடன்களை அடைக்கும் வாய்ப்பு ஏற்படும். நிறைய மன கஷ்டங்கள் நீங்கும். பிரச்சனைகள் ஓயும். பெரிய மாற்றங்கள் வந்து சேரும்.
வழிபாடு
வாழ்க்கையில் அடுத்தடுத்து மாற்றங்களைக் கொடுத்துக் கொண்டே இருக்கும் நல்ல அமைப்பு ஏற்படும். மண வாழ்க்கை, குடும்ப வாழ்க்கையில் சிறிது கவனமாக இருக்க வேண்டும். பொருளாதாரம் ரீதியாக 90 சதவீதம் நன்றாக இருக்கும். சந்தோஷம் ரீதியாக 75 சதவீதம் நன்றாக இருக்கும். பெருமாள் வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தைத் தரும்.
-
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: மிதுன ராசியினர் ஜொலிக்கப் போறீங்க.. ஆசைப்பட்டதெல்லாம் நிறைவேறும் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: ரிஷப ராசிக்கு பொற்காலம் ஆரம்பம்.. சனியின் அருளால் கொட்டும் அதிர்ஷ்டம் -
தமிழ் புத்தாண்டு பலன்: கடக ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம்.. நல்லவை நடக்கும் காலம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்!












Click it and Unblock the Notifications